நவயுவதிகள்(modern youth girls )


தமிழ்
இனி மேல்லச்சாகுமாம்,
ஆனால்
தமிழ் கலாச்சாரமோ
படு வேகமாய் சாய்கிறது.

Fair and Lovely யின் வரவால்
மஞ்சள் பூசிய முகம்
மறந்து போனது .,எங்கோ
மறைந்து போனது

கையில் தொங்கும் bracelet ஐயும்
வயரையும் கண்டு
கண்ணாடி வளையல்கள்
தற்கொலை செய்துகொண்டன.

காதில் மாட்டப்பட்ட வளையம்,
காதோரம் கதை பேசும்
கம்மலையும் ஜிமிக்கியையும்
களவாட செய்தது

உங்கள்
கிழிந்துபோன ஜீன்ஸ் கண்டு
தாவணியும் கரித்துணி ஆனது
பட்டு சேலைகளும் கூட
கிழிந்து போனது.

நீங்கள் ஆடும்
western, hip-hop நோக்கி
சிதம்பர நடராஜனும்
நொண்டியாகி விட்டான்.

உங்கள் ponytail ஐயும்
boycut ஐயும் கண்டால்
கண்ணகியும் கொஞ்சம்
கலங்கித்தான் விடுவாள்.

நீங்கள் சமைக்கும் kellogg 's &
fastfood சுவையில்,
விரைவில் செட்டிநாடும்
வரைபடத்தில் மறைத்து போகும்

ஒரு குழந்தை
தத்தி தவழ்ந்து நடந்தால்
பூமித்தாயும் மனம் மகிழ்கிறாள்,
ஆனால்
hi-heels மாட்டி
நீங்கள் நடந்தால்
தாள முடியாமல்
அவளே தன் மனம் நோகிறாள்.

பள்ளியில் பருவமாகி
கல்லூரியில் திசை மாறி
கனவு வாழ்க்கையை தொலைக்கும்
நவயுவதிகளே...

முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும்
வருங்காலமேனும் வசமாகட்டும்.

தமிழ் கலாச்சாரம்
கொஞ்ச நஞ்சமேனும்
மிஞ்சி இருக்கட்டும்.

இப்படிக்கு
பெண்களை கண்டால் கண்களை மூடும்
வேதாளம் அர்ஜுன்

8 comments:

arun said...

hmmmmmmmm..............

anand said...

super nanba

deepthy said...

wow........

santhanam said...

ம்ம். என்னைக்கு ஆண்கள் வேட்டி மட்டுமே கட்டுவது, நீர் மோர் , பதனீர் மட்ட்மே குடிப்பது போன்ற பழக்கங்களை கை கொள்கிறார்களோ அன்று இது பற்றி நாம் பேசலாம். ஒரு விடயம் நீங்கள் யார் ? அவர்கள் இதுதான் செய்ய வேண்டும் என்று சொல்ல?

Arunmozhi said...

அனைத்தையும் அணு அணுவாக அளந்துவிட்டு பார்த்தது கண்ணை மூடிகொள்பவன் என்பது எந்த விதத்தில் உண்மை அன்பரே?

wild bull said...

இதெல்லாம் கொஞ்சம் அதிகம் நண்பா. நாம் வேட்டி கட்டுவது இல்லை, சட்டை கூட போடுவது இல்லை. டி ஷர்ட்கள் தான் நம் உடுப்பாகிவிட்டது. எத்தனை ஆண்களுக்கு மரம் ஏற தெரியும், எத்தனை ஆண்களுக்கு நீச்சல் தெரியும். கௌபீனம் (கோமணம்) கட்டிய ஆண்கள் ஒருவர் கூட கிடையாது நண்பா...எதாவது சுப நிகழ்ச்சிகளுக்காவது பெண்கள் புடவை தாவணி அணிகிறார்கள். நாம் அப்போது கூட பேன்ட் தான் அணிகிறோம்....உங்கள் கவிதையை நான் கடுமையாக எதிர்க்கிறேன் நண்பா....

பொடியன் said...

நல்லாயிருக்கு!! ஆனா விமர்சனம் செய்வோன், விமர்சனம் செய்யுமுன் தன்நிலை சிறந்து அதாவது இந்தக் குறைகள் களைந்து இருத்தல் வேண்டும். தாங்கள் எப்படியோ??

பொடியன் said...

Your comment has been saved and will be visible after blog owner approval. புரிந்து கொண்டேன் தங்கள் சூழ்ச்சியை!!