எழுத்தாளன் ஆவது எப்படி..? (How to become a WRITER)என்னடா இவன் இப்படி ஒரு வெயிட்டான தலைப்போட எழுதிருக்கானே, ஒருவேள பெரிய அப்பாட்டக்கரா இருப்பானோன்னு நினைச்சுடாதீங்க. நான் ஒரு எழுத்தாளனே அல்ல என்பதை தொடக்கத்திலேயே சொல்லி விடுகிறேன். இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருப்பது கதையா, கட்டுரையா என்பது போலும் நான் அறியேன். இலக்கணம் இலக்கியம் என்பவற்றை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண்களுக்காக மட்டுமே அறிந்து வைத்திருந்தவன் நான். இந்நிலையில் என்னுள் ஏற்பட்ட ஏதோ ஒரு பருவ மாற்றத்தில், எப்போதோ எங்கேயோ போகும் வழியில், எங்கேயோ போய்க்கொண்டிருக்கும் இளம் பெண்களினின் கண்கள் மனதில் பதிந்து, அப்போது திடீரென எப்போதோ எங்கேயோ படித்த காதல் கவிதைகளின் நாலு வார்த்தைகள் நினைவுக்கு வந்து எதோ ஒரு காகிதத்தில் கிறுக்க ஆரம்பித்தபோது, ஆரம்பித்தது என் எழுத்து (ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா முடியல...)

என் நேரத்தை வீணாக்கும் நண்பர்களின் பிடியிலிருந்து தப்பவும், என் தனிமையை போக்கிக்கொள்ளவும் கையில் கிடைத்த எதையாவது படிக்க ஆரம்’பித்து, பின் அதுவே பித்து ஆகுமளவு வாசிப்பதில் நாட்டம் சென்றது. ஒரு படிப்பாளி எப்படியாவது படைப்பாளி ஆகி விடவேண்டும் என்ற ஒரு சிறு பொறி மனதில் தோன்ற, எப்படியாவது ஒரு சிறுகதையை எழுதி ஒரு எழுத்தாளன் ஆகி விடவேண்டும் என்ற முனைப்பில்,என் முதற் கதையை எழுத தொடங்கினேன்.

என் கதை நன்றாக எழுதி முடிக்கப்பட்டதோ இல்லையோ, நான் எழுதியதால் எனக்கு ஒரு எழுத்தாளனின் கஷ்டம் புரிந்தது. இது மொழியினாலோ, எழுத்தினாலோ வந்த கஷ்டம் அல்ல, எழுதுவதினால் நேர்ந்த கஷ்டம். தவறு செய்யாதவன் மனிதனே இல்லை என்பதைக் கேட்டுக்கேட்டு எந்தவொரு விஷயத்தையும் தவறில்லாமல் செய்ய முடியாமல் போன ஒரு சமூகத்திலிருந்து வந்த ஒருவனான நான் மட்டும் இதற்கென்ன விதிவிலக்கா என்ன? “எதுவோ உட்கார பனம்பழம் விழுந்த” கதையாய், கதை எழுத தொடங்கிய எனக்கு கிட்டியதோ ஓர் அனுபவம். ஒரு நல்ல அனுபவம் என்றும் சொல்லலாம்.  இதோ அந்த அனுபவம் உங்களுக்காக...

எழுத்தாளன் ஆவது எப்படி....

கல்லூரி விடுதியில் ஏற்ப்பட்ட தனிமையில் நொந்து போய்க்கிடந்த என்றோ ஒருநாள் என்னிலையைப் பார்த்த ஒரு புண்ணியவான் நாலு புத்தகங்களை கொடுத்து “சும்மா இருக்குற நேரத்துல பசங்களோட ஊர் சுத்தாம இதையெல்லாம் படி” ன்னு அறிவுரைத்து சென்றதில் ஆரம்பித்தது என் வாசித்தல்(அவன் மட்டும் என் கைல கிடச்சான்...). நம்ம ஊரில் யாருக்குத் தான் அறிவுரை பிடிக்கிறது, அன்றே அந்த புத்தகங்களை மூட்டை கட்டியிருந்தாலும், என்னை விடாது துரத்தும் தனிமை அந்த மூட்டையை அவிழ்த்துவிடச் செய்தது. கல்லூரி சிலபஸ்’களினால் ஏற்பட்ட வெறுப்பில் படிப்பது என்பது என் வயதொத்தவர்களுக்கு எட்டிக்காய் தான். இருந்தாலும் வேறு வழியில்லாததால் வாசித்தலைத் தொடர்ந்தேன்.

சிறிது நாட்களுக்குள் வாசித்தல் எனக்கு பிடித்துப் போயிருந்தது. அதே நேரம் பல சொற்ச்சுவைகளையும் கேட்க வேண்டியிருந்தது. யாருக்காவது எதையாவது சொல்ல நேர்ந்தால் “ஹாரிபாட்டர் ஆல்சோ டீல்ஸ் வித் த சேம் ப்ராப்ளம்” என்ற ரேஞ்சில் என்னை பார்த்தார்கள். நமக்கொன்றும் இது புதிதில்லையே, வாசித்தல் தொடர்ந்தது.

கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வந்த உடனேயே சீனியர் என்ற ஒரு சின்ன கெத்து. கொஞ்சம் பயத்தோடு, பவ்யமாய் மிதந்தோடும் சில ஜூனியர் தேவதைகள் கனவில் வர, அந்த சமயம் பார்த்து அதுவரை படித்திருந்த காதல் கவிதைகளும் நினைவில் வர, இரண்டும் ஒன்றர கலந்த அந்த நொடி தான் நான் ‘அந்நியன்’னாய் மாறிய தருணம். அர்த்த ராத்திரியிலும் மிதமான ஒளியுடன் எரியும் விடுதியின் மொட்டை மாடி விளக்கினோளியில்தான் என்னுள் இருக்கும் கிறுக்கன் தட்டி எழுப்பப்பட்டான். கவிதையாய் எழுதியிருந்தால் கவிஞன் எனலாம், கண்டதை கிறுக்கியவன்தானே நான்.

அன்று முதல் எழுத்தில் ஒரு ஆர்வம்., ஆர்வக்கோளாறு. எழுதுபவன் எல்லாம் எழுத்தாளன் என்ற நினைப்பு, அறியாப்பருவத்தில். எழுத்தாளன் என்பவன் எழுத்தாளுணன் என்பதை அறிந்திருக்கவில்லை அந்த வயதில். அன்றிலிருந்து ஏதோ கிறுக்கல் கவிதைகளின் மூலம் கல்லூரியில் கொஞ்சம் பிரபலமாகியிருந்தேன். நண்பர்கள் சிலரின் காதலுக்கு கவிதை எழுதப்போய், அவர்களின் காதலிகள் கவிதையைக் காதலித்ததால் வந்த குழப்பங்கள் சுவாரஸ்யம். ஏதோ சில கவிதைகள் சில இளம்பெண்களால் ரசிக்கப்பட, அங்கு ஆரம்பித்தது என் முதல் கற்றல்(கதறல்...).
“என்னடா சீன் போடுறியா?” என்று சக மாணவர்களின் இயலாமையும்,
“அவள கரெக்ட் பண்றியா?” என்று சக மாணவிகளின் கிசுகிசு ‘களும்,
“நீ எதுக்கு அந்த வித்யா கிட்ட அடிக்கடி பேசுற, பாத்துக்க, அப்புறம் பஞ்சாயத்து ஆயிடும்”ன்னு சும்மா நடக்குற சண்டைக்கு மேலே தொங்கும் பல்பை உடைக்கும் சீனியர் சூர்யாக்களின் மிரட்டல்களும் மனதிற்குள் சற்றே நெருடலைத் தர ஆரம்பித்தன. “எதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு” என்றும் பல தடவை மனதில் தோன்றி இருந்தது. இருந்தாலும் யாரும் அறியாமல் எழுத்தை தொடர்ந்தேன்.

அன்றுணர்ந்த விஷயம்- எழுத்தாளனுக்கு பயம்,தயக்கம் கூடாது.

கவிதை எழுதுவதால் தான் இந்த பிரச்சினை எல்லாம் என்று ஏதோ ஒரு பயத்தில், சிறுகதைகளின் மேல் நாட்டம் சென்றது. ஒவ்வொரு செமஸ்டர் தேர்விலும் எழுதும் விஷயம் தான் என்றாலும், சிறுகதை மீதான ஆர்வம் தனித்தோங்கிப் போயிருந்தது. வாசித்தலில் ஒரு புதுப்பாதை. கவிதைகள் போலல்லாமல் சற்றே பெரிதாய் நீளமாய் இருந்ததால் தொடக்கத்தில் பிடிக்காமல் போயிந்தாலும், அவை சொல்லும் ஆழமான கருத்துக்களால் கவரப்பட்டிருந்தேன். அன்றிலிருந்து வாசித்தலில் தீவிரம் கொஞ்சம் கூடியிருந்தது. வீட்டிலிருந்து அனுப்பப்படும் பணத்தில், சாப்பிடாமல் இருந்து கூட சில புத்தகங்கள் வாங்கி படித்தேன். “ஏன் உனக்கிந்த வேல, நீ வாங்குற அஞ்சுக்கும் பத்துக்கும் இதல்லாம் தேவ தானா?” என்ற அறைத்தோழர்களின் கிண்டல் செவி எட்டியிருந்தது. இருந்தாலும் விட முடியவில்லை, வாசிப்பை.

ஒரு சமயத்தில், அறிவுக்கருவூலத்தில் போதுமான வார்த்தைகள் சேர்ந்துவிட்டதாய் ஒரு தோன்றல், எழுதித் தான் பார்க்கலாமே என்ற ஒரு நப்பாசை. இந்த சமயம் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாய் விடுதியில் எழுதவில்லை, ஏதோ ஒரு வார இறுதியில் கல்லூரிக்கு கொஞ்சம் தொலைவிலிருக்கும் ஒரு அணைக்கட்டிற்க்கு சென்று எழுதலாம் என்று முடிவெடுத்து அங்கு சென்றேன். அணைத்து’கட்டி அமர்ந்திருக்கும் காதலர்களைக் கண்டு மனமுடைந்து(வயிறெரிந்து) ஏதோ ஒரு ஓரத்திற்கு சென்றமர்ந்து எழுதத் தொடங்கினேன்.
“இதல்லாம் எங்க உருப்படப் போவுது..” என்று காது படவே பேசிப்போன பெரிசுகளின் பேச்சிலிருந்து நான் என்னவோ காதல் கடிதம் எழுதிக்கொண்டிருப்பதாய் ஒரு தோன்றல் ஏற்பட்டிருப்பது புரிந்திருந்தது. மேலும் தொடர மனமில்லாமல் கிளம்பி என் அறைக்கு கிளம்பினேன். போகும் வழியில் என் மன மேகத்தில் வார்த்தைகளை சேகரித்தவாறே சென்றேன். அறையை அடைந்தவுடன், சரி எழுதலாம் என்று மேகத்தில் கோர்த்த வார்த்தைகளை பேனாவுக்கு “Transfer” செய்யலாம் என்றமர்ந்தேன். சமயம் பார்த்து காத்திருந்தது போல் என் அறை’வாசிகள் உச்ச சத்தத்தில் தொலைக்காட்சியில் பாடல் கேட்டு வெறுப்பேற்றிக் கொண்டிருந்தனர். கோபத்தில் அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு படுத்து விட்டேன்.

அன்று கற்றுக்கொண்ட விஷயம் எழுத்தாளனுக்கு பொறுமை அவசியம்.


அன்றிலிருந்து பகலில் படிக்கவோ எழுதவோ பிடிக்கவில்லை. இரவில் பதினோரு மணிக்கு மேல் அனைவரும் உறங்கிய பின் எழுதலாம் என்றால், கல்லூரியில் இரவு நேரத்தில் காதல் என்ற பெயரில் குடும்பம் நடத்தும் பல கூட்டங்கள் இருக்கத்தானே செய்கிறதே. போர்வைக்குள் இருந்து வரும் இச் இச் இச் சத்தங்கள், வெறுப்பேற்றுபவை. அப்புறம் எப்படி எழுத?

எழுத்தாளனுக்கு சகிப்புத்தன்மை மிக முக்கியம்.

இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவிலும் பார்க்கும் சில காட்சிகளில் கதைக்கு தேவையான ஏதாவது ஒரு “கச்சாப்பொருள்” கிடைக்கும், ஆனால் கல்லூரி/அலுவலக டென்ஷனிலும் வாழ்க்கை ஓட்டத்திலும் அவை மறந்தே போயிருக்கும். மறுபடி யோசிக்கும்போது தலைவலியே மிஞ்சும்.

எழுத்தாளனுக்கு ஞாபகசக்தி முக்கியம், எழுதுவதற்கான சூழ்நிலை மிக முக்கியம்.

ஒரு எழுத்தாளன் கிரிக்கெட்டுக்கு மட்டும் அடிமையாய் இருந்தால் அதோகதிதான். எந்த ஒரு எழுத்தாளனுக்கும் வரக்கூடாத நிலைமை. கிரிக்கெட்டா எழுத்தா என்ற குழப்பத்திலேயே பல மனித்துளிகள் வீணாய்ப் போயிருக்கும். எழுதும்போது கிரிக்கெட்டும், கிரிக்கேட்டின்போது எழுத்தும் வந்து கொல்லாமல் கொல்லும்.

எழுத்தாளன் எழுத்திற்க்கே அடிமையாயிர வேண்டும்.

இதை விட ஒரு கொடுமையான விஷம்(விஷயம்), நம் மனதில் இருக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு பொருத்தமான வார்த்தைகள் கிடைக்காமல் போவது. இதற்கு ஒரே தீர்வு வாசித்தல் மட்டுமே. இது தொடக்கநிலை எழுத்தாளர்கள் அனைவருக்கும் பொருந்தும்.

எழுத்தாளன் நல்ல வாசிப்பாளனாக இருக்க வேண்டும்.

இவை மட்டுமல்ல, இன்னும் பல... வீட்டு சூழ்நிலை, நண்பர்கள், பணம், காதல், தோழிகள் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். எனவே சும்மா எழுதுறவங்க எல்லாரும் எழுத்தாளன்(ர்) ஆகி விட முடியாதென்பதே எந்தன் தாழ்மையான கருத்து, முடிவு.

ஊக்கம் & நன்றி : @மண்குதிரை, கிரி, சொக்கன், @மினிமீன்ஸ், @கோளாறு, கார்க்கிபவா, @ஒளிவர்ஷம்(அருண்), @ஓமக்குச்சி(சதீஷ்),சின்ராஸ் மற்றும் வினோத்.

நன்றியுடன்,
வேதாளம் எ அர்ஜுன்

USB Safety Removeஅடிக்கடி Pen drive, USB உபயோகிப்பவரா?
ஒவ்வொரு முறையும் டாஸ்க் பாரிலிருந்து ரைட் கிளிக் செய்து “Safety Remove” கொடுக்க வேண்டியுள்ளதா?
ஒரு சிறந்த டூல் உங்களுக்காக. “USB Safety Remove
இந்த டூலை இன்ஸ்டால் செய்த பின் உங்கள் “USB Devices” களை “Safety Remove” செய்ய “Windows key + S” கொடுத்தால் போதும். பிறகு தோன்றும் ஒரு விண்டோ வில் உங்கள் USB Devices காட்டப்படும், ஜஸ்ட் ஒரு “Enter” தட்டினால் போதும். உங்கள் USB Safety Remove செய்யப்பட்டிருக்க்ம்.

பதிவிறக்கம் செய்ய : http://www.mediafire.com/?f1xdicobyah6xku

(இன்ஸ்டால் செய்த பின் டாஸ்க் பாரிலிருந்து “USB Safety Remove” ஐகானை கிளிக் செய்து EXIT கொடுக்கவும், பிறகு உள்ளே இருக்கும் “USB Safety Remove” போல்டரிலிருந்து USB Safety Remove.exe ஐ COPY செய்து “C:\Program Files\USB Safely Remove” இங்கு Paste செய்யவும்”)

விண்டோஸ் 7 மேனேஜர் (Windows7 Manager)

Windows 7 உபயோகிக்கும் நண்பர்களுக்கு ஒரு அருமையான All-In-One customization மென்பொருள்.


இதன் உபயோகங்கள் சில:

 • Windows 7 இல் dump memory, regisrty போன்றவற்றை Clean செய்து உங்கள் கணினியை வேகமாக இயங்கச் செய்கிறது, இதற்க்காக இதனுடன் 1-click cleaner என்ற ஒன்று தரப்படுகிறது, இதன் இயக்கம் வெகு சுலபம், தூங்கும் முன் இதை கிளிக்கி விட்டு தூங்கி விடலாம்.அதுவே கிளீன் செய்து கணினியை Shut-Down செய்து விடும்.
 • இதில் Optimizer -> Task scheduler உங்களின் அன்றாட ப்ரோக்ராம்களை Schedule செய்ய முடிகிறது. உதா: தினமும் இரவு 10 மணிக்கு Shut-Down ஆக வேண்டுமென்று Schedule செய்யலாம், நீங்கள் மறந்து தூங்கி விட்டாலும், உங்கள் கணினி Shut-Down செய்யப்பட்டிருக்கும்.
 • இதில் இருக்கும் Startup manager இன் மூலம், தேவையற்ற ப்ரோக்ராம்கள் ஆடோமடிக்காக (உங்கள் கணினி ஆன் செய்யும்போது) இயங்க தொடங்குவதை தடை செய்யலாம்.இதன் மூலம் RAM இன் உபயோகம் மிச்சப்படுத்தப்படும். கணினி வேகமாகும். உதா: அடோப் ரீடருக்கான அப்டேட் தேவையில்லாமல் தானாக இயங்கும், இதை நிறுத்தலாம்.
 • இதில் Cleaner என்பதன் கீழ் தனித்தனியே பல கிளீனர்கள் தரப்பட்டுள்ளன, உதா: Junk File Cleaner, Reg.Cleaner Etc. ஆனால் இவை அனைத்தின் வேலையையும் 1-click cleaner என்ற ஒன்றே செய்து விடும்.
 • இதில் Customization க்கு கீழ் இருக்கும் டூல்களின் உதவியோடு உங்கள் கணினியை அமர்க்களப் படுத்தலாம். உதா:
  • மௌஸ் இல் ரைட் கிளிக் செய்யும்போது தேவையற்ற மெனுக்கள் வந்து எரிச்சலூட்டுகின்றனவா? அவற்றை Context Menu டூல் கொண்டு நீக்குங்கள்.தேவையானதை மட்டும் வைத்துக்கொள்ளலாம்.
  • ஒவ்வொரு முறை Log In செய்யும்போதும் விதவிதமான படங்கள் வரவேண்டுமா? Visual Customizer இன் மூலம் இதை அடையலாம். இந்த டூல் இன்னும் பற்பல வேலைகளை செய்கிறது.
 • இதில் Security என்றிருக்கும் பகுதியின் கீழ் உங்கள் கணினியை Secure ஆக வைத்துக்கொள்ள பல டூல்கள் இருக்கின்றன.
 • இதில் Network என்றிருக்கும் பகுதியின் கீழ், நீங்கள் உபயோகிக்கும் இன்டர்நெட் டினை Customize செய்ய பல டூல்கள் கொடுக்கப் பட்டுள்ளன.
 • இறுதியாக Misc. Utilities என்பதன் கீழ் இருக்கும் “Windows Utilities” நமது கணினிக்கான சின்ன சின்ன வேலைகளை திறம்பட செய்ய வல்ல பல டூல்களை உள்ளடக்கியதாய் உள்ளது.
பதிவிறக்கம் செய்ய கிளிக்குங்கள்  http://goo.gl/7e0A4

காதலில் சொதப்புவது எப்படி..?


கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றியது, தமிழ் மட்டுமல்ல, காதலும் தான். நம் தாத்தா காலத்தில் ஏதோ ஒரு செடியில் பூப்பறித்து பாட்டி நிற்க, தாத்தா’வோ ‘ஏங்க,என்னங்க’ னு  வழ வழ, கொழ கொழ என்று துவங்கி, பின் நம் அப்பா காலத்தில் தாடி வைத்து ‘கண்கள் இரண்டால்’ பாடி, இப்போது நம் காலத்தில் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் சிக்கி திக்கு தடுமாறி நிற்கிறது – ஓர் உன்னதமான உணர்வான காதல்.

சரி விஷயத்துக்கு வருவோம். இன்றைய அதி நவீன உலகில் காதலில் நமது பசங்க எப்படி சொதப்புகிறார்கள் என்பதை பார்ப்போமே..

---------------------------------> காதலில் சொதப்புவது எப்படி <---------------------------------------

 • ஒரு பெண்ணை பார்த்தவுடன் ஓவரா எமோஷன் ஆகி, அலைபாயுதே மாதவன்னு மனசுல நினைத்துக்கொண்டு பின்னாடியே சுத்துறது. 
 • நாலஞ்சு மாசமா லோ லோ ன்னு அலைஞ்சிட்டு, பொண்ணு கூடி வர்ற நேரத்துல, அதவிட டக்கர் பிகரு கெடச்சவுடன், இவளை விட்டுட்டு அவளை தொடருவது. 
 •  friend ன்னு ஒரு சின்ன அங்கீகாரம் கெடச்சதுமே நம்பர் கேட்டு அசடு வழிவது.
 • ஒரு பெண்ணிடம் நட்போ,காதலோ கிடைத்த சில தினங்களுக்குள் அவளது தோழிகளிடம் நட்பாக முயற்சிப்பது.
 • உன்னவளின் நம்பர் கிடைத்த சில நாட்களிலேயே 'டி, செல்லம், அமுலு..' இப்படி குறுஞ்செய்தி அனுப்புவது.
 • காதலில் காத்திருப்பது சுகம், இது ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும். பெண்களுக்கல்ல.
 • சம்மதம் வந்தவுடனே, அவளைக் கவர தன்னை மிகைப்படுத்திக்கொள்ளுதல். அவளுக்கு உன்னைத்தான் பிடிக்கும் தவிர உன் தோற்றமல்ல.
 •   உன் காதலால் நீ தொடவேண்டியது அவள் மனதை, உடலை அல்ல.
 • உன்னவளுக்கு முன் வேறு பெண்ணை ரசிப்பது, தேடிச்சென்று அமரும் ஆப்பு.
மிக முக்கியமாக...
 • காதலிக்கு முன் நீ நல்ல கேட்பாளனாக இருக்க வேண்டும், அவளை இம்சிக்கும் பேச்சாளனாக அல்ல.

-    கேள்வி ஞானமே தவிர, அனுபவம் அல்ல.