மழைக்காலத்தின் முதல் ஞாயிறு...சுட்டெரிப்பவனோ
ஓய்வெடுக்கச் சென்று விட்டான்....

வருணன் என்னும்
காதலன் எய்த
மழைத் துளிகளில்
சுழல்வதையும் மறந்து,
மயங்கிக்கிடக்கும் பூமியில்
அன்று
மழைக்காலத்தின் முதல் ஞாயிறு,
சாரல் மட்டுமே காதலாய்....

உடலூடுருவும் பனிக்காற்றில்
வழக்கங்கள் தொலைந்திருக்கும்.
நாசி தொடும் மண்வாசம்,
துளிர்த்திருக்கும் செடிகள்,
குடை பிடிக்கும் மக்கள்,
தலைநனைத்துக் களியாடும் குழந்தைகள்,
சுற்றம் சற்றே மாறி இருக்கும்,
நம் காதலும் தான்....

உன் இதமான
அரவணைப்புத் தேவைப்படும்
இனியதோர் கார்காலம்....

தீண்டிச்சென்ற சாரலால்
உன் முகத்தில் படிந்த
நீர்த்துளிகளை உதடுகளால்
நான் ஒத்தியெடுக்க
எனதுள்ளே கலந்த உன் வாசம்
பிரித்தெடுக்கவியலா ஒன்றானது...

கிச்சு கிச்சு மூட்டியும்
காது மடல் கடித்தும்,
உன் உஷ்ணப் பெருமூச்சுகளால்
என்னை உஷ்ணமாக்கும்
விளையாட்டுக்காகவே
வேண்டும் இந்தக் கார்காலம்....

உந்தன் காதோரத்தில்
என் கிறுக்கல்களாலும்
உன் செல்லச் சிணுங்கல்களாலும்
நம்மேல் விழும்
ஒவ்வொரு மழைத்துளியிலும்
தெறிக்கிறது நம் காதல்....

இரு மேகங்களின்
கூடலால் வந்த
இடி மின்னலில்,
கண்மூடி என்னை
இறுக்கி அணைக்க
காதல் தாண்டிய
உன் ஸ்பரிசத்தை உணர்கிறேன்.

உண்மையில்,
உன்னை
அணைத்துச் செய்த
அனைத்திலும் என்னுள்
அணைந்து விடவில்லை
அந்தத் தீ....

வேட்கையில் ஆடும்
இந்த வேட்டையில்
பரிசுகளோ,
நான் காணவியலா
உன்
நகக்கிறுக்கல் ஓவியங்கள்....

பெய்யும் மழைக்கேற்ப
வேகமெடுக்கும்
நம் காதலைப்போல்,
வேகமாய்ச் சுழலுகிறது
நம் வீட்டுக் கடிகாரமும்....

உன் இதழ் ரசம்
சுவைத்து ஆரம்பித்த
கார்காலத்தின் முதல் ஞாயிறு,
மாலை நேரத் தேநீரில்
முடிவடைந்தது....

மீண்டும் ஒரு ஞாயிறை எதிர்பார்த்து
காதல் வளர்ப்போம் வா,
நாமிருவரும்....

13 comments:

வேதாளம் said...

இந்தக் கவிதையைப் படித்து, மெருகேற்றி வெளியிட உதவிய நண்பர் சந்தோஷ் க்கு நன்றி.

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

//////உந்தன் காதோரத்தில்
என் கிறுக்கல்களாலும்
உன் செல்லச் சிணுங்கல்களாலும்
நம்மேல் விழும்
ஒவ்வொரு மழைத்துளியிலும்
தெறிக்கிறது நம் காதல்....
///

நல்ல ரசனை அருமையானக் கவிதை நண்பரே . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன் உங்களின் படைப்புகளில் நனைய

Renu said...

என்ன இருந்தாலும் என் அளவுக்கு உனக்கு நல்லா வரலப்ப .அடிக்கடி என் bloga பாத்து ட்ரைனிங் எடுக்கவும்

Santhosh said...

@renu என் மச்சான் எழுதறது பிடிக்கல உனக்கு.. என்னா கொலைவெறி??

கேடி பையன் said...

கவிதைக்கேற்ற தமிழ் சொற்கள் - காதலிக்கத் தூண்டுகின்றன (உம் கவிதையை!)

asksukumar said...

மீண்டும் நிரூபித்துவிட்டாய் நண்பா உன் கவி திறமையை!!

திருநாவுக்கரசு பழனிசாமி said...

keep it up

கோமாளி செல்வா said...

உண்மைலேயே பொறாமையா இருக்கு மச்சி !
அவ்ளோ அருமையா இருக்கு கவிதை :-)

//உண்மையில்,
உன்னை
அணைத்துச் செய்த
அனைத்திலும் என்னுள்
அணைந்து விடவில்லை
அந்தத் தீ....//

இந்த வரிகள் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.
நீ கலக்கு !

கார்க்கி said...

தலைப்பு கவிதையை விட கவிதையா இருந்துச்சு..

vidivelli said...

கிச்சு கிச்சு மூட்டியும்
காது மடல் கடித்தும்,
உன் உஷ்ணப் பெருமூச்சுகளால்
என்னை உஷ்ணமாக்கும்
விளையாட்டுக்காகவே
வேண்டும் இந்தக் கார்காலம்....

very nice..
congratulation"


can you come my said?

vidivelli said...
This comment has been removed by the author.
அரசன் said...

கவிதையில் காதல் ரசம் ஊற்றெடுக்கிறது

வேதாளம் said...

நன்றி நண்பர்களே