இளைய நிலா அர்ஜுன் எக்ஸ்க்ளுசிவ்குறும்படங்களின் ஷங்கர் என்றறியப்படும் கார்க்கி அடுத்த வேட்டைக்கு தயார். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தில் அறிமுகமாகிறார் “வேதாளம்” என்கிற “அர்ஜுன்”. படப்பிடிப்பு முடிந்திருக்கும் நிலையில், தமிழ் குறும்பட உலகில் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. எங்கு பார்த்தாலும் ரசிகர்மன்றங்களும் கட்-அவுட்’களும் என்று குறும்பட உலகில் ஒரு “பவர் ஸ்டாராக” உருவாகியிருக்கிறார் வேதாளம். திரை உலகில் அவ்வப்போது பல ஸ்டார்கள் தோன்றி மறைத்தாலும், இவரின் வரவு தமிழ் குறும்பட உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த புராஜெக்ட்’டுகள் என்று பிசியாக இருக்கும் வேதாளத்தின் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி.

*** உங்களை பத்தி கொஞ்சம் சொல்லுங்க சார்..
        நானே கொஞ்சமாத்தான் இருக்கேன்(சிரிக்கிறார்). கொஞ்சமா இருக்கிறது முக்கியம் இல்ல, பொண்ணுங்க கொஞ்சுற மாதிரி இருக்கேன் அதான் முக்கியம். பொறந்தது, வளந்தது(??) எல்லாம் கேரளா. ஆனால் தமிழ் தான் என் மூச்சு, பேச்சு, வாட்சு.. அதனாலதான் தமிழ் திரை உலகத்துக்கு ஒரு கலைத் தொண்டு செய்யணும்ன்னு கிளம்பிட்டேன்.

*** இந்த படத்துல உங்க ரோல் என்ன?
        எந்த காலத்துல இருக்கீங்க நீங்க?. எங்க படத்துல ரோல் எல்லாம் இல்ல. எல்லாமே டிஜிட்டல் தான். “உங்களுக்கு என்ன டிஜிட்டல்’ன்னு கேளுங்க பதில் சொல்லுறேன்?”

*** படத்தோட கதை?
        கதை.... பெருசா சொல்லுற மாதிரி ஒண்ணும் இல்ல, ஆனா தமிழ் குறும்பட உலகில் இது ஒரு புது முயற்சியா இருக்கும். பாருங்க உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும். இதுக்கு மேல எதையும் சொல்லக்கூடாது’ன்னு டைரக்டர் சத்தியம் வாங்கிட்டாரு.

*** உங்க பொழுதுபோக்கு?
        எல்லா கலாரசிகனைப் (பக்கத்து வீட்டு கலா அல்ல) போலவும் அடுத்தவங்கள போழுதுபோக்குறதுதான் என் பொழுதுபோக்கு.

*** நடிப்புல உங்க குருவா யார நினைக்கிறீங்க?
தமிழ்ல கமல்ஹாசன், ஹிந்தில அமிதாப்பச்சன்.

*** பிடிச்ச படம்..?
        எங்க படம்தான். போனவாரம் தான் படம் “பிடிச்சோம்”, ரொம்ப மொக்கைய போட்டுட்டேனோ? “கிக்குஜிரோ, பதேர் பாஞ்சாலி” பிடிக்கும் (கெத்தாக சிரிக்கிறார்). குறும்படங்கள்ல நளன் படங்கள், “பண்ணையாரும் பத்மினியும்” (சத்தியமா குறும்படம் தாங்க) பிடிக்கும்.

*** உங்களுக்கும் அமலா பால்’க்கும் பத்திகிச்சு’ன்னு கிசுகிசு வருதே அதப்பத்தி என்ன சொல்ல வரீங்க?
        இந்த படத்தோட ப்ரோமோ ஸ்டில்ஸ் பாத்துட்டு, அடுத்த படத்துல சான்ஸ் வேணும்’ன்னு கேட்டாங்க. ஏற்கனவே நிறைய பேர் வெயிட்டிங் லிஸ்ட்(??)ல இருக்கிறதுனால முடியாதுன்னு சொல்லிட்டேன். அப்புறம் அப்பப்போ கால் பண்ணுவாங்க. நாங்க நல்ல நண்பர்கள் அவ்ளோதான்.

*** உங்க லட்சியம் என்ன?
        நான் சீக்கிறம் வளர்ந்து பெரியவனாகி வெள்ளித்திரைல ஒரு ரவுண்டு வரணும். அதுக்கான முயற்சில தான் இருக்கேன். “தமிழ்ப்படம்” படத்துல சிவா ஓட்டுன சைக்கிள தேடிக்கிட்டிருக்கேன்.

*** “இளைய நிலா” பட்டம் எப்படி வந்தது?
எங்க டைரக்டர் கார்க்கி அணில் ஃபேன், நானும் நல்லா உ’டான்ஸ் ஆடுவேன், அதனால அவரு அப்படி வெச்சுருக்கலாம். நல்லாத்தானே இருக்கு.

*** அரசியல்?
        ஹெவி காம்படிஷன், தங்கபாலு, திருமா ன்னு பல பேரு இருக்காங்க. அதனால நான் ஒரு அதிரடி ஸ்டார் ஆகிட்டு அப்புறமா அரசியலுக்கு வரலாம்ன்னு பாக்குறேன். ஆனா ஒரு விஷயம், நல்லவேளை ஆட்சி மாறிடுச்சு இல்லன்னா என் படம் வெளியாவதில் பல சிக்கல்கள் இருந்திருக்கும்.

*** உங்க ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புறிங்க?
        நான் தனியாப் பேச விரும்பல. அப்படி பேசித்தான் ஆகணும்னா “இனிமே எல்லாம் அப்டித்தான்”


திடீரென டைரக்டரிடமிருந்து "கால்" வர, வணக்கம் சொல்லி "கிளம்புங்க காத்து வரட்டும்" என்று சொல்ல தலை தெறிக்க திரும்புகிறோம்.

22 comments:

கார்க்கி said...

காத்து வந்தாதானே ஹீரோ கிளம்புவாரு ??????

வேதாளம் said...

இப்படி எல்லாம் சொல்லப்படாது.. அய்யயோ பெட்டில ஒண்ணு மிஸ் பண்ணிட்டாங்க.. அது

"God Bless"

Deepak Kumar K said...

ஹி... ஹி... ஹீரோ சார் ஒரு ஆட்டோகிராப் போட்டு குடுங்க :)

நந்தா ஆண்டாள்மகன் said...

ஹி ஹி அருமை தம்பி

mechie said...

sema kalaai

வேதாளம் said...

@deepak சாரி சார்.. அதுவா இருந்தாலும் என் மேனேஜர் கிட்ட கேட்டுக்கோங்க

@நந்தா @mechie நன்றி சகாக்களே

கார்க்கி said...

"GOD bless"

oru national award reserve pannungappaa????

வேதாளம் said...

@கார்க்கி ஆமா குரு.. அது ரொம்ப முக்கியம்..

Rajan said...

நாம வாங்குற அஞ்சுக்கும் பத்துக்கும் இந்த விளம்பரம் தேவையா?

வேதாளம் said...

@Rajan இத கூட செய்யலேனா அப்புறம் நான் எல்லாம் நடிகனாகி அப்புறம் எப்படி CM ஆகுறது? சொல்லுங்க சார்

kullabuji said...

இனி ஸ்ட்ரைட்டா CM தானா?

படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் :)

கோமாளி செல்வா said...

வாய்ப்பே இல்ல மச்சி, ரொம்ப ரொம்ப சிரிச்சேன். எல்லா பதில்களும் எனக்குப் பிடிச்ச மாதிரி அதுவும் என்னோட ஸ்டைல்ல சொன்னமாதிரி இருக்கு :-)

ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு!

கிரி ராமசுப்ரமணியன் said...

ஆஸ்ஸம் பேட்டி....

சான்சே இல்லாத நகைச்சுவை....

நீ நிறைய எழுதணும் தம்பி...

ஜெகன்..! said...

கலக்கிட்டடா அர்ஜுன்.!!! சூப்பர்.!!! சீனிவாசன் வெறும் பவுடர் ஸ்டார்ரு, நீ தான் உண்மையான பவர் ஸ்டாரு.!
Being honest, this is really an excellent article with graded humor.!!! My best wishes.! Keep going.!

ஜெகன்..! said...

கலக்கிட்டடா அர்ஜுன்.!!! சூப்பர்.!!! சீனிவாசன் வெறும் பவுடர் ஸ்டார் தான், நீ தான் உண்மையான பவர் ஸ்டார்.! Being honest, this is really an excellent article with graded humor :-))) Best Wishes.! Keep Going.!

ராஜன் said...

சின்னப்பயல வெச்சு சீன் படம் எடுக்கிற எக்குத்தப்பா சிக்கிக்கப் போவுது கார்க்கி! பாத்து பத்திரம்!

வேதாளம் said...

@ஜெகன்..! Thanks anna..

@giri //நீ நிறைய எழுதணும் தம்பி...//
எனக்கும் ஆசையாத்தான் இருக்கு.. காலம் வரும்வரை காத்திருக்கனுமே.

பரிசல்காரன் said...

மொத நாளே படிச்சுட்டேன். கமெண்ட் போட முடியாம நெட் படுத்திடுச்சு.

ஆக்சுவலா.. படம் ரிலீஸுக்கு முந்தி ப்ரமோ (ப்ரேமா அல்ல) ஷோ மாதிரி உன், டைரக்டர் பேட்டியை என் ப்ளாக்ல போடணும்னு ஐடியா வெச்சிருந்தேன். வட போச்சு!

நல்லா வந்திருக்கு அர்ஜூன்! மேல வெச்சுக்க.

arunkumar sundaramoorthy said...

Awesome.. Keep going.

jroldmonk said...

ha ha ha...

jroldmonk said...

ha ha ha...

Renu said...

அர்ஜுன் இது உங்களுக்கே கொஞ்சம் Overஆ இல்ல ..... அவ்வ்வ்வவ் முடியல