வேண்டுதல் ( ...A Prayer )


அண்ணன் பரீட்சையில்
பாசாக வேண்டும்
... வேண்டிக்கொள்கிறாள் தங்கை.!

அம்மாவுக்கு உடல்நிலை
சரியாக வேண்டும்
... வேண்டிக்கொள்கிறான் மகன்.!

மகளுக்கு
நல்ல மாப்பிள்ளை
அமைய வேண்டும்
... வேண்டிக்கொள்கிறார் தந்தை.!

கணவனுக்கு புரோமோஷன்
விரைவில் வரவேண்டும்
... வேண்டிக்கொள்கிறாள் மனைவி.!

நானும் வேண்டிக்கொண்டேன்
... இறைவனிடம்.!

எனக்காக வேண்டிக்கொள்ள
... ஒரு ஜீவன் வேண்டுமென்று.!

No comments: