கண்ணாமூச்சி ரே ரே.....


எங்கோ
சிறு வயதில்
பள்ளி மைதானத்தில்,
வீட்டு முற்றத்தில்,
பக்கத்து வீடுகளில்,
சேர்ந்து விளையாடிய
கண்ணாமூச்சி விளையாட்டில்
நீ தொட வேண்டும்,
உன் விரல் பட வேண்டும்
என்பதற்காகவே

ஓடி வந்து உன்னிடம்
அகப்படுபவன் நான்....

இப்பொழுதும்,

என் தோல்விகளில்
உன் வெற்றிகளை கொண்டாடுபவன்...!


No comments: