டக்கீலா
அப்போ நான் காலேஜ் இரண்டாம் வருடம் படிச்சிட்டிருந்தேன்’ன்னு நினைக்கிறேன். ஊரிலிருந்து ஃப்ரெண்டு போன் பண்ணிருந்தான். “மச்சி எப்போடா ஊருக்கு வர்ற?” என்றான் கூட்டத்தில் ஒருவன். கொஞ்ச நேரம் யோசிச்சு, “எதுக்கு திடீர்ன்னு கூப்பிடுறானுங்க?, என்னவா இருக்கும்?” என்றெல்லாம் மனதில் தோன்றினாலும் நட்பின் காரணம் எதையும் கேட்காமல் “அடுத்த வாரம் வர்றேன்’டா. என்ன விஷயம்?” என்று கேட்டேன். “நீ மொதல்ல ஊருக்கு வா, அப்புறம் பேசிக்கலாம்”ன்னு சொல்லி கட் பண்ணிட்டானுங்க. அந்த வாரம் அதேதான் மனசுல ஓடிக்கிட்டிருந்தது. ஊருக்கு கிளம்பிட்டேன்.

ஊருக்குப் போனா ஒரே அட்வைஸ் மழை. எதுக்கெடுத்தாலும் பயப்படுற, தைரியமா இருக்கணும், வெளியூர்ல வேற போய் படிக்கிறன்னு என்ன நடுவுல உக்கார வெச்சு ஆத்து ஆத்து’ன்னு ஆத்திட்டானுங்க. நான் உருவத்திலும், மனசிலும் அப்போ சின்ன பையன் மாதிரி இருப்பேன் (இப்போ மட்டும் வளந்திட்டியா?) எதுக்கெடுத்தாலும் பயப்படுவேன், தயங்குவேன். அதுக்கு அவனுங்க ஒரு ட்ரீட்மென்ட் கொடுக்குறோம்’ன்னு சொல்லி அடுத்த நாள் பொள்ளாச்சி வரச் சொன்னானுங்க. நானும் மாமா வீட்டுக்கு போறேன்னு பொய் சொல்லிட்டு போனேன். ஏதோ அலப்பறையக் கூட்டப் போறானுங்க’ன்னு மட்டும் தெரிஞ்சுச்சு. பொள்ளாச்சி போனதும் போன் பண்ணேன். கூடிப் பேசி எல்லாரும் பார்’க்கு போறதா முடிவு பண்ணிட்டானுங்க. அவனுங்களுக்கு சரக்கடிச்ச மாதிரியும் ஆச்சு, நான் பயப்படாம தைரியமா உள்ள போய்ட்டு வந்தா என்னோட தன்னம்பிக்கை டெவலப் ஆகும்’ன்னு அறிவாளி பிளான் பண்ணானுங்க. எங்கூர்ல கள்ளுக்கடை பக்கம் கிரிக்கெட் விளையாடப் போனாலே எனக்கு பயமா இருக்கும். இதுல என்னை பார்’குள்ள கூட்டிட்டு போறானுங்க. எனக்கு அப்பவே முட்டிக்கிட்டு வந்துச்சு. “டேய்.. வேணாண்டா என்ன விட்டிருங்கடா.. வீட்ல தெரிஞ்சா பிரிச்சு மேஞ்சிருவாங்க”ன்னு கெஞ்சினேன். “பேசாம வர்றியா இல்லையா?” ன்னு மிரட்டி கூப்பிட்டு போனாங்க. போன இடம் IPL பார். கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் பக்கத்துல.

உள்ள போகும்போதே கை கால் எல்லாம் நடுக்கம் எடுத்திடுச்சு. தெரிஞ்சவங்க யாராவது என்னைப் பாத்து வீட்ல போட்டு குடுத்திடுவாங்களோ’ன்னு வேற பயம். உள்ள போகும்போதே ஒருத்தன் என்னப் பாத்து “உன் வயசு என்ன?”ன்னு மிரட்டுற மாதிரி கேட்டான். அவரை ஒரு வழியா கரெக்ட் பண்ணி, வேணும்’ன்னே நாலு பீர்’ன்னு ஆர்டர் பண்ணானுங்க, அந்த சர்வர் எனக்கெல்லாம் பீர் தர முடியாது’ன்னு சொல்லிட்டான். எனக்கு அப்பவே புரிஞ்சிடுச்சு. இன்னைக்கு என்னைய டைம்பாஸ் ஆக்கிட்டானுங்க. ஒருவேளை அவன் கொடுத்திருந்தாலும் நான் குடிச்சிருக்க மாட்டேன். அந்த ரூம்’மே இருட்டா இருந்துச்சு. பக்கத்து டேபிள்’ல இருக்கிறவங்க எல்லோரும் என்னையே பாத்துட்டு இருந்தாங்க. நானும் சுத்தி முத்தி பார்த்தேன். தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா’ன்னு. நல்லவேளை யாரும் இல்லை. அன்னைக்கு அப்படி ஒரு பயத்தோடு போச்சு. இதெல்லாம் நாலு வருஷம் முன்னாடி, பாஸ்ட் ஃபோர் இயர்ஸ்(ஆமா இவரு பெரிய மேஜர் சுந்தர்ராஜன்..)

இதல்லாம் இப்போ எதுக்கு சொல்றேன்’ன்னா நேத்து நம்ம சதீஷ்(@omakuchchi), சண்முகவேல்(@kullabuji) ரெண்டு பேரும் என்னை புதிய தலைமைச்செயலகம்(??) எதிரில் இருக்கும் சப்மரைன் பார்’க்கு அழைத்துப் போனார்கள். அங்கேயும் அதே கேள்வி. கதவு அருகில் நின்றிருந்த வாட்ச்மேன் “தம்பி, எங்க வந்த?” ன்னு அசிங்கப் படுத்த இவனுங்க ரெண்டுபேருக்கும் ஒரே சிரிப்பு. “அண்ணே, இவன் பெரிய பையன்தான்’ணே, சாப்டுவேர் இன்ஜினியரா இருக்கான்” ன்னு ஒருவழியா அந்த செக்யூரிட்டிய சமாளிச்சு உள்ள கூட்டிட்டு போய்ட்டானுங்க. காது கிழியுற சத்தம், சுத்தி ஹை-ஃபை ஆளுங்க. வாய் அகன்ற கிண்ணம், 30 மில்லி மட்டுமே கொள்ளும் கிண்ணம் என வித்தியாச வித்தியாசமான பல கிண்ணங்களையும், சரக்குகளையும் பார்த்தேன். இது அது’ன்னு பல பேர் சொன்னானுங்க, எனக்கு எதுவுமே ஞாபகம் இல்ல. டக்கீலா’ன்னு ஏதோ சொன்னானுங்க. அது மட்டும் நினைவிருக்கு. சைட் டிஷ் சாப்பிட்டு இருந்த என்னை அந்த சர்வர் கேவலமா பார்த்தான். கொஞ்ச நேரம் முடிஞ்சச்சதும் ரெண்டுபேரும் சத்தமா பேசுறானுங்க, சிரிக்கிறானுங்க. போய் டான்ஸ் ஆடுரானுங்க, பக்கத்து டேபிள்’ல போயி நல்லா என்ஜாய் பண்ணுங்க’னு சொல்றானுங்க. ரைட்டு... எந்த வம்பும் வர்றதுக்கு முன்னாடி இவனுங்கள வெளிய கூட்டிட்டி போகணுமே? ஒரு மணி நேரமா கெஞ்சி ஒருவழியா பில்’ல கட்டிட்டு வெளிய போகலாம்’ன்னு முடிவு பண்ணிட்டானுங்க. அப்பத்தான் உசுரே வந்துச்சு. சர்வர் கிட்ட கொஞ்சம் தண்ணி கேட்டேன்(வெறும் பச்சை தண்ணிதான்). அதை முகத்துல தெளிச்சுகிட்டு, சட்டை மேல் பட்டன்’ன கழட்டி விட்டு, தலைய கலச்சு விட்டுட்டேன். அப்படியே மெயின்டைன் பண்ணி கண்’ணை சுழட்டுற மாதிரி வெச்சு அந்த செக்யூரிட்டி கிட்ட நான் சரக்கடிச்ச மாதிரியே காட்டி ஏமாத்திட்டேன். ஆனா இவங்க கூட இருந்தது ஒரு நல்ல அனுபவம், நானும் இவங்கள வெச்சு நல்லா என்ஜாய் பண்ணினேன் (எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு).

என்ன, ஒரே ஒரு ஏமாற்றம் தான். கடைசி வர அந்த இடுப்பு டான்ஸ்’ஸ கண்ணுல காட்டாம விட்டுட்டாங்க


17 comments:

Philosophy Prabhakaran said...

தங்களது எண்ணமும் எழுத்தும் (வயதும் கூட) என்னைப்போலவே இருப்பதில் ஆச்சர்யம்...

Philosophy Prabhakaran said...

நானும் சமீபத்துல தான் சப் மெரைனுக்கு போனேன்.. கொஞ்சம் காஸ்ட்லி... எக்ஸ்பிரஸ் அவென்யூ அருகில் இருக்கும் ஓயாசிஸ் பார் ட்ரை பண்ணுங்க... சீப் அண்ட் பெஸ்ட்...

loganathan.s @raz_funz said...

டேய் இப்பவும் சரக்கடிச்சமாதிரியே பேசரயேடா பாவி ஆனா என்ன உன் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.. சூப்பர் டா..

Anonymous said...

இவன்(அர்ஜூன்) 7upக்கு மிக்ஸ் பன்ன water கேட்டுவிடுவானோ பயமாக இ௫ந்தது.பரவால்ல....மொடாகுடிகாரன் rawவே குடிச்சிட்டான்.

========================================

மச்சி!!!! நீ ஒ௫ கட்டிங் உள்ளவுட்டத யார்ட்டயும் சொல்லமாட்டேன்...(சரக்கு)அடிச்சி கேட்டாக்கூட சொல்லமாட்டேன்.


========================================ஆமாம்....மக்களே வாழ்வில் மறக்கமுடியா இனியதொ௫ அனுபவம்....ஏறக்குறைய நான்கு மாதங்களாக இந்த நற்சந்திப்பிற்கு காத்தி௫ந்து நேற்று தான் அரங்கேறியது.தேங்க்ஸ் டூ சதீஷ்(@omakuchchi),அர்ஜூன்(@vedhalam),அர்ஜூனின் தோழர் ஒ௫வர்.பே௫ மறந்துடுச்சி(போதைல இ௫ந்தாராமாம்!!!)

=======================================


இதுபோல இன்னும் நிறைய கீச்சுலக நண்பர்களை சந்திக்க ஆவலோடு காத்தி௫க்கிறேன் என்பதை இங்கு கூறவிழைகிறேன். முக்கியமாக @cheethaa @iamkarki @RajanLeaks @CrazyGanesh @DKCBE @I_Santhosh @manion இவர்களையெல்லாம் சந்தித்தே தீரவேண்டும்.

----@kullabuji on twitter

பரிசல்காரன் said...

அப்ப ரியல் லைஃப்லயும் நீ ஏழுதானா? 

கார்க்கி said...

புட்டிக்கதைகள்ல நடிச்ச உடனே பாருக்கு போயாச்சா.. ரை ரை.. :)

அப்புறம், மேஜர்னாலே பெரியவர்னுதான் அர்த்தம். அப்புறம் என்ன “பெரிய மேஜர் சுந்தர்ராஜன்”?

மாணவன் said...

வணக்கம் தல,
அந்த (புட்டிக்கதைகள்) ஏழுதான் இந்த அர்ஜூனா வாழ்த்துக்கள் தல... :)

மாணவன் said...

//ஒரே ஒரு ஏமாற்றம் தான். கடைசி வர அந்த இடுப்பு டான்ஸ்’ஸ கண்ணுல காட்டாம விட்டுட்டாங்க //

என்ன ஒரு வில்லத்தனம்! :))

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

Philosophy Prabhakaran said...
நானும் சமீபத்துல தான் சப் மெரைனுக்கு போனேன்./// உன்னையும் உள்ள விட்டு இருக்கமாட்டேன்களே????

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், உங்கள் பதிவினை பிலோசபி பாஸ் இன் ஒயின் ஷாப் அறிமுகத்தில் பார்த்தேன், இனித் தொடர்ந்தும் வருவேன்.

Renu said...

அந்த குள்ள புஜ்ஜிக்கூடவும் ஓமக்குட்ச்சி கூடவும் சேராதன்னு நான் உனக்கு அப்பவே கொடுத்தேன் நீ கேட்காம அவுங்க கூட சுத்துரியா ? வெளங்குன மாதிரி தான் ஹும் .... (பதிவு ரொம்ப நாளா இருக்கு :-))

வேதாளம் said...

@all நன்றி

@குள்ளபுஜி: அடுத்த தடவ வேற பார் போலாம் மச்சி. செவென் அப் கூலிங்'கெ இல்ல

@பரிசல் நான் ஏழு'வாவே மாறிட்டேன்.

@கார்க்கி :)

@ரேணு: உனக்கு சரக்கு கொடுக்கல்லேன்னு பொறாம படாத.. இது தெய்வீக நட்பு.

Philosophy Prabhakaran said...

@ !* வேடந்தாங்கல் - கருன் *!
// உன்னையும் உள்ள விட்டு இருக்கமாட்டேன்களே???? //

நாங்கல்லாம் யாரு... முகத்தில் மீசை, தாடி வளரலைன்னாலும் தலைமுடியை முரட்டுத்தனமா வளர்த்து பெரிய மனுஷன் லுக் கொடுப்போம்ல...

அரசன் said...

சார் தெளிவா சொல்லி இருக்கீங்க ஆனா எனக்கு தான் புரியலை...

கோவை நேரம் said...

அங்க இடுப்பு டான்ஸ் இருக்கா..?அடடா ... மிஸ் பண்ணிட்டமோ ..?

கோமாளி செல்வா said...

//அப்படியே மெயின்டைன் பண்ணி கண்’ணை சுழட்டுற மாதிரி வெச்சு அந்த செக்யூரிட்டி கிட்ட நான் சரக்கடிச்ச மாதிரியே காட்டி ஏமாத்திட்டேன். //

நீ அறிவாளி மச்சி :))

கிரி ராமசுப்ரமணியன் said...

//நானும் இவங்கள வெச்சு நல்லா என்ஜாய் பண்ணினேன்//

என்னக் கொடுமை சரவணன் இது?