ஹைக்கொவியம் ( A Haiku collection - 1)


அழகான இடத்தில்
ஒரு திருஷ்டிப்பொட்டு,
என்னவள் இடையில்
... ஒரு மச்சம்!

வளைவுகளில்
மெதுவாக செல்லவும்
பெண்ணின் இடை.
... அறிவிப்பு.!

உன்னை வெல்ல
யாரிந்த உலகில்.,
..."இடை"த்தேர்தலில்..!

நீ விரலிட்டு
சமைத்ததால் தான்
என்னவோ
உன் வீட்டு
பாகற்காய் குழம்பும்
இனிப்பாகிப்போனதோ?


நீ
உன் இதழ் பதித்து
நிறுத்த வேண்டும்
என்பதற்காகவே
வேண்டுமென்றே வருகிறது,
... விக்கல் எனக்கு.!

எங்கிருந்து படைத்தான்
இறைவன்
உன் இதழ் சுவையை,
இருநாள் முடிந்தும்
...இன்னும் இனிக்கிறதே..!

வானத்திற்கும் ஆசைதான்
மழை வர்ணம் கொண்டு
உன் முகத்திரையில்
...ஓர் ஓவியம் வரைய..!

ஜன்னலோர இருக்கையில்
உன் முகம் கண்டபின்தான்
என்னவோ
நெடுஞ்சாலை நடுவே பூத்த
அரளியும் புன்னகைக்கின்றதோ?.

உடல் நடுங்கும்
குளிர்காலம்.,
எனக்கோ
வியர்த்து வழிகிறது,
என்னருகில்
ஆள் பாதியாய்
ஆடை பாதியாய் நீ...

உன் புடவையில்
மீதமிருக்கும்
உன் சுகந்தம் தான்
என்னை வாழ வைக்கிறது,
நீ என்னை
விலகி இருக்கும்
அந்த நாட்களிலும்..

காற்றின் மீது
எனக்கு கோபம் தான்,
சதா எப்போதும்
உன் உடல் பருகுகிறதே.


No comments: