கண்ணீருக்கு விலை கொடுங்கள் ( A Satyam Effect )


பணம் தந்த பகட்டில்
வளர்ந்து- இப்போது
மனம் தவிக்க நிற்கிறோம்.

கற்க கசடற மறந்து
தமிழ்ச்சுவை இழந்து
ஆங்கிலத்திலே திளைப்புற்றோம்.

கணினியை காதலித்தோம்
அதனால்
புத்தி பேதலித்தோம்.

orkut டிலும் facebook கிலும்
எங்கள் நேரம் தொலைத்தோம்.

வெளிநாட்டு மோகத்தில்
தமிழ்ப் பண்பாடு மறந்தோம்.

week end party களிலும்
chatting கிலும்
நாங்கள் வாழ்க்கை இழந்தோம்.

ஊரை மறந்தோம்,
பெற்றோர் வைத்த
பெயரையும் மறைத்தோம்.
ஆனால் இப்போது
முகவரி இழந்து நிற்கிறோம்.

லட்சங்கள் செலவாக்கியும்
எங்கள்
லட்சியத்தை தொலைத்து நிற்கிறோம்.

இது சத்யசோதனை அல்ல,
'SATYAM' மினால் வந்த சோதனை.

கலாச்சாரம் கொன்ற
எங்களுக்கு,
இதுவும் வேண்டும்
இன்னமும் வேண்டும் தான்.

ஆனால்,
சுற்றமும் சூழலும்
பாடிய வசைகளில்
நிறைய பட்டு விட்டோம்,
ஒழுங்காய் வாழ
கற்று விட்டோம்.

சமூகமே! இனி எங்கள்
கனவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டாம்
கண்ணீருக்கு விலை கொடுங்கள்
எங்கள்
கண்ணீருக்கு விடை கொடுங்கள்

--- என் வேலை இழந்த/தேடும் நண்பர்களுக்கு அர்ப்பணம்1 comment:

loganathan.s said...

கவலை வேண்டாம் நிச்சயம் காலம் கனியும் என் நண்பர்களுக்கு