தெய்வத்திருமகள் விமர்சனம்
ஒரு தெய்வத்திருமகனுக்கும் அவனுடைய தெய்வத்திரு”மகள்”க்குமான தந்தை-மகள் பாசப்பிணைப்புப் போராட்டம் தான் கதை.

கிருஷ்ணா(விக்ரம்) ஊட்டியில் ஒரு சாக்லேட் தொழிற்சாலையில் வேலைசெய்யும் ஒரு தொழிலாளி, சொன்ன வேலைகளை சரியே செய்ய தெரிந்த, மார்க்கெட்டுக்கு போய் வரத்தெரிந்த, சாலை விதிகளை கடைப்பிடித்து வாழத் தெரிந்த ஒரு மனநிலை குன்றியவர்.  அவருக்கென அவரைப்போலவே நாலு நண்பர்கள். குழந்தை பிறந்தவுடன் மனைவி இறந்துவிட, குழந்தையை வளர்க்கும் பொறுப்பு குழந்தையாகவே உள்ள கிருஷ்ணாவினுடையதாகிறது. குழந்தை அழும்போது என்ன செய்ய வேண்டும் என்பது கூடத்தெரியாமல் முழிக்கும் விக்ரமிற்கு, உடன் பணி புரியும் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவி உதவி செய்ய ஒரே பாடலில் குழந்தை “நிலா” வளர்கிறாள், பள்ளி செல்லும் வயது வர, நிலாவை ஒரு கான்வென்டில் சேர்க்கிறார். பள்ளியின் கரஸ்பாண்டன்ட் அமலா பால்,  கிருஷ்ணாவின் காதல் மனைவியின் தங்கை. அங்கு ஆரம்பிக்கிறது பிரச்சினை. அமலா நிலாவைப் பற்றி தந்தையிடம் சொல்ல, அந்த பணக்கார தாத்தா நிலாவை தூக்கிச்செல்கிறார்., விக்ரம் அவர்கள் மேல் வழக்குத் தொடர கோர்ட்டுக்கு வருகிறார். வக்கீல்கள் அனுராதா(அனுஷ்கா), வினோ(சந்தானம்) அவர்களின் உதவியோடு எப்படி வழக்கில் வெல்கிறார்கள் என்பது மீதிக்கதை.


தரமான விக்ரம் படம், வரலாற்று விமர்சன வாக்கியத்தில் சொல்ல வேண்டுமானால் “விக்ரம் கிரிஷ்ணாவாகவே வாழ்ந்திருக்கிறார்”. அனுஷ்கா, குழந்தை நிலா ஆகியோரும் விக்ரமிற்கு ஈடு கொடுத்து நடித்துள்ளனர். நிலா கேட்கும் கேள்விகளுக்கு விக்ரம் சொல்லும் பதில்கள் சுவாரஸ்யம். கை அசைவுகளிலேயே பேசிக்கொள்கிறார்கள். நிலாவின் ஒவ்வொரு அசைவுகளும் ரசிக்க வைக்கிறது. அருந்ததிக்கு பிறகு இந்தப் படத்தில் அனுஷ்காவின் நடிப்பு பேசப்படும். கதையோடு ஒன்றி வரும் சந்தானம் டைமிங் காமெடி நன்று. நாசரின் இயல்பான நடிப்பும் கதைக்கு பலம் சேர்க்கிறது. அமலாவை அழகுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள்.


படத்தின் மற்றொரு பிளஸ், ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசை மற்றும் பாடல்கள். “கதை சொல்லப் போறேன்” பாடல் கிராஃபிக்ஸ் கலக்கல். “விழிகளில் ஒரு வானவில்” பாடல் அல்ட்ரா மோஷன் கேமரா கொண்டாட்டம். ஒளிப்பதிவாளர் விளையாடியிருக்கிறார். இடைவேளைக்குப் பிறகு ஒவ்வொரு காட்சிகளையும் ரசிக்க வைத்ததில் இயக்குனர் விஜய்க்கு ஒரு சபாஷ்..


படத்திற்கு மைனஸ் என்று பார்க்கப்போனால், விக்ரமின் கேரக்டர். ஒரு மனநிலை குன்றியவருக்கு இவ்வளவு தெரிந்திரிக்கிறதா என்பதில் லாஜிக் இடிக்கிறது. படத்தின் மற்றொரு சொதப்பல், கிளைமாக்ஸ். கோர்ட்டில் நாசர் “நிலா உன்கூட இருந்தா நீ நிலாவ பாத்துக்க மாட்ட, நிலா தான் உன்ன பாத்துக்கணும்”, ”உன்னால அவள டாக்டரா இல்ல, ஒரு நர்ஸா கூட ஆக்க முடியாது” என்று சொல்வதைப்புரிந்து கொண்டு நிலாவை அமலாவிடம் ஒப்படைப்பதெல்லாம் ரொம்ப ஓவரு.


ஆனால் இதையெல்லாம் ஒதுக்கி விட்டு ஊட்டியின் அழகான காட்சிகளுக்காகவும், விக்ரம், நிலாவின் இயல்பான நடிப்புகளுக்காக மட்டுமே பார்ப்போமெனில் கலங்கும் கண்கள் நிச்சயம்.


12 comments:

Anonymous said...

how does a mentally retard person, can become a father ? i am aksing the same question, everywhere, any answer for this

Anonymous said...

how does a mentally retard person, can become a father ? i am aksing the same question, everywhere, any answer for this

சி.பி.செந்தில்குமார் said...

>>>>
படத்திற்கு மைனஸ் என்று பார்க்கப்போனால், விக்ரமின் கேரக்டர். ஒரு மனநிலை குன்றியவருக்கு இவ்வளவு தெரிந்திரிக்கிறதா என்பதில் லாஜிக் இடிக்கிறது.

கரெக்ட்..

கூத்தாடி - SHAN said...

@Anonymous Hmmm, Thats a point :)

@S.pi and author

அவரோட characterization அப்படித்தான்.. அதாவது அவர் மன நிலை பாதிக்கபட்டவர் அல்ல! அந்த வளர்ச்சி பாதியிலேயே நின்றவர் அல்லது வளர்ச்சியின் அளவு மற்றவர்களை விட குறைவாக உள்ளது...

மெசேஜ் என்னன்னா நம்மள விட அறிவு கம்மியா இருந்தாலும் அவங்க நம்மள விட நல்லவங்க...அவருக்கு புரியும் என்பது பல காட்சிகளில் விளக்கப்பட்டுள்ளது...

...αηαη∂.... said...
This comment has been removed by the author.
Anonymous said...

என்னங்க விமர்ச்சனத்தை சப்புன்னு முடிச்சிடீங்க. ஆனால் உங்க கேள்வி சரியானது. வாழ்த்துக்கள் மற்றும் நல்ல விமர்ச்சனத்திற்கு நன்றி.

Katz said...

>>>>
படத்திற்கு மைனஸ் என்று பார்க்கப்போனால், விக்ரமின் கேரக்டர். ஒரு மனநிலை குன்றியவருக்கு இவ்வளவு தெரிந்திரிக்கிறதா என்பதில் லாஜிக் இடிக்கிறது.அதுக்குதான் படத்துல அடிக்கடி சொல்றாங்களே, ஒருத்தருக்கு விஷயம் தெரிஞ்சா பத்தாதா?

இயக்குனரின் அறிவை புரிஞ்சுக்க மாட்டிங்கிறீன்களே!

அக்கினிக்குஞ்சு said...

மனநிலை பாதிக்கபட்டவருக்கு இவ்வளவு தெரிந்தது இருக்குமா என்று கேட்பதை விட அவ்வளவு தெரிந்த மனநிலை பாதிக்கபட்டவர் என்று பொருள் கொள்வதே தமிழ் சினிமாவின் லாஜிக்

வேதாளம் said...

@ALL உங்கள் கமெண்ட்ஸ்'களுக்கு நன்றி.

@கூத்தாடி CHARACTERIZATION தான், யுந்தாலும் அவருக்கு குழந்தை என்பதெல்லாம் நம்பும்படி இல்லையே?

@ஆனந்த் விருதுக்கான படம்தான் நண்பரே

@Katz ஒருத்தருக்கு தெரிஞ்சிருந்தா போதும், ஆனா அவருக்கே எல்லாம் தெரிஞ்சிருக்கே. குழந்தைக்காக கோர்ட்டுக்கு போகணும்'ங்கற வர தெரிஞ்சிருக்கே நண்பா?

Anonymous said...

its possible to become a father a mentally retard person(i know a true story about mentally retard person who has a child)

கிராமத்தான்-சரவணன் said...

ஐய்யோ ! ஆர்வத்தை அடக்க முடியாமல், படம் பாக்கறத்துக்கு முன்னாடியே உங்க விமர்சனத்தை படிச்சுட்டேன். இப்போவே படம் பாக்கணும் போல தோணுது !

சமுத்ரா said...

good