ஒரு ஊரில் அழகே உருவாய்...தோழிகளை கடுப்பேற்றி ரசிப்பதன் சுகமே அலாதி. அதிலும் அவர்களின் "பொஸஸிவ்னஸ்"ஐ சீண்டி ரசிப்பதில் ஆனந்தமோ ஆனந்தம் தான். அப்படி என் தோழியை கடுப்பெற்றி ரசித்த ஒரு SMS நிகழ்வுதான் இது.

நான்: ஹாய் டா....

தோழி: சொல்லு டா செல்லம். என்ன பண்ற? எங்கடா இருக்க? உன்னை பார்க்கணும் போல இருக்கு.

நான்: நான் இப்போ பஸ் ஸ்டேண்ட்’ல இருக்கேன் மா. உன்ன பாக்க தான் கிளம்பிட்டேன். இன்னும் அரை மணி நேரத்துல வந்துடுவேன். :) 

(இந்த அரை மணி நேரம் எவ்ளோ கடுப்பாக போறான்னு தெரியாமலே..)

தோழி: அய்யோ.. ச்ச்சோ ச்ச்வீட் டா.. சீக்கிரம் வாடா செல்லம்.

நான்: வேய்ட்டீஸ்.. இரு பஸ் ஏறிக்கிறேன். அப்புறம் மெசேஜ் பண்றேன்.

தோழி: என்ன டா பஸ் ஏறிட்டியா?

தோழி: செல்லம், மெசேஜ் பண்ணுடா.

தோழி: சீட் கெடச்சுதா டா.

தோழி: டேய்... இன்னுமா பஸ் ஏறல.

தோழி: :)

தோழி: :(

தோழி: (எம்டி மெசேஜ்)

#(நான்: மனதிற்குள், அடிப்பாவி, ஒரு அஞ்சு நிமிஷம் பஸ் ஏறி மெசேஜ் பண்றதுக்குள்ள ஆயிரம் மெசேஜ்)

நான்: i got the bus.#(கோவமா இருக்கிறதா காட்டிக்கணும், அதனால இங்க்லீஷ்)

தோழி: என்னடா கோவமா இருக்கியா? #(அட! என்ன எப்படி புரிஞ்சு வெச்சுருக்கா பாருங்க)

நான்: no.

தோழி: என்னாச்சு டா செல்லம். சாரி உன்ன கோவப் படுத்தி இருந்தா.

நான்: பரவால்ல #(நமக்கு சீக்கிரமா உருகுற மனசுங்க)

தோழி: என்ன கலர் டிரெஸ் போட்ருக்க, நானும் அதே கலர்’ல போட்டு வரேன்.

நான்: லைட் ப்ளூ ஷர்ட், ப்ளாக் பேன்ட்.

தோழி: சூப்பர் டா. அதுல நீ ரொம்ப க்யூட்’டா இருப்ப. நான் அப்போ அந்த ப்ளூ சுடி போட்டு வரேன்.

நான்: டி டி டி... பஸ் ல ஒரு சூப்பர் பொண்ணு.

தோழி: டேய்.... வேணாம்.

நான்: செம க்யூட், லவ்லி டா. பிங்க் கலர் டிரெஸ் போட்ருக்கா.

தோழி: எம்டி மெசேஜ் #(கோவமா இருக்காங்களாம்)

நான்: என்னையே பாக்குறா டா. வெயிட்டீஸ். நான் அப்புறம் மெசேஜ் பண்ணுறேன். :)  

தோழி: நீ மெசேஜ் பண்ணவே வேணாம். போ.

#(அப்புறம் ஒரு அஞ்சு நிமிஷம் நான் மெசேஜ் பண்ணல)

தோழி: :( #(ஃபீல் பண்றாங்களாம்)

நான்: நிஜமா அவ அழகா இருக்கா டா.

தோழி: இப்போ எங்க இருக்க?

நான்: அவ பேரு ஷக்தி. அவ அம்மா அவள கூப்பிட்டப்போ கேட்டேன்.

தோழி: இன்னும் எவ்ளோ நேரம் ஆகும் நீ வர.

நான்: அவ அம்மாவுக்கு நான் எழுந்து இடம் கொடுத்தேனா அவ என்ன பாத்து சிரிச்சா டா. தேங்க்ஸ்’ன்னு சொன்னா. என்னா ஸ்மைல்..! ஆஸ்ஸம். அழகு டா.

தோழி: வேற ஏதாச்சும் பேசுறியா? #(இதுக்கு பேரு பொறாமை, கேட்டா பொஸஸிவ்னஸ்’ன்னு சொல்லுவா)

நான்: என்னையே பாத்துட்டு இருக்கா. எனக்கு என்னென்னமோ பண்ணுது. ப்ளீஸ் நான் அப்புறம் மெசேஜ் பண்றேன்.

தோழி: #(இரண்டு மிஸ்டு கால், நான் எதுவும் ரிப்ளை பண்ணல)

தோழி: அவள புடிச்சிருந்தா, அப்படியே அவகூட போயிடு. பிடிக்காம யாரும் என்ன பாக்க வர வேணாம்.

நான்: :) (ஸ்மைலி மட்டும்)

தோழி: நிஜமா உனக்கு என்ன பிடிக்கலையா டா. நான் வேணாமா?

நான்: பிடிச்சிருக்கு.

தோழி: அப்புறம் ஏன் அவள பத்தி பேசி உசுர வாங்குற.

நான்: நிஜமா அவ அழகா இருக்கா டா. அழக ரசிக்கிறது தப்பா.?

தோழி: நீ ரசி, என்னமோ பண்ணு. என்கிட்டே சொல்லாத. #(கடுப்பாயிட்டா)

நான்: அத விடு. அவளும் உன் ஸ்டாப் தான். ப்ளீஸ் டா. பஸ் ஸ்டாப்’க்கு வந்துடு.

தோழி: நான் யாரையும் பாக்க விரும்பல.

நான்: ஏய். விளையாடத. நாங்க இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துடுவோம்.

தோழி: “நாங்க”ன்னு சொல்ற போடா. என்கிட்டே பேசாத. அப்ப என்ன விட அவ அவ்ளோ முக்கியமா போய்ட்டாளா.

நான்: ப்ளீஸ் ப்ளீஸ். கோச்சுக்காத டா. பஸ் ஸ்டாப் வந்துடு. அவள நீ கண்டிப்பா பாக்கணும். அப்புறம் நாம கோவிலுக்கு போலாம்.

தோழி: வேணாம். நான் வரல. மனசு சரி இல்ல. இன்னொரு நாள் பாக்கலாம்.

நான்: அப்ப அவ்ளோதானா? சரி நான் போறேன். இனி நீ  கூப்பிட்டாலும் வர மாட்டேன்.

தோழி: #(எம்டி மெசேஜ்)

நான்: வர முடியுமா, முடியாதா?

#(இரண்டு நிமிடங்கள் மெசேஜ் வரல, அவ மொபைல் சுவிட்ச் ஆப். இரண்டு நிமிடங்கள் கழித்து)

தோழி: சரி, வரேன். ஆனா அவள பாக்க மாட்டேன்.  அவள பத்தி நீ பேச கூடாது.

நான்: ச்சோ.... ச்வீட்... J

#(பஸ் ஸ்டேண்டில் காத்திருக்கிறாள், என்னைப் பார்த்ததும் கோபமாய் முகத்தை திருப்பிக் கொள்ள)

நான்: ஹாய் டா. என்ன கோவமா?

#(பதிலில்லை)

நான்: அங்க பாரு ஷக்தி.

தோழி: நான் பாக்க மாட்டேன்.

#(நான் அவள் முகத்தை தூக்கி, திருப்பி ஷக்தியை காட்ட, லேசாய் புன்னகை. அது கோபத்தோடு கூடிய அழகிய மந்திரப் புன்னகை)

நான்: அதுதான் ஷக்தி. ரெண்டு வயசு. இது அவங்க அம்மா அப்பா. அங்கிள் பாப்பா’வ கொடுங்க.

#(ஷக்தியை வாங்கி அவளிடம் கொடுக்கிறேன்)

#(கோபமும், மகிழ்ச்சியும், அதிர்ச்சியுமாய் என்னவளின் முக பாவனைகள் கண்ட எனக்கு, விவரிக்க முடியாதபடி ஒரு சந்தோஷம்)

தோழி: குட்டிப் பாப்பா பேரு ஷக்தியா? #(என்று அவளைக் கொஞ்சி ஒரு முத்தம் கொடுக்க, அவளிடம்  வாங்கிய முத்தத்தை என்னிடம் கொடுத்துச் சென்றாள் ஷக்தி.)

டிஸ்க்ளைமர்: இப்படி ஒரு தோழி இருந்து, இப்படியெல்லாம் நடந்தால் நன்றாக இருக்கும் என்று கற்பனையில் எழுத்தப்பட்டதே இந்த பதிவு.


31 comments:

ShaNmUgavEl said...

முதலில் கமன்ட் போடறதால பொழச்சிப்போ....சூப்பர்

arunkumar sundaramoorthy said...

அந்த டிஸ்கிளைமரை ரிமூவ் பண்ணு. இது கதையல்ல நிஜம்.

வந்தியத்தேவன் said...

ஷக்தி கேரக்டர் வந்தவுடனேயே கிளைமாக்ஸ் விளங்கிவிட்டது, பெண்களின் மனதை படம் பிடித்துக் காட்டியிருக்கின்றீர்கள், கலக்கல் கதை.

குழந்தபையன் said...

வருத்தபடா வாலிபர் சங்கத்தில் இணைந்திடு...


அருமை

Thirumaran.T said...

சூப்பர்..செம... இருங்க பதிவ படிச்சிட்டு மறுபடியும் வந்து கமெண்ட் போடறேன்

கார்க்கி said...

இதே சாய‌லில் ஒரு குறும்ப‌ட‌ம் வ‌ந்துச்சு. பார்த்தியா? இரு லிங்க் தேடி த‌றேன்..

க‌ல‌ர் ஐடியா ஓக்கே.. ஆனா ந‌ல்ல‌ க‌ல‌ரா பார்த்து போடுப்பா:)

Kombaipandiyaa said...

Nantraaga ullathu. thodarattum, vaazhlthugal Tholar

வேதாளம் said...

அனைவருக்கும் ரொம்ப நன்றி.

Kombaipandiyaa said...

Sirappagave irrnthathu.
Vazhlthugal Tholarl Tholar

Deepak Kumar K said...

சூப்பர்!

// arunkumar sundaramoorthy: அந்த டிஸ்கிளைமரை ரிமூவ் பண்ணு. இது கதையல்ல நிஜம்.//

இதை மீண்டும் நான் வழிமொழிகிறேன்.

வேதாளம் said...

@arunkumar @deepak நிஜமா இருந்தா நான் ஏன்பா ட்விட்டர் ல சுத்திகிட்டிருக்க போறேன்./?

jroldmonk said...

ஓகே.. :)

jroldmonk said...

ஓகே.. :)

கிராமத்தான்-சரவணன் said...

என்கிருந்துய்யா இந்தமாதிரி "தோழி"களெல்லாம் உனக்கு மாட்டுறாங்க ..! :-(

பரிசல்காரன் said...

கார்க்கிகூட சேரும்போதே நெனைச்சேன்... 

Good Post!

SOWMYA said...

ha ha ha நல்லாருக்குங்க:-) ரசித்தேன்

Anonymous said...

;-) very nice arjun..

Hari said...

Rasithaen....

Thirumaran.T said...

இப்போ உண்மையாவே படிச்சிட்டு போடறேன்...நல்லாயிருந்துது..வாழ்க வளர்க :). Font கொஞ்சம் பெரிசா போட்ட எங்கள மாதிரி பெருசுங்க சிரமம் இல்லாம படிப்போம்

Natarajan said...

நிறம் மாற்றம் அழகு! உரையாடல்கள் சுஜாதா ரசிகர் என்று பறைசாற்றுகின்றன! அசத்தல் அர்ஜீன்! ரசிகனின் விண்ணப்பம் ஏற்கனவே நிறைய பேர் காதல் எழுதுகிறார்கள்! அடுத்த பதிவு வேற ஏதாவது ஒன்றில் முயற்சி செய்யுங்கள்!

Shiva sky said...

அருமையா பதிவு செய்துள்ளிர்கள்....ஆணுக்கும் பெண்னுக்கும் ..இடையே ஆன உரையாடலை...

Anonymous said...

Good one. Feels like real.

மாய உலகம் said...

சினிமாவுல ஒரு ஹீரோவும் (ஆர்யாவ வச்சுக்குங்களேன்)...ஒரு ஹீரோயின் (உங்களுக்கு பிடிச்ச நடிகைய நினைச்சுக்கோங்க்) இப்ப இந்த பதிவை ஒரு காட்சியா பாத்த இந்த சீன் பல நாட்களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகுவது போல ஒரு கற்பனை.... ஆஹா சுவராஸ்யமான பகிர்வு.... அருமை...

நவீன் said...

இது என்னவோ அந்த குறும்பட ஷூட்டிங் நாட்களில் நடந்த உண்மை சம்பவம் போலவே தோன்றுகிறது #கார்க்கி கவனிக்கவும்
மச்சி மெசேஜ் தான் இவ்ளோ பண்றாங்க இவங்க போன் பேசும்போது பாக்கணும் #ம்ம்ம் சொல்லு ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்

M.Shanmugan said...

பொன்னுக மனசு எல்லாம் புரிஞ்சு வச்சுருக்கீங்க

Paji said...

நல்லாத்தான் இருக்கு போங்க!

கோமாளி செல்வா said...

நான் உண்மைனு நினைச்சே படிச்சேன் மச்சி :)

ஆனா ரொம்ப ரொம்ப அழகான கற்பனை!

rathinamuthu said...

disclaimer இல்லாமலே இருக்கலாம். மிக நன்றாக இருந்த்து.

rathinamuthu said...

disclaimer இல்லாமலே இருக்கலாம். மிக நன்றாக இருந்தது.

vivekrocz said...

வாழ்துக்கள்ங்க கிட்டத்தட்ட ரியல் ரேஞ்சுக்கு வந்திருக்கு

sree karthick said...

நீங்க சொன்ன இந்த வாக்கியத்த தஞ்சாவூர் கோயில் கல்வெட்டில எழுதி வைங்க...
நமக்கு பின்னாடி வர சந்ததிகள் இத பாத்து படிச்சு அதுப்படி நடப்பாங்க...