புண்ணியம்


உங்களைச்சுற்றி ஒரு நூறு மலர்கள் பூத்திருக்க நடுவில் நின்றிருக்கிறீர்களா? நீங்கள் செய்த ஒரு சிறு உதவிக்கு உங்கள் பாட்டி வயதுள்ள ஒருவர் உங்கள் தலை மேல் கைவைத்து துளி கண்ணீருடன் வாழ்த்தும் வாழ்த்தைப் பெற்றிருக்கிறீர்களா? இதுபோல் ஒரு சந்தோஷத்தை தரக்கூடிய நிகழ்வொன்று நடந்தது எனக்கு. கடந்த வாரத்தில் நண்பன் ஒருவன் அழைத்திருந்தான். கிடைத்த முதல் வேலையில் முதல் சம்பளம் கிடைத்திருப்பதாகவும் எனக்கு ட்ரீட் தர விரும்புவதாகவும் சொன்னான். பிறை நிலவு நோக்கி அவனுடன் பேசிக்கொண்டிருந்த அந்த தருணத்தில் அந்த செய்தி எனக்குள் ஒரு மகிழ்ச்சியைக் கொடுத்தது. எனினும் அந்த ட்ரீட் விஷயத்தில் சிறிதும் உடன்பாடில்லாமல் உறங்கச்சென்றேன். காலை அவனுக்கு விளித்து “எனக்கு ட்ரீட் வேண்டாம், அதுக்கு பதிலா எனக்கு நீ ஒரு உதவி செய்யணும்” என்று சொல்லி கிளம்பி வரச்சொன்னேன். மறுநாள் காலை எங்கு செல்கிறோம் என்று கூட சொல்லாமல், அவன் சம்பளத்தில் ஒரு கணிசமான தொகையை எடுத்துக்கொண்டு என் சம்பளத்திலும் கொஞ்சம் தொகை சேர்த்து பிஸ்கட்,கேக்,பால் இன்னும் பல அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக்கொண்டு கிளம்பினோம். எங்கு செல்கிறோம் என்று அவனுக்கு சொல்லியிருக்கவில்லை நான்.


சிறிது நேரத்தில் நாங்கள் சென்று சேர்ந்த இடம் “குட் லைஃப்” ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம். பாஸ்கரன் என்பவரால் 1996 இல் ஆரம்பிக்கப்பட்டு பொதுமக்கள் நிதியுடனும், “டிரஸ்ட்” எனப்படும் குழுவின் உதவியுடனும் செயல்படும் அந்த காப்பகத்தில் மொத்தம் 140 குழந்தைகளும், ஆதாரவற்றோரும் பராமரிக்கப்படுகின்றனர். இதில் 35 பேர் மூளை வளர்ச்சியற்றோர். இவர்களைப் பராமரிக்க சுமார் இருபது பேர் அங்கு வேலை செய்கின்றனர். பேருந்து நிலையங்களிலும், ரோட்டோரமும் திரியும் தாய் தந்தையற்ற அநாதை குழந்தைகள் போலீஸின் உதவியோடு இங்கு அழைத்து வரப்பட்டு பராமரிக்கப்படுகின்றனர். பள்ளி செல்லும் வயதை அடைந்த அனைவருக்கும் கல்வி அளிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கும்,மூளை வளர்ச்சி குன்றியோருக்கும் அங்கேயே பயிற்சி அளிக்கப்படுகிறது. அனைத்து விஷயங்களையும் கேட்டறிந்த பின்பு அவர்களின் அனுமதி பெற்று குழந்தைகளைக் காணச் சென்றோம்.


“குட் மார்ன்......னிங் அங்கிள்” என்று ஒட்டுமொத்தமாக சத்தமிட்டு எங்களைச் சூழ்ந்து கொண்ட குழந்தைகளுக்கு மத்தியில் நின்று கொண்டிருப்பது உள்ளூர என்னவோ செய்தது. “என் பேரு மரியா.. உங்கே பேர் என்ன அங்கிள்?” என்று ஒரு வாண்டு வந்து கை கொடுத்து கேட்டு நிற்கும்போது தூக்கி கொஞ்சமல் இருக்க முடியவில்லை. “என்ன விசேஷம் அங்கிள்? உங்க பிறந்தநாளா?” என்று அக்கறையோடு விசாரித்த குழந்தைகள் மனதில் நின்று போயினர். வாங்கிச்சென்ற பொருட்களைக் கொடுத்த போது அவர்கள் கண்களில் கண்ட மகிழ்ச்சி விவரிக்க முடியாதது. தயங்கித்தயங்கி பின்னர் தலை மேல் கை வைத்து “நீங்க நல்லா இருப்பிங்க ராசா” என்று வாழ்த்திய ஒரு பாட்டியின் வாழ்த்தில் இருந்த உண்மையை, அவர் கண்ணோரம் கசிந்திருந்த கண்ணீர் உரைத்தது. தன் மகனும் மருமகளும் கைவிட்டதால் அங்கு பணிக்கு சேர்ந்து அங்கிருக்கும் குழந்தைகளை பராமரித்து வருவதாய் சொன்னார்.  எதாச்சையாய் ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு நன்றி சொல்லும் தருவாயில், ஏதோ ஒரு “தெய்வத்திருமகன்” எங்கள் கை பிடித்து அருகில் இருத்தி “அங்கிள், நா பாட்டு பாடுறேன், கேக்குரிங்களா?” எனச் சொல்லி “உசுரே போகுது உசுரே போகுது” என்ற வார்த்தைகளையே திரும்ப திரும்ப பாடியபோது மனம் கனத்தது. ஆனால் அங்கிருக்கும் அனைவரைக் கண்டபின் ஒன்று தெளிவானது. ஆதரவற்றோர்க்கு ஆதரவற்றோரே ஆதரவு.

விளையாடும் குழந்தைகளோடு நான்:
அங்கிருப்பதிலேயே அனைவர்க்கும் செல்லப்பிள்ளை “அமுதன்” சுமார் ஒன்றரை வயதிருக்கும், பெயரைக்கேட்டால் “அமுயன்” என்று சொல்லும் அந்த கொஞ்சு மழலைக்காவது கடவுள் கருணை காட்டியிருக்கலாமென்று தோன்றியது. இறுதியாய் அங்கிருந்து விடை பெரும் தருணம், அனைவரும் ஒருசேர “தாங்க்யூ அங்கிள்” என்று சொல்லி வழியனுப்பினர். செல்வம் என்ற ஒரு சிறுவன் மட்டும் ஓடி வந்து கைகள் பற்றி “நான் இன்னைக்கு ப்ரேயர் பண்ணும்போது உங்களுக்காக சாமி கும்பிடுறேன், அடுத்த தடவ கண்டிப்பா வரணும், சரியா அங்கிள்” என்று சொன்னபோது அவனை தூக்கி அணைத்து பிரியா விடை கொடுத்தோம்.

அமுதனோடு நான்:மனதில் ஒரு பிரார்த்தனையோடு போக மனமில்லாமல் வெளியேறினோம், “வாழ்க்கையில் உருப்படியாய் செய்த ஒரே காரியம் இது தான், இது நிலைக்க வேண்டும் வாழ்நாள் முழுவதும், இறைவன் அவர்களனைவரையும் ரட்சிக்க வேண்டும்”. அங்கிருந்து விடை பெற்று வீடு சேர்ந்த பின்பும், அந்த பூக்களின் வாசம் மனதை விட்டகலவில்லை, இன்னமும்தான்.

முகவரி:
குட் லைஃப் சென்டர்
வித்யா தியேட்டர் அருகில்
தாம்பரம்.
தொலைபேசி: 044-22264152

பின் குறிப்பு: குழந்தைகளில் சிலர் ஒருவித சரும வியாதிகளால் பாதிக்கப்பட்டிருப்பதால், உதவ விரும்பும் மருத்துவர்கள் மாதமொரு முறையாவது இலவச மருத்துவ உதவிகள் செய்தால் உதவியாய் இருக்கும். உதவி மனம் கொண்ட மற்றவர்களும் உதவலாமே!

16 comments:

சி.பி.செந்தில்குமார் said...

வெரிகுட்.. ட்விட்டர்ல பார்த்து வந்தேன்.. நிஜமாவே உருப்படியான வேலை தான் வாழ்த்துக்கள்

கிரி ராமசுப்ரமணியன் said...

Good job bro...

//அங்கிருந்து விடை பெற்று வீடு சேர்ந்த பின்பும், அந்த பூக்களின் வாசம் மனதை விட்டகலவில்லை, இன்னமும்தான்.//

:))))))))

vivekrocz said...

நிஜமாகவே இதை படித்து முடிக்கும் பொழுது மனது கனமாக இருக்கிறது

Anonymous said...

நானும் இது போன்ற ஒரு ஆதரவற்றோர் இல்லத்துக்கு சென்றிருக்கின்றேன்.அவர்களை பொறுத்தவரை அவர்களை பார்க்க செல்லும் ஒரே விருந்தாளிகள் நாம்.எனவே தான் அந்த அன்பு.மகிழ்வாக இருக்கின்றது.தொடருங்கள்...நல்ல காரியத்தை
by umakrishh

Anonymous said...

These places are real eye openers, makes us realize how blessed we are. If only all of us spend a portion of our income at least to celebrate important occasions, the world will be a better place to live. Special mention has to be made about those who serve the mentally retarded and the aged who are incapable of doing their daily routine on their own. You have to have a big heart. In one of your tweets you had mentioned about the colour of your skin, well your heart is just the opposite :-) Loved the content and the presentation!
amas32

கோமாளி செல்வா said...

ரொம்ப ரொம்ப நல்ல விசயம் மச்சி! ரொம்ப மகிழ்ச்சியாவும் இருக்கு.
அதோட உன்னோட எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்கு.

அதிகமா படிச்சாதான் நல்லா எழுதமுடியும் அப்படிங்கிறது தெரியுது.
உண்மைலேயே நீ பெரிய ஆளுதான் :-)

asksukumar said...

அன்பே சிவம்!!! பாக்க சின்ன பையன் மாதிரி இருந்தாலும், நீங்க ரொம்ப பெரிய ஆள்தாங்க! வாழ்த்துக்கள் அர்ஜுன்!!!

naren said...

i was very much impressed by ur actions .....v do follow u sure .....

naren said...

very much impressed by ur actions v do follow the same

Unmaivirumpi said...

இதை படிக்கும் போது மனம் கனக்கிறது ... அதே நேரத்தில் உங்களை பாராட்டவும் தோன்றுகிறது... வாழ்துக்கள் ...

சிசு said...

நல்லது செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். ஆனால் கடவுளை நினைக்காதீர்கள். "கடவுள் இருந்தால் நல்லா இருக்கும்" வசனம்தான் ஞாபகம் வருகிறது. (இது தசாவதாரம் பட வசனம் அல்ல. அப்படம் வருவதற்கு முன்பே "காலச்சுவடு" இதழில் ஜக்கரியா என்ற மலையாள எழுத்தாளர் இந்த வரிகளை ஒரு கம்யூனிச எழுத்தாளர் சொல்லியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்)

venky said...

Beautiful.

Nature Lover Pon Rajesh said...

நீங்க எங்க இருக்கீங்க பாஸ் நான் 3 வருடமா தாம்பரத்தில்தான் இருக்கேன் சந்திக்கலாம்; பகிர்ந்து கொள்ளலாம் பல விசயங்களை

arun said...

NICE

arunvetrivel said...

நீ ரொம்ப ரொம்ப நல்லவன் அர்ஜுன்!!! , உன்னை போல நல்ல உள்ளம் உள்ளவர்கல் நீடுழி வாழ அவர்கள் சார்பாக நானும் உன்னையும் உன் நன்பனையும் வாழ்துகிறேன்.

yathavan nambi said...

வணக்கம்!
இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
வாழ்த்துக்கள்!
ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
படைப்புகள் யாவும்.

நட்புடன்,
புதுவை வேலு,
www.kuzhalinnisai.blogspot.com

(இன்றைய எனது பதிவு
"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
படரட்டும்!
(குழலின்னிசையை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)