வானம் - விமர்சனம்


பணம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையையும் எப்படி பாதிக்கிறது, கடவுள்கள் வேறுபடுத்தப்பட்ட இவ்வுலகில் மனிதம் எப்படி மதிக்கப் படுகிறது என்பதை சொல்ல போராடும் படம்-வானம்.

படத்தில் மொத்தம் ஐந்து டைம்-லைன்கள்.
வாழ்க்கைத்தரத்தை உயர்த்த பணக்காரப் பெண்ணைக் காதலிக்கும் கேபிள் ராஜா சிம்பு,
ஒரு முஸ்லிமாக பிறந்து விட்டதால் போலீஸின் அராஜகத்தில் தன் தம்பியைத் தொலைத்து விட்டு தேடும் அண்ணன் பிரகாஷ்ராஜ்,
சொந்தமாக கம்பெனி(??) ஆரம்பிக்க போராடும் பாலியல் தொழிலாளி சரோஜா அனுஷ்கா,
எப்படியாவது லைவ் கன்செர்ட் பண்ணிவிட வேண்டும் என்று போராடும் கிடாரிஸ்ட் பரத்,
கிட்னியை விற்றாவது வாங்கிய கடனை அடைத்து தன் மகனை படிக்க வைத்து விட வேண்டும் என்று போராடும் சரண்யா.
இந்த ஐந்து டைம் லைன்களும் ஒன்று சேரும்போது என்ன நடக்கிறது என்பது கதை.

தெலுங்கிலிருந்து காப்பி பேஸ்ட் செய்யப்பட்ட அனுஷ்கா சம்பந்தப் பட்ட காட்சிகள் லிப் சின்க் இல்லாததால் எரிச்சலூட்டுகின்றன. மனதில் ஒட்டாத கதா பாத்திரங்கள், இரைச்சலான பாடல்கள், மாறி மாறி பயணிக்கும் திரைக்கதை என்று அனைத்திலும் சொதப்பல். 

ஒரு அடி பட்டவுடன் தீவிரவாதி ஆகும் பிரகாஷ்ராஜின் தம்பி, நூறு பேரைக் கொல்லவேண்டுமேன்றால் உடனே இஸ்லாமிய ஜிகாத் தானா? இன்னும் எத்தனை படங்களில் தான் இதையே காட்டுவார்களோ. 

“உங்க லட்சியத்த என்மேல திணிக்காதிங்க” என்று பரத், “அடுத்தவங்களுக்கு உதவுதற விட பாட்டு தான் முக்கியமா?” என்று வேகா, “வாழ்க்கைனா என்னன்னு ஒரு சாவு காட்டிருச்சு” என்று அனுஷ்கா, என எல்லோரும் கிடைத்த வாய்ப்பில் மெசேஜ் சொல்லி எரிச்சலூட்டுகறார்கள். “என்ன வாழ்க்கை டா இது?” என்று சிம்பு சொல்லுவது வெறும் வசனமாக மட்டுமே உள்ளதே தவிர அதில் ஒரு உணர்ச்சி இல்லை.

கடைசி வரை என்னதான் சொல்ல வருகிறார்கள் என்று புரியாதது பெரிய மைனஸ். அதை விட தீவிரவாதிகள் ஜஸ்ட் லைக் தட் ஆக தப்பிப்பதும், கடைசியில் பரத் கையை இழந்து தியாகி ஆவதும் காதுல பூ, ரொம்ப ஓவர்.

கொஞ்சி கொஞ்சி பேசும் பப்ளி ஜாஸ்மின், சந்தானத்தின் டைமிங் காமெடி இவை மட்டுமே படத்திற்கு பிளஸ். கடைசியில் திருடிய பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டு அனைவரையும் காப்பாற்ற போராடும் போது மட்டுமே சிம்பு நடித்திருக்கிறார்.

எவண்டி உன்ன பெத்தான் பாடல் ஆட்டம் போட வைத்திருக்கிறது. ஆனால் மற்ற பாடல்களில் யுவன் ஷங்கர் ராஜா ஏமாற்றி இருக்கிறார். 

அனுஷ்காவிற்க்காக மட்டுமே படம் பார்க்க செல்பவர்களுக்கு ஏமாற்றமே!
அழுத்தமான கதையோடு, அனுஷ்கா,பரத் கதாபாத்திரங்களையும் கொஞ்சம் மெருகேற்றியிருந்திருக்கலாம்.


13 comments:

கார்க்கி said...

ஓடுமா????

chaaral said...
This comment has been removed by the author.
சும்மா பேசலாம் said...

அருமையான விமர்சனம். என்னால் படம் பார்க்க முடியாவிட்டாலும், உங்கள் விமர்சனம் ஒரு தேர்ந்த பத்திரிக்கையாளர் விமர்சனம் போல உள்ளது. வாழ்த்துக்கள்!!!! படம் பாக்கலாமா? வேண்டாமா? அத சொல்லலியே??

சௌம்யா....... said...

படத்துக்கு 20 மார்க் தான்....ஆனா உங்க விமர்ச்சனத்துக்கு 80 மார்க்...!

சௌம்யா....... said...
This comment has been removed by the author.
நாகராஜசோழன் MA said...

நான் சிம்பு படம் பார்க்கிறது இல்லை சகா!

Unmaivirumpi said...

உங்க விமர்சனம் படிக்கல ... நான் விமர்சனத்தை படிக்கிறதில்லை. உங்களின் முயற்சியை வாழ்த்துவதற்கே வந்தேன்... நிறைய எழுதுங்க... வாழ்த்துகள் :-))

hereandnow4u said...

இன்னும் படம் பார்க்கவில்லை நண்பரே. தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

nellai அண்ணாச்சி said...

படத்தைவிட விமர்சனம் நல்லா இருக்கு

வேதாளம் said...

உங்கள் கமெண்ட்ஸ் களுக்கு நன்றி. படம் ஒருமுறை பார்க்கலாம்.

"ஸஸரிரி" கிரி said...

நீங்க எழுதினதைப் படிச்சா, படம் பாக்கற மாதிரி இல்லை. ஆனா, ஒரு தபா பாக்கலாம்'னு சொல்றீங்களே? கொழம்பிப் போயிங். எனிவே, நான் ஜிம்பு படங்களை யார் ஜிம்பி ஜிம்பி அழைத்தாலும் பாரேன் (வி.வி.: வி.தா.வ), எனவே....

பை தி வே! எவண்டி ஒன்னப் பெத்தான் மட்டும் நல்லாக் கீதுன்னு சொல்றீங்க. அந்தப் பாட்டே கா.து. மாதிரி இருக்குங்கறது என் ஒபினியன் . அப்போ நல்லா இல்லைன்னு நீங்க சொல்ற பாட்டுகள்? முடிலடா சாமி!

thiru said...

அருமையான விமர்சனம் !!!!!!!!எந்த பிழையும் இல்லாமல் .......படம் பார்த்து கொண்டிருந்த சமயம் ....இது சரியல்ல என்று தோன்றியது அனைத்தும் ...உங்கள் விமர்சனங்களில் இருப்பது அருமை ......நன்று

மதுரை said...

தல படம் தெலுங்குல பட்டைய கிளப்புச்சு தமிழ்லே STR இருக்கும்போது எப்படி நல்லாயிருக்கும். சந்தானம் இருந்ததாலெ முதல் பாதி பரவாயில்லே. படத்தோட ஹிட் சாங் எவண்டி உன்ன பெத்தான் தமிழ் வரிக்கு. இங்கே செல்லவும் http://shashtikavasam.blogspot.com/2011/05/blog-post_07.html