எச்சரிக்கை..! (A Warning to GIRLS)பெண்ணே!
இந்த கலியுலகில்
சிறிது கவனம் தேவை,
காதல் என்னும்
உயிர்க்கொல்லியிடம்.

சித்திரம் என வர்ணிப்பான்,
மயங்கி விடாதே.

ரத்தம் சொட்ட
உன் பெயரெழுதி வருவான்,
கலங்கி விடாதே.

கவிதைகளால்
உன்னைக் குளிரவைப்பான்,
அந்த நிலவை
உன் முகம் என்பான்,
உன் பார்வையை
தென்றல் என்பான்,
கவனம் சிதறி விடாதே.

உனக்காக
உயிரையும் கொடுப்பதாய் உரைப்பான்
உருகிவிடாதே.

ஒற்றை ரோஜா,
இரண்டு சாக்லேட்,
மூன்று கடிதங்களுக்கு
சுயம் மறந்து விடாதே,
உன்னை இழந்து விடாதே.

தந்திரம் மிக்கவன் ஆண்மகன்
மிகத் தந்திரம் மிக்கவன் ஆண்மகன்.

காதலர் தினத்தில்
களை கட்டுபவன்,
அன்னையர் தினத்தையும்
மகளிர் தினத்தையும் மறந்த,
கயவன் அவனேன்பதை
நீ மறந்து விடாதே.

இந்த கலியுக கண்ணன்கள்
உன் துயில் உரிக்கும்
துச்சாதனன்களே அன்றி,
ஏக பத்தினி விரதன்களாய்
ஒருவனுமில்லை.

இறுதியாய்
ஒரு எச்சரிக்கை.!

வார்த்தைகளால் உன்னை
வசியப்படுத்துபவன்,
பசுந்தோல் போர்த்திய புலி
என்பதை
உணர்ந்து கொள்,
விரைவில் விழித்துக்கொள்/கொல்.

2 comments:

jill_online said...

ம்ம்ம் நீங்க சொல்றது அவளுங்க தலைல ஏறாது .... # பெண் ரசிகைகளை குறிவைத்து எழுதுன மாறி இருக்கு ....

Anonymous said...

Fantastic.

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?