காதலிக்க வைப்பது எப்படி?

இந்த காலத்துல ஒருத்தவங்க நட்பு சீக்கிரமா கிடச்சுடுது, ஆனா காதல்?. ஒரு பையனுக்கு பொண்ணையோ, ஒரு பொண்ணுக்கு பையனையோ பிடிச்சுப் போனா அதுக்கப்புறம் ஒருத்தர் மத்தவர இம்ப்ரெஸ் பண்ணி, ஸ்நேகமாகி, அவங்களுக்கு நம்மள புரிய வெச்சு, அதுக்கப்புறம் தயங்கித் தயங்கி ப்ரோப்போஸ் பண்ணி, அதுக்கு ரிப்ளை வந்து.... இப்படி பல கஷ்டங்களைத் தாண்டிப் போனாதான் ஒரு காதல் உருவாகுது. காதலிக்க வைக்கிறது எப்படி’ன்னு தெரிஞ்சுட்டா அதுக்கப்புறம் அது ரொம்ப ஈசி அப்டித்தானே? அதுக்குத்தான் இந்த பதிவு. உங்களுக்கு தெரியாதது ஒண்ணுமில்ல, இருந்தாலும்... (இழுத்தது போதும், பதிவ ஆரம்பி)

ஒரு பெண்ணை காதலிக்க வைப்பது எப்படி? (இது பசங்களுக்கு)பசங்க அகராதில காதலிக்கிறதுக்கும், கரெக்ட் பண்ணுறதுக்கும் குறைந்தபட்சம் ஆறு வித்தியாசமாவது இருக்கும். “இந்த காலத்து பொண்ணுங்கள கரெக்ட் பண்ணுறது ஈசி, ஆனா காதலிக்க வெக்கிறது ரொம்ப கஷ்டம்” இதான் பசங்களோட இப்போதைய ஸ்டேட்டஸ். அழகா இருந்தா போதும், பைக் வெச்சிருந்தா போதும் உடனே ஓகே சொல்லிடுவாங்க’ன்னு பசங்க நினச்சா அது ரொம்ப தப்பு. இந்த காலத்து பொண்ணுங்க ரொம்பவே உஷார். “அப்புறம் என்ன தாண்டா பண்ணனும்?”, வெயிட் வெயிட். அதுக்கு தானே இந்த பதிவு. நீங்க இன்னும் எவ்வளவோ பண்ண வேண்டி இருக்கு பாஸ். உடனே ரொம்ப பயந்துடாதீங்க.... இந்த பதிவ படியுங்க. அப்புறம் எல்லாம் சுபம் தான். (ஏற்கனவே அவ்ளோ பெரிய முன்னுரை இருக்குடா, மறுபடியுமா?).

*** விளையாட்டான காரணங்களுக்காக தயவுசெஞ்சு காதலை ஆரம்பிக்காதீங்க. எதிர்காலத்துல இவளுக்கு தான் தோசை சுட்டு தர போறோம்’ன்னு உங்க மூளை சொல்லும், மனசு “ஜெஸ்ஸி, ஜெஸ்ஸி” மாதிரி அவங்க பேர சொல்லிகிட்டே இருக்கும். அப்போ தான் முடிவு பண்ணனும் அந்த பொண்ணு தான் உங்க காதலி’ன்னு.

*** உங்களுக்கு ஒரு பொண்ண பிடிச்சிட்டா, மொதல்ல நீங்க அவங்ககிட்ட நல்ல பேர் வாங்கணும், இம்ப்ரெஸ் பண்ணனும். உங்க லுக் தான் அவங்களுக்கு ஃபர்ஸ்ட் இம்ப்ரஷன். மஞ்ச கலர், ரோஸ் கலர், கிளிப்பச்சை கலர் இந்த மாதிரியெல்லாம் சட்டை போட்டா அந்த பொண்ணு இல்ல, வேற எந்த பொண்ணும் உங்கள லவ்’வாது. நீங்க கருப்பு செவப்பு, இதல்லாம் பொண்ணுங்களுக்கு முக்கியம் இல்ல. பர்சனாலிட்டியா இருக்கணும் அவ்ளோதான்.

*** அடுத்ததா அவங்கள ஈர்க்க, உங்க நடத்தை(Behavior) நல்லா இருக்கணும். கண்ணு தெரியாத பாட்டிங்களுக்கு ரோடு க்ராஸ் பண்ணி விடுறது, குழந்தைங்களோட விளையாடுறது அப்புறம் கோவில்ல அணைய போற விளக்க அணையாம கை வெச்சு தடுக்கிறது’ன்னு குஷி’லையே நீங்க நிறைய பாத்திருப்பிங்க அதுல ஏதாச்சும் ட்ரை பண்ணனும்.

*** இதல்லாம் பண்ணதுமே, அவங்க இம்ப்ரெஸ் ஆகிருப்பாங்க’ன்னு நெனச்சு உடனே போய் ஹாய், ஹல்லோ சொல்லி அடுத்த நிமிஷமே நம்பர் கேட்டா அப்புறம் அம்புட்டு தான். பொறுமை வேணும் பிரதர். மொதல்ல அவங்கள கண்ணுக்கு நேரா சந்திக்கணும் (தூரத்துல இருந்து தான்), லேசா ஒரு புன்னகை. கொஞ்ச நாளைக்கு இது போதும். அப்புறம் மெதுவா ஹாய் ஹல்லோ’ன்னு ஸ்டார்ட் பண்ணுங்க. எந்த காரணத்துக்காகவும் நம்பர் கேட்டுடாதீங்க.

*** பொண்ணுங்க’ன்னாலே பிடிக்காது, அலர்ஜி மாதிரி நடந்துக்கங்க. அவங்கதான் உங்க ஃபர்ஸ்ட் கேர்ள் ஃப்ரண்ட்’ன்னு அவங்க நம்பனும். அப்ப தான் அவங்களா உங்க கிட்ட க்ளோஸ்’ஸா வருவாங்க. (பின்னாடி அவசரத்துல ஏதாச்சும் தப்பா கேட்டுட்டாலும், இதையே சாக்கா சொல்லிடலாம்,எனக்கு உன்ன விட்டா யாரு இருக்கா?)

*** அவங்க உங்ககிட்ட சகஜமா பேசத் தொடங்கனுதுமே உடனே அவங்களோட தோழிங்ககிட்ட நட்பாக ட்ரை பண்ணாதீங்க. பத்தோட பதினொண்ணா இருக்கிறது எந்த பொண்ணுக்குமே பிடிக்காது. அவங்க தோழிங்க கிட்ட இருந்து கொஞ்சம் விலகியே இருங்க. இதுவே உங்க மேல ஒரு நல்ல அபிப்பிராயத்த ஏற்படுத்தும்,.

*** ஒரு முக்கியமான விஷயம், தனக்கு வரப்போறவனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறது பொண்ணுங்க இயல்பு. அப்படியே உங்களுக்கு கெட்ட பழக்கம் ஏதாவது இருந்தாலும் அவங்க சொல்லி நீங்க அதை நிறுத்திக்கிறதா காட்டிக்கணும், முடிஞ்சா நிறுத்திக்கணும்.

*** திறமைசாலியா இருந்தா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அதுக்காகவாவது கஷ்டப்பட்டு கிளாஸ் பர்ஸ்ட் எடுத்துடுங்க. கவிதை, கதை எழுத முடிஞ்சாலும் ஓகே. அதுக்காக தெரியாத ஒரு விஷயத்த தெரிஞ்ச மாதிரி காட்டிக்கிறது பொண்ணுங்களுக்கு சுத்தமா பிடிக்காது.

*** அப்பப்போ அவங்கள சீண்டிப் பார்க்கணும், அவங்க ரசிக்கும்படியா கிண்டல் பண்ணனும்.  எதுவா இருந்தாலும் வெளிப்படையா பேசணும். கொஞ்சம் பொறுப்பான பையனா நடந்துக்கணும்.
       
*** பொண்ணுங்களுக்கு அழகு, பணம் இதையெல்லாம் விட ரொம்ப முக்கியம் அவங்க மேல நீங்க காட்டுற அக்கறை(Care). அவங்க பிறந்தநாளை எக்காரணம் கொண்டும் நீங்க மறந்துட கூடாது. அப்புறம் அவங்க அப்பாவோ, HOD’யோ திட்டிட்டாலோ, இல்ல அவங்க ஃப்ரெண்ட்ஸ்’குள்ள எதாச்சும் சண்டை வந்துட்டாலோ நீங்க தான் ஆறுதலா இருக்கணும்.

*** நீங்க எவ்ளோ பிசியான ஆளா இருந்தாலும் அவங்க கூட நிறைய நேரம் செலவிடனும். சின்னச் சின்ன கிஃப்ட், சாக்லேட் வாங்கிக் கொடுக்கணும். விட்டுக்கொடுக்கணும், சில சமயங்கள்ல விட்டுப் பிடிக்கணும். அதுதான் அவங்களுக்குள்ள ஒரு “இது” வர காரணமா இருக்கும்.  

*** அவங்களுக்குள்ள ஒரு “இது” வந்தது உங்களுக்கு தெரிஞ்சதுமே, உடனே உங்களுக்குள்ளேயும் “அது” இருக்குன்னு சொல்லிடாதீங்க. அத சொல்லிட்டீங்கன்னா அப்புறம் லைஃப்ல ஒரு கிக் இருக்காது. அவங்கள சொல்ல வைக்கணும். அதுதான் கிக்.

*** இவ்ளோ க்ளோஸ் ஆகிட்டீங்கன்னா அப்புறம் நீங்க செய்ய வேண்டிய ஒரு முக்கியமான விஷயம், அவங்க Possessiveness ஐ சீண்டி பார்க்கணும். அதுக்கு ஒரு உதாரணம் இங்கே கிளிக் பண்ணுங்க.

*** ரெண்டு பேருக்குள்ள நல்ல புரிதல் வந்ததுக்கு அப்புறமா, ஒருவேளை நீங்க ப்ரோப்போஸ் பண்ணி அவங்க மறுத்தாலும், உங்க நட்பு தொடரும்’ங்கற ஒரு நம்பிக்கையான ஸ்டேஜ்’க்கு வந்ததுக்கு அப்புறமா, கொஞ்சநாள் அவங்களா சொல்லுற வரை வெயிட் பண்ணுங்க. இல்லையா ஒரு நல்ல நாள் குறிச்சுகிட்டு, ஒரு நல்ல கிப்ட் வாங்கிட்டு “நீ அழகா இல்ல, எனக்கு உன்ன புடிக்கல, ஆனா இதல்லாம் நடந்துடுமோ’ன்னு பயமா இருக்கு’ன்னு” இந்த மாதிரி ஏதாச்சும் சொல்லி தகிரியமா ப்ரோப்போஸ் பண்ணிடுங்க. ஒருவேளை அவங்க மறுத்தாலும் உங்க உறவு/நட்பு தொடரும். காலப்போக்கில் அவங்களே ஓகே சொல்லவும் வாய்ப்பிருக்கு.

*** நீங்க இவ்வளவு பண்ணினாலும், நேர்மையா இருந்தா மட்டுமே உங்க காதல் ஜெயிக்கும். உங்க நேர்மை காதல்ல ரொம்ப முக்கியம்.

### இதப் படிச்சுட்டு ட்ரை பண்ண போறவங்களுக்கு ஒரு ஆல் தி பெஸ்ட். “ஆணியே புடுங்க வேண்டாம்”ன்னு சொல்லுறவங்களுக்கு டபுள் “ஆல் தி பெஸ்ட்.


ஒரு பையனை காதலிக்க வைப்பது எப்படி? (இது பொண்ணுங்களுக்கு)

உங்களுக்கு ஒரு பையனை பிடிச்சிருச்சா? நீங்க மேலே சொன்ன மாதிரி அவ்ளோ கஷ்டப் பட தேவை இல்ல. உங்க வேளை ரொம்ப சிம்பிள்.

*** ஓரக்கண்ணால பார்த்து, லைட்டா கொஞ்சம் சிரிச்சுட்டு போங்க. அவ்ளோ தான். அங்க “கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்”ன்னு  பேக்கிரவுண்ட் மீஜிக் ஸ்டார்ட் ஆகிருக்கும்.

### உங்களுக்கும் ஒரு ஆல் தி பெஸ்ட்.டக்கீலா
அப்போ நான் காலேஜ் இரண்டாம் வருடம் படிச்சிட்டிருந்தேன்’ன்னு நினைக்கிறேன். ஊரிலிருந்து ஃப்ரெண்டு போன் பண்ணிருந்தான். “மச்சி எப்போடா ஊருக்கு வர்ற?” என்றான் கூட்டத்தில் ஒருவன். கொஞ்ச நேரம் யோசிச்சு, “எதுக்கு திடீர்ன்னு கூப்பிடுறானுங்க?, என்னவா இருக்கும்?” என்றெல்லாம் மனதில் தோன்றினாலும் நட்பின் காரணம் எதையும் கேட்காமல் “அடுத்த வாரம் வர்றேன்’டா. என்ன விஷயம்?” என்று கேட்டேன். “நீ மொதல்ல ஊருக்கு வா, அப்புறம் பேசிக்கலாம்”ன்னு சொல்லி கட் பண்ணிட்டானுங்க. அந்த வாரம் அதேதான் மனசுல ஓடிக்கிட்டிருந்தது. ஊருக்கு கிளம்பிட்டேன்.

ஊருக்குப் போனா ஒரே அட்வைஸ் மழை. எதுக்கெடுத்தாலும் பயப்படுற, தைரியமா இருக்கணும், வெளியூர்ல வேற போய் படிக்கிறன்னு என்ன நடுவுல உக்கார வெச்சு ஆத்து ஆத்து’ன்னு ஆத்திட்டானுங்க. நான் உருவத்திலும், மனசிலும் அப்போ சின்ன பையன் மாதிரி இருப்பேன் (இப்போ மட்டும் வளந்திட்டியா?) எதுக்கெடுத்தாலும் பயப்படுவேன், தயங்குவேன். அதுக்கு அவனுங்க ஒரு ட்ரீட்மென்ட் கொடுக்குறோம்’ன்னு சொல்லி அடுத்த நாள் பொள்ளாச்சி வரச் சொன்னானுங்க. நானும் மாமா வீட்டுக்கு போறேன்னு பொய் சொல்லிட்டு போனேன். ஏதோ அலப்பறையக் கூட்டப் போறானுங்க’ன்னு மட்டும் தெரிஞ்சுச்சு. பொள்ளாச்சி போனதும் போன் பண்ணேன். கூடிப் பேசி எல்லாரும் பார்’க்கு போறதா முடிவு பண்ணிட்டானுங்க. அவனுங்களுக்கு சரக்கடிச்ச மாதிரியும் ஆச்சு, நான் பயப்படாம தைரியமா உள்ள போய்ட்டு வந்தா என்னோட தன்னம்பிக்கை டெவலப் ஆகும்’ன்னு அறிவாளி பிளான் பண்ணானுங்க. எங்கூர்ல கள்ளுக்கடை பக்கம் கிரிக்கெட் விளையாடப் போனாலே எனக்கு பயமா இருக்கும். இதுல என்னை பார்’குள்ள கூட்டிட்டு போறானுங்க. எனக்கு அப்பவே முட்டிக்கிட்டு வந்துச்சு. “டேய்.. வேணாண்டா என்ன விட்டிருங்கடா.. வீட்ல தெரிஞ்சா பிரிச்சு மேஞ்சிருவாங்க”ன்னு கெஞ்சினேன். “பேசாம வர்றியா இல்லையா?” ன்னு மிரட்டி கூப்பிட்டு போனாங்க. போன இடம் IPL பார். கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் பக்கத்துல.

உள்ள போகும்போதே கை கால் எல்லாம் நடுக்கம் எடுத்திடுச்சு. தெரிஞ்சவங்க யாராவது என்னைப் பாத்து வீட்ல போட்டு குடுத்திடுவாங்களோ’ன்னு வேற பயம். உள்ள போகும்போதே ஒருத்தன் என்னப் பாத்து “உன் வயசு என்ன?”ன்னு மிரட்டுற மாதிரி கேட்டான். அவரை ஒரு வழியா கரெக்ட் பண்ணி, வேணும்’ன்னே நாலு பீர்’ன்னு ஆர்டர் பண்ணானுங்க, அந்த சர்வர் எனக்கெல்லாம் பீர் தர முடியாது’ன்னு சொல்லிட்டான். எனக்கு அப்பவே புரிஞ்சிடுச்சு. இன்னைக்கு என்னைய டைம்பாஸ் ஆக்கிட்டானுங்க. ஒருவேளை அவன் கொடுத்திருந்தாலும் நான் குடிச்சிருக்க மாட்டேன். அந்த ரூம்’மே இருட்டா இருந்துச்சு. பக்கத்து டேபிள்’ல இருக்கிறவங்க எல்லோரும் என்னையே பாத்துட்டு இருந்தாங்க. நானும் சுத்தி முத்தி பார்த்தேன். தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா’ன்னு. நல்லவேளை யாரும் இல்லை. அன்னைக்கு அப்படி ஒரு பயத்தோடு போச்சு. இதெல்லாம் நாலு வருஷம் முன்னாடி, பாஸ்ட் ஃபோர் இயர்ஸ்(ஆமா இவரு பெரிய மேஜர் சுந்தர்ராஜன்..)

இதல்லாம் இப்போ எதுக்கு சொல்றேன்’ன்னா நேத்து நம்ம சதீஷ்(@omakuchchi), சண்முகவேல்(@kullabuji) ரெண்டு பேரும் என்னை புதிய தலைமைச்செயலகம்(??) எதிரில் இருக்கும் சப்மரைன் பார்’க்கு அழைத்துப் போனார்கள். அங்கேயும் அதே கேள்வி. கதவு அருகில் நின்றிருந்த வாட்ச்மேன் “தம்பி, எங்க வந்த?” ன்னு அசிங்கப் படுத்த இவனுங்க ரெண்டுபேருக்கும் ஒரே சிரிப்பு. “அண்ணே, இவன் பெரிய பையன்தான்’ணே, சாப்டுவேர் இன்ஜினியரா இருக்கான்” ன்னு ஒருவழியா அந்த செக்யூரிட்டிய சமாளிச்சு உள்ள கூட்டிட்டு போய்ட்டானுங்க. காது கிழியுற சத்தம், சுத்தி ஹை-ஃபை ஆளுங்க. வாய் அகன்ற கிண்ணம், 30 மில்லி மட்டுமே கொள்ளும் கிண்ணம் என வித்தியாச வித்தியாசமான பல கிண்ணங்களையும், சரக்குகளையும் பார்த்தேன். இது அது’ன்னு பல பேர் சொன்னானுங்க, எனக்கு எதுவுமே ஞாபகம் இல்ல. டக்கீலா’ன்னு ஏதோ சொன்னானுங்க. அது மட்டும் நினைவிருக்கு. சைட் டிஷ் சாப்பிட்டு இருந்த என்னை அந்த சர்வர் கேவலமா பார்த்தான். கொஞ்ச நேரம் முடிஞ்சச்சதும் ரெண்டுபேரும் சத்தமா பேசுறானுங்க, சிரிக்கிறானுங்க. போய் டான்ஸ் ஆடுரானுங்க, பக்கத்து டேபிள்’ல போயி நல்லா என்ஜாய் பண்ணுங்க’னு சொல்றானுங்க. ரைட்டு... எந்த வம்பும் வர்றதுக்கு முன்னாடி இவனுங்கள வெளிய கூட்டிட்டி போகணுமே? ஒரு மணி நேரமா கெஞ்சி ஒருவழியா பில்’ல கட்டிட்டு வெளிய போகலாம்’ன்னு முடிவு பண்ணிட்டானுங்க. அப்பத்தான் உசுரே வந்துச்சு. சர்வர் கிட்ட கொஞ்சம் தண்ணி கேட்டேன்(வெறும் பச்சை தண்ணிதான்). அதை முகத்துல தெளிச்சுகிட்டு, சட்டை மேல் பட்டன்’ன கழட்டி விட்டு, தலைய கலச்சு விட்டுட்டேன். அப்படியே மெயின்டைன் பண்ணி கண்’ணை சுழட்டுற மாதிரி வெச்சு அந்த செக்யூரிட்டி கிட்ட நான் சரக்கடிச்ச மாதிரியே காட்டி ஏமாத்திட்டேன். ஆனா இவங்க கூட இருந்தது ஒரு நல்ல அனுபவம், நானும் இவங்கள வெச்சு நல்லா என்ஜாய் பண்ணினேன் (எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு).

என்ன, ஒரே ஒரு ஏமாற்றம் தான். கடைசி வர அந்த இடுப்பு டான்ஸ்’ஸ கண்ணுல காட்டாம விட்டுட்டாங்க


தமிழ் ட்விட்டர் விருதுகள் ஜூலை’11 (#TTA) முடிவுகள்* பிரபலமான தமிழ் ட்வீட்டர் (Popular Tamil Twitter)?
@iParisal with 34% of Votes

* பிரபலமான தமிழ் ட்வீட்டர் பெண் (Popular Tamil Tweeter- Female) ?
@arattaigirl with 52% of Votes

* சிறந்த பொழுதுபோக்கு ட்வீட்டர் (Best Entertaining Tweeter) ?
@DKCBE with 53% of Votes

* சிறந்த பொழுதுபோக்கு ட்வீட்டர் பெண் (Best Entertainer Tweeter -female) ?
@realrenu with 57% of Votes

* சிறந்த வளரும் ட்வீட்டர் (Best Emerging Tweeter) ?
@Tottodaing with 43% of Votes

* சிறந்த ட்விட்டர் கவிஞர் (Best Poet in Twitter Tamil) ?
@expertsathta with 38% of Votes

* சிறந்த தொடர்-ட்வீட்ஸ் (Best tweet series) ?
#தோழி அப்டேட்ஸ் By @iamkarki  with 58% of Votes

* சிறந்த தமிழ் ட்விட்டர் பட்டி (Best HashTag)?
#OpparisOfMayams with 68% of Votes

* சிறந்த ரீ-ட்வீட்டர் (Best ReTweeter) ?
@senthilchn with 56% of Votes

* சிறந்த தமிழார்வலர் (Best Tamil activist Tweeter) ?
@balaramanL with 39% of Votes

தமிழ் ட்விட்டர் விருதுகள் #TTA என்பது, இளம்/நல்ல ட்விட்டர்களை கண்டறிந்து அவர்களை கவுரவிக்கவும், அவர்களை வெளியுலகிற்கு அடையாளம் காணச்செய்யவும் தொடங்கப்பட்டதாகும். #TTA வின் நோக்கம், இதன் மூலம் புதிய நல்ல ட்விட்டர்கள் கிடைப்பார்கள் என்பதே. ஆனால் இதை மாதாமாதம் நடத்துவது சற்று களைப்பைத் தருவதாக சிலர் கருத்துக் கூறினர். இதனால் #TTA வின் சுவாரசியத்தை கூட்டுவதற்க்காக, இனி #TTA வை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடத்தலாம் என்று பரிந்துரைகள் வந்தவண்ணம் உள்ளன. இது குறித்து உங்கள் கருத்து தேவை.