தேவதை எழுத்துஎதையெதையோ எழுதியவன்
எனைப் படைத்த
தாய்க்கென
ஒரு கவிதை எழுத
முனைந்தேன்.

எங்கெங்கோ படித்த
வார்த்தைக் கோர்வைகள்
எழுத்தோடையாய்
கண் முன்னே நிழலாட,

இலையுதிர் காலத்தின்
மரத்தடி போல் பல
வார்த்தைச் சருகுகள்
மனத்திரையில்
வீழ்ந்துகொண்டிருந்தன.

உதிர்ந்திருக்கும்
ஒவ்வொரு இலையிலும்,
ஒவ்வொரு எழுத்தோவியங்கள்.

வாரிச்சுரிட்டி
வார்த்தைகளாக்கினேன்.
எதுவும் பொருத்தமில்லா
தோன்றிற்று,
என் தாயைக் குறிக்க.

எனக்கென
எரிதழல் சுமந்து
வண்ணநிழல் தந்தவளுக்கு
வார்த்தைச் சுழலிலும்
ஒரு
வாக்கியம் கிடைக்கவில்லை.

ஒருவேளை
ஆயுதஎழுத்தைப் போல
“தேவதை எழுத்து”
ஒன்று இருந்திருக்குமாயின்
பொருந்திப்போயிருக்கும்
என்
தாயைக் குறிக்க.
11 comments:

திருநாவுக்கரசு பழனிசாமி said...

தம்பி...கவிதை அருமை

asksukumar said...

அருமை!!!!அருமை!!! கலக்குங்க தம்பி : )

Anonymous said...

ரொம்ப நல்ல முயற்சி. தாயை பற்றி எழுதப்படும் எந்த எழுத்தும் அடிமனசில் இருந்து அன்போடு வரும்பொழுது அந்தத் தாயைப் போலவே அழகாகிவிடுகிறது. வாழ்த்துகள்
amas32

Anonymous said...

மிக அருமை நண்பா..எனக்கும் வார்த்தைகள் இல்லை இந்த தேவதை எழுத்தை வர்ணிக்க
by
umakrishh..

sowmya said...

ரொம்ப நல்லாருக்குங்க அர்ஜுன்.

Sampath said...

நண்பா.,
உன் வார்த்தை
என் தாயை
போன்று
இனிமையானது

Natarajan said...

தேவதை கவிதை!!

Natarajan said...

பத்து முறையாவது படித்திருப்பேன்!! இன்னும் அலுக்கவில்லை!!

கோமாளி செல்வா said...

ரொம்ப ரொம்ப அருமை மச்சி ! உண்மைலேயே ரொம்ப பிடிச்சிருக்கு.
அதிலும்

//எரிதழல் சுமந்து
வண்ணநிழல் தந்தவளுக்கு//


//வார்த்தைச் சருகுகள்
மனத்திரையில்
வீழ்ந்துகொண்டிருந்தன.
//

இன்னும் ரசித்துக்கொண்டே இருக்கிறேன் :-)

கிரி ராமசுப்ரமணியன் said...

நல்ல முயற்சி... வாழ்த்துக்கள்.

கவிதையைப் பொறுத்த வரைக்கும் இன்றைய தமிழ்ச் சூழல்'ல இப்படித்தான் இருக்கணும்னு அவசியம் இல்லை. மொக்கை, சிம்பிள், சீரியஸ், பின் நவீனம் அப்டின்னு என்ன எழுதினாலும் அதுக்குன்னு படிக்க கூட்டம் இருக்கவே செய்யுது. ஸோ, உங்களுக்கு எழுதியே ஆகணும்னு உந்துதல் இருந்தா , என்ன வருதோ அதை முதல்ல எழுதுங்க. நிறைய கவிதைகள் படிங்க....

என் கண்ணுல படற குறைகளை சொல்றேன், குறிச்சிக்கோங்க.

//ஒவ்வொரு எழுத்தோவியங்கள்//

முதல் வார்த்தை ஒருமை, ரெண்டாவது பன்மை... இது போல ஈசியா வந்து உட்காரும் பிழைகளைத் தவிர்க்கணும் நீங்க.

//ஆயுதஎழுத்தைப் //

அது "ஆய்த" எழுத்து.... ஆயுத இல்லை.

எனக்குத் தெரிஞ்சதைச் சொன்னேன். தப்பா இருந்தா மன்னிக்கணும்...

வேதாளம் said...

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.

@rsgiri: குரு என்பவரே குறைகளை நிவர்த்தி செய்பவர் தானே ஐயா? தப்பில்ல நீங்க தாராளமா சொல்லலாம்.