ஆண்கள் ஜாக்கிரதை- ஒரு சீட்டிங் சாட்டிங்
தற்சமயம் தமிழ் இணையத்தில் பெரிதும் வலம் வந்து கொண்டிருக்கும் வார்த்தைகள் சாட்டிங்-சீட்டிங். இதைக்குறித்து விரிவாக பலரும் எழுதிவிட்டனர். இதைக்குறித்து சில கட்டுரைகளைப் படித்தபின் மனதிற்குள் ஒரு நெருடல். இந்த சாட்டிங் விஷயங்களைப் பற்றி எழுதியவர்கள் பலரும் ஆண்களையே குற்றவாளிகளாக்கி எழுதியிருக்கின்றனர். இப்போது நான் சொல்லப் போகும் விஷயத்தினால் நான் யாரு’க்கோ வக்காலத்து வாங்குவதாக எண்ணி விட வேண்டாம். எனக்கு யாரைப்பற்றியும் எதுவும் தெரியாது. பிரச்சினைகளைத் தவிர்க்க வேண்டியே இந்த டிஸ்க்ளெய்மர்’ஐ இங்கு சேர்க்க வேண்டி உள்ளது. ஒரு பொதுவான கண்ணோட்டத்தில் நான் கண்ட ஒருவரைப் பற்றியும், சில சம்பவங்களையும் இங்கு சொல்கிறேன்.


கல்லூரி சேர்ந்த புதிதில் வளரும் நட்பு வட்டத்தில் பலரும் கூட, புதிய பலருடன் கல்லூரி ஆரம்பித்தது. இதில் பெண் தோழிகளும் உள்ளடக்கம். இது நடந்தது ஒன்றும் எண்பதுகளிலோ, தொண்ணூறுகளிலோ கிடையாது. ஒரு ஆறு வருடங்களுக்கு முன்னால் அவ்ளோதான். எனவே வந்தவர்கள் மூன்றாம் தலைமுறையின் முதல் வித்துக்கள்.  பழைய கல்லூரி கதைகளில் வரும் அம்மாஞ்சிகளாக இல்லை யாரும். ஊரையே விற்றுவிடும் திறமைசாலிகளாகத் தான் வந்து சேர்ந்தனர் பலரும். வழக்கம் போல மூன்றாம் தலைமுறை என்றாலே பிரச்சினை தானே, அதே தான் இங்கும். “இதை ஆண்கள் மட்டும் தான் செய்ய வேண்டுமா?// பெண்களால் முடியாதது ஒன்றும் இல்லை” என பெண்ணியம் பேசும் பலரும் தோழிகள் ஆயினர். தோழிகள் என்ற ஒரு காரணத்திற்காக அர்த்தமற்ற பல விவாதங்களுக்கும் தலை அசைத்துப் போக வேண்டி இருந்தது. அந்த சமயங்களில் மௌனம் மட்டுமே எல்லாம் தெரிந்தவர்களிடமிருந்து என்னைக் காக்கும் ஆயுதமாகப் பட்டது. பல சமயங்களில் கோழையாகவும் பார்க்கப் பட்டேன். இப்போது இது பிரச்சினை இல்லை. பிரச்சினை வேறு.


நான் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் ஆரம்பித்திருந்தன, அந்த காலகட்டத்தில்தான் இங்கு மொபைல் போன்கள் வெகுவாக வளர்ச்சி கண்டு வந்தன. வெளியூரிலிருந்து ஹாஸ்டலில் தங்கிப்படிக்கும் பல மாணவியருக்கும் மொபைல் அத்தியாவசியமாகப் பட்டது ஒரு தொலைத்தொடர்பிற்க்கு. இந்த அத்தியாவசியம் ஆடம்பரமாக வெகு நாட்கள் பிடிக்கவில்லை எங்கள் வட்டத்திற்குள். மேலும் பலரும் கெட்டுப் போவதற்கு ஏதுவாகவும் இருந்தது இந்த மொபைல் போன்களே. மொபைல் போன்களின் வளர்ச்சியின் வேகத்தில் காதல்களும் பெருகின. அது போன்ற ஒரு “தெய்வீகக் காதலை”ப் பற்றி தான் சொல்ல இங்கு வந்தேன்.


.... அவள் பெயர் உஷா. மா நிறம். திருச்சி தான் ஊர், அப்பா பெரிய தொழிலதிபர். வீட்டிற்கு ஒரே பெண். இதற்கு மேலும் எதுவும் சொல்ல தேவை இல்லை. நீங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள், இருந்தாலும் தொடர்கிறேன். குணாதிசயங்களைச் சொல்லவேண்டுமெனில் நல்ல பெண், கிளியோபாட்ராவின் மறுபிறவி என தன்னை நினைத்துக் கொள்(ல்)பவர். பலரிடமும் பயமின்றி தாராளமாக(?) பேசும் சோஷியலிஸ்ட். இதனாலேயே தூண்டில் போட்ட பலரும், மீன் சிக்கிய பின்னும் நரம்பை அறுத்து தப்பி ஓடினர். எந்த நேரத்திலும் யாருக்கும் SMS அனுப்பத் தயங்காதவர். இவை அனைத்தையும் தெரிந்த பின்னும் நட்பு பாராட்டிய என் நண்பர்கள் சிலரிடம், தான் பள்ளியிலே ஒருவரைக் காதலித்ததாகக் கூறியிருக்கிறார். (குழப்பங்களைத் தவிர்க்க வேண்டி உஷா’வை இவள் என்று குறிக்கிறேன்). அவரிடம் இவளே சென்று காதலை ப்ரப்போஸ் செய்ததாகவும், கொஞ்ச நாட்கள் காதலித்து விட்டு அவன் கழட்டி விட்டு சென்றதாகவும் இவள் கூறியிருக்கிறாள். தன் சோஷியலிஸ்ட் தோழிக்கு ஒன்று என்றால் தட்டிக் கேட்கப் புறப்பட்ட பல நண்பர்களும் அவனைப் பிடித்து விசாரித்ததில் இவளைப் பற்றிய சுயரூபம் வெளிவந்தது, முதன்முதலில். +2 முடித்து வீட்டில் வசதி இல்லாததால் இஞ்சினியரிங் படிக்க முடியாமல் கேட்டரிங் செய்து கொண்டிருந்த அவனி(ரி)டம் “நீ இஞ்சினியரிங் படிக்கல, நான் வேற ஊர் போறேன். நமக்குள்ள ஒத்து வராது என்ன விட்டுடு” என்று சொல்லி இவள் தான் அவரைக் கழட்டி விட்டிருக்கிறாள். நம்ப முடியாமல் நண்பர்கள் மிரட்டிக் கேட்க “நான் பொறியியல், நீ பொரியல் ரெண்டுக்கும் ஒத்துவராது, ப்ளீஸ் என்ன தொந்தரவு பண்ணாத” என்ற இவளனுப்பிய கடைசி SMS’ஐ சாட்சியாக வைத்து கதறியிருக்கிறார். இருந்தாலும் இந்த விஷயங்கள் கல்லூரி வட்டத்தில் வெளிவராமல் ரகசிமாக்கப்பட்டன, இவள் ‘சோஷியலிஸ்ட்’ என்னும் ஒரே காரணத்தினால். இதற்கிடையில் காதல் தோல்வி என்று விளம்பரப்படுத்திக்கொண்ட இந்த பெண் தேவதாஸ்(??)’ன் அலம்பல்களை சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது.


வெகு சீக்கிரமே நார்மல் ஆகி விட்ட இவளுக்கு, “ஆள்” இல்லாத காரணத்தினால் ஒரே சமயத்தில் பலருக்கும் SMS பறந்தது. மொபைல் ரீ-சார்ஜ் முதல் ATM பணம் வரை எல்லாம் இருந்த இடத்திலேயே கிடைத்தது, இவள் தான் சோஷியலிஸ்ட் ஆயிற்றே. திடீரென நண்பர்கள் அத்துணை பேருக்கும் ஆப்பு வைக்கும் விதமாக நிகழ்ந்தது ஒரு நிகழ்ச்சி. “World SMS Day” என்று எவனோ ஒருவன் ரேண்டமாக இவளுக்கு SMS செய்திருக்கிறான். கஸ்டமர்கேராக இருந்தாலும் திருப்பி ரிப்ளை பண்ணும் இவள், அந்த ‘Stranger’ க்கும் ரிப்ளை செய்திருக்கிறாள், நிஷா என்ற பெயரில். அந்த புதியவன் தன்னை ஒரு இரண்டாமாண்டு மாணவனாகவும், சென்னையில் வசிப்பதாகவும், பெயரை குரு என்றும் அறிமுகப்படுத்தியிருக்கிறான். அதன் பிறகென்ன.. ஒரே போன் கால்கள் தான், SMS’கள் தான். நண்பர்களின் வயிற்றெரிச்சலில் ஒரு ‘காதல் கோட்டை’ உருவாகிக் கொண்டிருந்தது. ஒரு மாதத்தில் எல்லாம் பேசிப் பழகி, பிடித்துப் போய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதென முடிவு செய்யப்பட்டு, இடம் கல்லணை என முடிவு செய்யப்பட்டது. எதற்கும் உதவும் நண்பர்கள் இதற்கும் உதவியாக வேண்டுமே? போய்ப் பார்த்ததில் ஆள் சுமார் என்றும், கல்லூரி மாணவன் போல் இல்லை என்றும், கொஞ்சிக் குலாவியதில் பாதியிலேயே தலைதெறிக்க தப்பி வந்ததாகவும் தெரிவித்தனர். தீர விசாரித்ததில் அவர் எங்கோ சூப்பர்வைசராக வேலை செய்வதாக சொல்லியிருக்கிறார் இவளிடம். நாட்கள் செல்லச்செல்ல நெருக்கம் அதிகமானது. வார இறுதிகளில் வேறு தோழி வீட்டிற்கு செல்கிறேன் என்று பொய் சொல்லி அவரைப் பார்க்க செல்வது என பல களேபரங்கள் நடந்தேறியது. இடைப்பட்ட காலத்தில் நடந்த ஏதோ ஊடலில் “அவன் சரியான ஃபிராடு, அவன் சூப்பர்வைசர் இல்ல, ஏதோ இன்சூரன்ஸ் கம்பெனில வேல பாக்குறான், என்ன ஏமாத்திட்டான்” என நண்பர்களிடம் உண்மையை உளறியிருக்கிறாள். பிறகு ஊடல்கள் சமாதானமாகி “காதல் கோட்டை” தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. புதன்கிழமைகளில் ஹிந்து பேப்பர் வாங்கிக் கொண்டு கல்லூரியில் சீன் போடுவாள், கேட்டால் “எங்க மாமாவுக்கு வேலை தேடுறேன்” என்று ஏதாவது விளம்பரங்களைக் கத்தரித்துக் கொண்டிருப்பாள். இருந்தாலும் அவரைப் பாராட்டித்தான் ஆக வேண்டும் வாங்கும் ஐந்தாயிரத்திலும் இரண்டாயிரத்தை இவளுக்காக செலவு செய்த உத்தமன், உண்மையாக காதலித்து வேறு தொலைத்து விட்டார். வீட்டில் பார்த்த பெண்களையும் இவளுக்காக வேண்டாமென்று ஒதுக்கியிருக்கிறார். இப்படி பல கடுப்புகளையும்,பல காதல்களையும் சகித்துக் கொண்டு கல்லூரி படிப்பை முடிக்க வேண்டியிருந்தது. அதன் பின் எந்த ஒட்டுமில்லை, உறவுமில்லை. சில மாதங்கள் கழித்து நண்பர்கள் அழைத்திருந்தனர் “நம்ம ‘குரு’வுக்கு கல்யாணம் வர்றியாடா” எனக் கேட்க, குழம்பிப்போய் அப்ப உஷா? என்று கேட்ட கேள்விக்கு அவர்கள் சொன்ன பதில் அதிரவைத்தது. “டேய், இப்போ நம்ம உஷா Status’சே வேற டா. ஏதோ MNC’ல செலக்ட் ஆயிட்டா, மாசம் 20000 சம்பளம். இப்போ எங்களை எல்லாம் மதிக்கிறதே இல்ல டா”, என்று சொன்ன அவர்களிடம் “அப்ப காதல் கோட்டை?” என கேட்க “அவளப் பத்தி உனக்கு தெரியாததாடா, எனக்கு இருபதாயிரம் சம்பளம், நீ ஒரு நாப்பதாயிரம் வாங்கினாத் தான் நம்ம ஸ்டேட்டஸ் மேட்ச் ஆகும், அப்ப தான் எங்கப்பா ஓகே சொல்லுவாரு ன்னு கூலா சொல்லிற்று அவன கட் பண்ணிட்டாடா, பாவம் டா குரு சாகப்போயி கடைசில ஏதோ மாமா பொண்ண கட்டி வெக்க முடிவு பண்ணிட்டாங்க டா” என்று சொல்ல அவள் மேல் எரிச்சலாகவும் குரு’வின் மேல் பரிதாபமும் வந்தது.

டிஸ்கி 1: மேற்படி இவள் குரு’வின் திருமணத்திற்கே சென்று அலப்பறையை கூட்டியிருக்கிறாள்.
டிஸ்கி 2: பொதுவாக சாட்டிங்கில் சீட்டிங் செய்வது ஆண்கள் தான் என்ற பொதுவான கருத்திற்கு எதிராக இப்பதிவை வைக்கிறேன். இதில் நான் பொதுவாக பெண்களைப் பற்றி கூறவில்லை, உஷா என்ற ஒருத்தியைப் பற்றி மட்டும் தான் கூறியிருக்கிறேன், எனவே நோ டென்ஷன்..


18 comments:

நந்தா ஆண்டாள்மகன் said...

இந்த உஷாவைப் போல் நிறைய உஷாக்கள் வந்து கொண்டேதான் இருப்பார்கள்.. ஆணெண்ண பெண்ணென்ன சீட்டிங்கில் அவரவர்தான் கவனமாக இருக்கவேண்டும் தொழில்நுட்பம் வளரவளர நாம்தான் நுட்பமாக இருக்கவேண்டும்.. நல்ல பதிவு..

Natarajan said...

உஸ்! அப்பா

லியோ......... said...

உண்மை கதையை உண்மையாக கூறி இருக்க. உஷா மட்டும் இத்த படிச்சா நீ காலி மாமு

லியோ......... said...

உஷா மட்டும் இத்த பாத்த நீ காலி மாமு.. அடுத்த sms உனக்குத்தான்

vivekrocz said...

எனக்கு ஓரு படமே பார்த்த மாதிரி இருக்க

சத்யா said...

Nice and Timing Article

சிட்டி பாபு said...

பிரச்னை என்றாலே ஆண்கள் தான்அதிகம் செய்வார்கள் என நம்பும் காலம் இது, இதற்கு ஆண்களும் காரணம்.உண்மை நிலையை நண்பர்கள் மட்டுமே அறிவார்கள்.

கோமாளி செல்வா said...

உண்மை மச்சி.. பெரும்பாலும் தெரியாவதங்களோட பழகுறத குறைக்கனும் அல்லது ஜாக்கிரதயா பழகனும். அதுவே பிரச்சினைகளைத் தடுக்கும் :-)

Deepak Manavalan said...

உஷா உஸ் உஸ் உஸ் உஸ் உஸ் அண்ணா !

Deepak Manavalan said...

உஷா உஸ் உஸ் உஸ் உஸ் உஸ் உஸ் உஸ் உஸ் உஸ் !!!!

...αηαη∂.... said...

எப்போதும் முகம்மறியா நட்பு - ந்னா கொஞ்சம் உஷாரா இருக்கனும்..

அக்கினிக்குஞ்சு said...

குத்துங்க எசமான் குத்துங்க

மாய உலகம் said...

உஷா உஷாரு .... நல்லா சொன்னீங்க தல

sowmya said...

ஆணோ பெண்ணோ சீட்டிங் யார் பண்ணினாலும் தப்புதான்

விவேக் said...

டேய் குட்டையா இந்த கதையில் வரும் உஷா வின் உணமையான பெயர் என்னடா........எனக்கு புரிந்தது டா.இது உன் டியர் பிரின்ட் கதையில..... இந்த உஷா வின் உண்மையான பெயர் நான் சொல்லவா டா............

தமிழ் வண்ணம் திரட்டி said...

உங்கள் தளத்தை எங்களது தமிழ் வண்ணம் திரட்டியில் இணையுங்கள்.

Jayadev Das said...

\\பாவம் டா குரு சாகப்போயி கடைசில ஏதோ மாமா பொண்ண கட்டி வெக்க முடிவு பண்ணிட்டாங்க டா”\\ இந்தக் [நிஜக்] கதையில் வரும் குணாதிசயங்கள் [charachter] கொண்ட ஒருத்திக்காகவா உசிரை விட வேண்டும்? அவள் நல்லவளாகவே இருந்தாலும் சரி, ஒரு பெண் கிடைக்கவில்லை என்பதற்காகவா நமது வாழ்வை முடித்துக் கொள்ள வேண்டும்? இந்த பஸ் போனா என, பின்னாடியே இன்னொரு பஸ் வரும், நமது பயணத்தைத் தொடரவேண்டும், ஒரு பெண்ணுக்காக வாழ்க்கையை தொலைக்கக் கூடாதுன்னு நம்ம பசங்க உணரனும்.

Anonymous said...

பாஸ், உஷா பரவல, என் அனுபவத்துல சொல்லுறேன், இப்போது இருக்கும் பல பெண்கள் time pass லவ் ன்னு வச்சிருக்காங்க...இவங்க பயன்னோட மனச பாக்குறதே இல்லை, only their wallet is important... i broke up my relation after hearing the word "y everyone trying to marry the same girl which u love???... i was in hospital for 2 days after this incident, because of my drinking habit...