சென்னையில் ஒரு கிரி'விழா (Giri book publishing function)


சென்னையில் ஒரு கிரி'விழா
ஒரு புத்தக வெளியீட்டு திருவிழா..

வெள்ளைத்தாள்களில் விளக்கேற்றி வைக்கும்
செங்கைப் பதிப்பகத்தாரின் திரியாக இன்று கிரி...

திரு கிரி ராமசுப்ரமணியன் எழுதிய கார்பரேட் கனவுகள் என்னும் புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஹோட்டல் ஸ்வாகத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது.

விழாவின் சில சிறப்பு நிகழ்வுகளின் பதிவுகள் இங்கே..

ட்விட்டர் DP யில் இளமையான தோற்றத்தில் இருக்கும் கிரி அவர்கள் நேரில் இன்னும் சிறப்பாக ஒரு அனுபவஸ்தருக்கே உரிய, ஒரு எழுத்தாளருக்கே உரிய வகையில் தோற்றத்தில், வந்தார் அனைவரையும் வரவேற்றார். இருந்தாலும் முகத்தில் சிறு பதற்றம்.

விழா சரியாக 6 மணிக்கு துவங்கியது..

செங்கைப் பதிப்பகத்தாரின் சார்பில் அனைவரும் வரவேற்கப் பட்டனர்.

புத்தகத்தை வெளியிடுவதற்கு முன்
ஐயா திரு. சிலம்பொலி செல்லப்பனார் விழாவை தலைமை ஏற்று பேசினார். அவர் பேச்சில் அறையெங்கும் சிலம்போலித்தது, தமிழ் எதிரொலித்தது என்றே சொல்லலாம். அனுபவத்தை சிறப்பாக பகிர்ந்து கொண்டு அனைவரையும் வரவேற்று கிரி அவர்களை வாழ்த்தி அமர்ந்தார்.

புத்தக அறிமுகமாக திரு என்.சொக்கன் அவர்கள் உரையாற்றினார்,
மீண்டுமொருமுறை தன அழுத்தமான வரிகளால் என்.சொக்கன் நம்.சொக்கனாக மனதில் குடியேறினார்.

பின்னர் பேசிய பட்டுக்கோட்டையார், விழாவிற்கு லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக பேசி, கிரி அவர்களை வாழ்த்தி அமர்ந்தார்.

சிறப்பு விருந்தினர்களும் இந்த புத்தகம் வெளி வர காரணமாக இருந்த அனைவரும் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர்.

அதிலும் சிறப்பாக கிரி அவர்கள் தன் தாயாருக்கு பொன்னாடை போர்த்தி நன்றி கூறுகையில், அவர் தாயார் முகத்தின் கண்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை, ஈன்ற பொழுதினை விட பெரிதுவர்ந்திருப்பார், நிச்சயமாக.

பின்னர் விழாவில் சிறப்பம்சமாக சிலம்பொலியார் புத்தகத்தை வெளியிட பட்டுக்கோட்டை பிரபாகர் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

பின்னர் கிரி அவர்களை வாழ்த்திப் பேசிய அருணோதயம் திரு. அருணன், பல்லுப்போனால் சொல்லு போச்சு என்பார்கள், ஆனால் மனிதருக்கு தில்லு போகவில்லை. அதிரடியாக பேசி அவரை வாழ்த்திச்சென்றார்.

லேணா தமிழ்வாணன், லேணா வின் பேச்சில் சிரிப்பு இல்'லேணா? தனக்கே உரித்தான நகைச்சுவையான பேச்சின் மூலம் அரங்கம் அதிரும் கைதட்டல்கள். தமிழ்வாணன் தான் ஒரு தமிழ்'ஞானன் என்று நிரூபித்து கிரி அவர்களை வாழ்த்தி அமர்ந்தார்.

திருமதி. ஷ்யாமளா மற்றும் திரு. "இலக்கியவீதி" இனியவன் அவர்களும் மேலும் வாழ்த்து மழை பொழிய புத்தகத்தை வாங்க எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்தது.

விழாவின் இறுதிக் கட்டமாக "எழுத்தாளர்" கிரி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

தேசிய கீதம் முழங்க, விழா இனிதே நிறைவடைந்தது.

செங்கை பதிப்பகம் வெளியிட்ட வேங்கையின் எழுத்து வேட்டை தொடர வாழ்த்துக்கள்.

1 comment:

"ஸஸரிரி" கிரி said...

ரொம்ப நன்றி அர்ஜுன்!
ரொம்பவே வேகம் நீங்க!

//ட்விட்டர் DP யில் இளமையான தோற்றத்தில் இருக்கும் கிரி அவர்கள் நேரில் இன்னும் சிறப்பாக ஒரு அனுபவஸ்தருக்கே உரிய, ஒரு எழுத்தாளருக்கே உரிய வகையில் தோற்றத்தில், வந்தார் //

எனக்கு வயசான தோற்றம்'னு சொல்லாம சொல்றீங்களா?