காதலிக்க வைப்பது எப்படி?

இந்த காலத்துல ஒருத்தவங்க நட்பு சீக்கிரமா கிடச்சுடுது, ஆனா காதல்?. ஒரு பையனுக்கு பொண்ணையோ, ஒரு பொண்ணுக்கு பையனையோ பிடிச்சுப் போனா அதுக்கப்புறம் ஒருத்தர் மத்தவர இம்ப்ரெஸ் பண்ணி, ஸ்நேகமாகி, அவங்களுக்கு நம்மள புரிய வெச்சு, அதுக்கப்புறம் தயங்கித் தயங்கி ப்ரோப்போஸ் பண்ணி, அதுக்கு ரிப்ளை வந்து.... இப்படி பல கஷ்டங்களைத் தாண்டிப் போனாதான் ஒரு காதல் உருவாகுது. காதலிக்க வைக்கிறது எப்படி’ன்னு தெரிஞ்சுட்டா அதுக்கப்புறம் அது ரொம்ப ஈசி அப்டித்தானே? அதுக்குத்தான் இந்த பதிவு. உங்களுக்கு தெரியாதது ஒண்ணுமில்ல, இருந்தாலும்... (இழுத்தது போதும், பதிவ ஆரம்பி)

ஒரு பெண்ணை காதலிக்க வைப்பது எப்படி? (இது பசங்களுக்கு)பசங்க அகராதில காதலிக்கிறதுக்கும், கரெக்ட் பண்ணுறதுக்கும் குறைந்தபட்சம் ஆறு வித்தியாசமாவது இருக்கும். “இந்த காலத்து பொண்ணுங்கள கரெக்ட் பண்ணுறது ஈசி, ஆனா காதலிக்க வெக்கிறது ரொம்ப கஷ்டம்” இதான் பசங்களோட இப்போதைய ஸ்டேட்டஸ். அழகா இருந்தா போதும், பைக் வெச்சிருந்தா போதும் உடனே ஓகே சொல்லிடுவாங்க’ன்னு பசங்க நினச்சா அது ரொம்ப தப்பு. இந்த காலத்து பொண்ணுங்க ரொம்பவே உஷார். “அப்புறம் என்ன தாண்டா பண்ணனும்?”, வெயிட் வெயிட். அதுக்கு தானே இந்த பதிவு. நீங்க இன்னும் எவ்வளவோ பண்ண வேண்டி இருக்கு பாஸ். உடனே ரொம்ப பயந்துடாதீங்க.... இந்த பதிவ படியுங்க. அப்புறம் எல்லாம் சுபம் தான். (ஏற்கனவே அவ்ளோ பெரிய முன்னுரை இருக்குடா, மறுபடியுமா?).

*** விளையாட்டான காரணங்களுக்காக தயவுசெஞ்சு காதலை ஆரம்பிக்காதீங்க. எதிர்காலத்துல இவளுக்கு தான் தோசை சுட்டு தர போறோம்’ன்னு உங்க மூளை சொல்லும், மனசு “ஜெஸ்ஸி, ஜெஸ்ஸி” மாதிரி அவங்க பேர சொல்லிகிட்டே இருக்கும். அப்போ தான் முடிவு பண்ணனும் அந்த பொண்ணு தான் உங்க காதலி’ன்னு.

*** உங்களுக்கு ஒரு பொண்ண பிடிச்சிட்டா, மொதல்ல நீங்க அவங்ககிட்ட நல்ல பேர் வாங்கணும், இம்ப்ரெஸ் பண்ணனும். உங்க லுக் தான் அவங்களுக்கு ஃபர்ஸ்ட் இம்ப்ரஷன். மஞ்ச கலர், ரோஸ் கலர், கிளிப்பச்சை கலர் இந்த மாதிரியெல்லாம் சட்டை போட்டா அந்த பொண்ணு இல்ல, வேற எந்த பொண்ணும் உங்கள லவ்’வாது. நீங்க கருப்பு செவப்பு, இதல்லாம் பொண்ணுங்களுக்கு முக்கியம் இல்ல. பர்சனாலிட்டியா இருக்கணும் அவ்ளோதான்.

*** அடுத்ததா அவங்கள ஈர்க்க, உங்க நடத்தை(Behavior) நல்லா இருக்கணும். கண்ணு தெரியாத பாட்டிங்களுக்கு ரோடு க்ராஸ் பண்ணி விடுறது, குழந்தைங்களோட விளையாடுறது அப்புறம் கோவில்ல அணைய போற விளக்க அணையாம கை வெச்சு தடுக்கிறது’ன்னு குஷி’லையே நீங்க நிறைய பாத்திருப்பிங்க அதுல ஏதாச்சும் ட்ரை பண்ணனும்.

*** இதல்லாம் பண்ணதுமே, அவங்க இம்ப்ரெஸ் ஆகிருப்பாங்க’ன்னு நெனச்சு உடனே போய் ஹாய், ஹல்லோ சொல்லி அடுத்த நிமிஷமே நம்பர் கேட்டா அப்புறம் அம்புட்டு தான். பொறுமை வேணும் பிரதர். மொதல்ல அவங்கள கண்ணுக்கு நேரா சந்திக்கணும் (தூரத்துல இருந்து தான்), லேசா ஒரு புன்னகை. கொஞ்ச நாளைக்கு இது போதும். அப்புறம் மெதுவா ஹாய் ஹல்லோ’ன்னு ஸ்டார்ட் பண்ணுங்க. எந்த காரணத்துக்காகவும் நம்பர் கேட்டுடாதீங்க.

*** பொண்ணுங்க’ன்னாலே பிடிக்காது, அலர்ஜி மாதிரி நடந்துக்கங்க. அவங்கதான் உங்க ஃபர்ஸ்ட் கேர்ள் ஃப்ரண்ட்’ன்னு அவங்க நம்பனும். அப்ப தான் அவங்களா உங்க கிட்ட க்ளோஸ்’ஸா வருவாங்க. (பின்னாடி அவசரத்துல ஏதாச்சும் தப்பா கேட்டுட்டாலும், இதையே சாக்கா சொல்லிடலாம்,எனக்கு உன்ன விட்டா யாரு இருக்கா?)

*** அவங்க உங்ககிட்ட சகஜமா பேசத் தொடங்கனுதுமே உடனே அவங்களோட தோழிங்ககிட்ட நட்பாக ட்ரை பண்ணாதீங்க. பத்தோட பதினொண்ணா இருக்கிறது எந்த பொண்ணுக்குமே பிடிக்காது. அவங்க தோழிங்க கிட்ட இருந்து கொஞ்சம் விலகியே இருங்க. இதுவே உங்க மேல ஒரு நல்ல அபிப்பிராயத்த ஏற்படுத்தும்,.

*** ஒரு முக்கியமான விஷயம், தனக்கு வரப்போறவனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறது பொண்ணுங்க இயல்பு. அப்படியே உங்களுக்கு கெட்ட பழக்கம் ஏதாவது இருந்தாலும் அவங்க சொல்லி நீங்க அதை நிறுத்திக்கிறதா காட்டிக்கணும், முடிஞ்சா நிறுத்திக்கணும்.

*** திறமைசாலியா இருந்தா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அதுக்காகவாவது கஷ்டப்பட்டு கிளாஸ் பர்ஸ்ட் எடுத்துடுங்க. கவிதை, கதை எழுத முடிஞ்சாலும் ஓகே. அதுக்காக தெரியாத ஒரு விஷயத்த தெரிஞ்ச மாதிரி காட்டிக்கிறது பொண்ணுங்களுக்கு சுத்தமா பிடிக்காது.

*** அப்பப்போ அவங்கள சீண்டிப் பார்க்கணும், அவங்க ரசிக்கும்படியா கிண்டல் பண்ணனும்.  எதுவா இருந்தாலும் வெளிப்படையா பேசணும். கொஞ்சம் பொறுப்பான பையனா நடந்துக்கணும்.
       
*** பொண்ணுங்களுக்கு அழகு, பணம் இதையெல்லாம் விட ரொம்ப முக்கியம் அவங்க மேல நீங்க காட்டுற அக்கறை(Care). அவங்க பிறந்தநாளை எக்காரணம் கொண்டும் நீங்க மறந்துட கூடாது. அப்புறம் அவங்க அப்பாவோ, HOD’யோ திட்டிட்டாலோ, இல்ல அவங்க ஃப்ரெண்ட்ஸ்’குள்ள எதாச்சும் சண்டை வந்துட்டாலோ நீங்க தான் ஆறுதலா இருக்கணும்.

*** நீங்க எவ்ளோ பிசியான ஆளா இருந்தாலும் அவங்க கூட நிறைய நேரம் செலவிடனும். சின்னச் சின்ன கிஃப்ட், சாக்லேட் வாங்கிக் கொடுக்கணும். விட்டுக்கொடுக்கணும், சில சமயங்கள்ல விட்டுப் பிடிக்கணும். அதுதான் அவங்களுக்குள்ள ஒரு “இது” வர காரணமா இருக்கும்.  

*** அவங்களுக்குள்ள ஒரு “இது” வந்தது உங்களுக்கு தெரிஞ்சதுமே, உடனே உங்களுக்குள்ளேயும் “அது” இருக்குன்னு சொல்லிடாதீங்க. அத சொல்லிட்டீங்கன்னா அப்புறம் லைஃப்ல ஒரு கிக் இருக்காது. அவங்கள சொல்ல வைக்கணும். அதுதான் கிக்.

*** இவ்ளோ க்ளோஸ் ஆகிட்டீங்கன்னா அப்புறம் நீங்க செய்ய வேண்டிய ஒரு முக்கியமான விஷயம், அவங்க Possessiveness ஐ சீண்டி பார்க்கணும். அதுக்கு ஒரு உதாரணம் இங்கே கிளிக் பண்ணுங்க.

*** ரெண்டு பேருக்குள்ள நல்ல புரிதல் வந்ததுக்கு அப்புறமா, ஒருவேளை நீங்க ப்ரோப்போஸ் பண்ணி அவங்க மறுத்தாலும், உங்க நட்பு தொடரும்’ங்கற ஒரு நம்பிக்கையான ஸ்டேஜ்’க்கு வந்ததுக்கு அப்புறமா, கொஞ்சநாள் அவங்களா சொல்லுற வரை வெயிட் பண்ணுங்க. இல்லையா ஒரு நல்ல நாள் குறிச்சுகிட்டு, ஒரு நல்ல கிப்ட் வாங்கிட்டு “நீ அழகா இல்ல, எனக்கு உன்ன புடிக்கல, ஆனா இதல்லாம் நடந்துடுமோ’ன்னு பயமா இருக்கு’ன்னு” இந்த மாதிரி ஏதாச்சும் சொல்லி தகிரியமா ப்ரோப்போஸ் பண்ணிடுங்க. ஒருவேளை அவங்க மறுத்தாலும் உங்க உறவு/நட்பு தொடரும். காலப்போக்கில் அவங்களே ஓகே சொல்லவும் வாய்ப்பிருக்கு.

*** நீங்க இவ்வளவு பண்ணினாலும், நேர்மையா இருந்தா மட்டுமே உங்க காதல் ஜெயிக்கும். உங்க நேர்மை காதல்ல ரொம்ப முக்கியம்.

### இதப் படிச்சுட்டு ட்ரை பண்ண போறவங்களுக்கு ஒரு ஆல் தி பெஸ்ட். “ஆணியே புடுங்க வேண்டாம்”ன்னு சொல்லுறவங்களுக்கு டபுள் “ஆல் தி பெஸ்ட்.


ஒரு பையனை காதலிக்க வைப்பது எப்படி? (இது பொண்ணுங்களுக்கு)

உங்களுக்கு ஒரு பையனை பிடிச்சிருச்சா? நீங்க மேலே சொன்ன மாதிரி அவ்ளோ கஷ்டப் பட தேவை இல்ல. உங்க வேளை ரொம்ப சிம்பிள்.

*** ஓரக்கண்ணால பார்த்து, லைட்டா கொஞ்சம் சிரிச்சுட்டு போங்க. அவ்ளோ தான். அங்க “கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்”ன்னு  பேக்கிரவுண்ட் மீஜிக் ஸ்டார்ட் ஆகிருக்கும்.

### உங்களுக்கும் ஒரு ஆல் தி பெஸ்ட்.29 comments:

Natarajan said...

எப்படி இருந்த நீ இப்படி ஆகிட்ட!

மற்றபடி பதிவு சூப்பர் சகா!

suryajeeva said...

தொப்பை விழுந்த ஆண்களையும் சொட்டை தலை ஆண்களையும் தான் பெண்கள் விரும்புவதா என் மனைவி ஒரே புலம்பல்... விக் வைங்க, தொப்பைய குறைங்கன்னு... வயசானாலும்...

திருமாறன்.தி said...

நல்லாயிருந்தது தம்பி.கிப் இட் அப் (உங்க எழுத்த சொன்னேன்). உங்களுக்கு பதில் நானே டிவிட்டர்ல போஸ்டர் ஒட்டிட்டேன்.

krishna said...

*** நீங்க இவ்வளவு பண்ணினாலும், நேர்மையா இருந்தா மட்டுமே உங்க காதல் ஜெயிக்கும். உங்க நேர்மை காதல்ல ரொம்ப முக்கியம். Some times boys has to lie to cover up their mistakes or to impress the girls. Is it honesty.

Thanda_soru@twitter.com said...

//அதுக்காகவாவது கஷ்டப்பட்டு கிளாஸ் பர்ஸ்ட் எடுத்துடுங்க.// இப்போ தான் தெரியுது நீங்க எதுக்கு பர்ஸ்ட் மார்க் எடுத்தீங்கன்ணு!! VERY USEFULL!!!

M.Shanmugan said...

பதிவு கலக்கல்.நீங்க எப்பூடி காதலிக்கிறதில கிளாஸ் அடிச்சிருக்கீங்க போல.

வேதாளம் said...

@Natarajan யோவ்.. நான் எப்பவும் போல தான் இருக்கேன்.

@திருமாறன் நன்றி தல

@கிருஷ்ணா: அது காதலுக்கு அப்போறம். ஆயிரம் பொய் சொல்லியாவது கல்யாணத்த பண்ணனுமே.

@thanda_soru: யாய்... எத எதோட முடுச்சு போடுறீங்க?

@ஷண்முகம்: எல்லாமே ஒரு கேள்வி ஞானம் தான் தல.

கோகுல் said...

சில சமயங்கள்ல விட்டுப் பிடிக்கணும். அதுதான் அவங்களுக்குள்ள ஒரு “இது” வர காரணமா இருக்கும். //

எதாவது வந்தா சரி.
எதுக்கு தேவையில்லாம ஆணிய புடிங்கிகிட்டு!ஐ'ம் எஸ்கேப்!

ILA(@)இளா said...

ஏன்? எதுக்கு? எங்கே? எப்படி? .. நடுவால நடுவால மூச்சு விடற சத்தம் போட்டா மணிரத்னம் பட உணர்வு வராது..? சும்மா சொல்லனும்னு தோணிச்சு சொன்னேன். ஏன்யா.. ஏன் இப்படி?

Unknown said...

காதல் இல்லாமல் ஒரு தனிப்பட்ட எந்த மதிப்பை கொண்டிருக்கிறது. புகழின் இல்லை தொகை காதல் ஒரு ஏங்குகிறான் நிறைவேற்றிக்கொள்ள முடியும். ஒரே ரஜினி தான் காட்சிகள் தெரியும் இங்கே சொடுக்கவும்
http://bit.ly/n9GwsR

SOWMYA said...

கலகலப்பான பதிவு. சூப்பர் அர்ஜுன் :)

amas said...

ரூம் போட்டு யோசிச்சு நல்லா எழுதியிருக்கீங்க. சில சமயம் டக்குன்னு கூட காதல் ஏற்பட்டிடும். அது தெய்வீகக் காதல்னு நினைக்கிறேன் :)) நல்லப் பதிவு. எழுதவேயில்லையே என்று சொன்னதும் உடனே எழுதியதற்கு நன்றி!
amas32

selva ganapathy said...

நல்ல இருந்தது அர்ஜூன் ஆனாலும் பல குறிப்புகளை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் :)

கார்க்கி said...

ithellaam ethukku???????? ithu illamale love panna vakkalaam..

பரிசல்காரன் said...

செம ஃப்ளோ பதிவுல.

பதிவுலகத்துல அடுத்த கட்டத்துக்கு (விண்டோ) வந்துட்ட!

ரசிச்சேன்..!

Anonymous said...

சூப்பர்டா...இன்னும் நிறைய பாயின்ட்ஸ் சேத்தி௫க்கலாம்....


supersinger unni sir மாதிரி சொல்லனும்னா...

"How is it ya!!mmm...Just a Rocking Performance..Keep it Up"

Sam said...

Idhayellam munnadiyae solradhillaya? Adhangam!

வேதாளம் said...

@ila 'பிரபல' பதிவர் ஆக வேற வழி தெரியல சாமி.

@amas @sowmi :)

@கார்க்கி: குருவே... சரணம்.

@பரிசல்: அப்படியா சொல்லுரிங்க? எனக்கேதும் மாற்றம் தெரியல. நான் இன்னும் சின்ன பிள்ளை தான்

கிரி ராமசுப்ரமணியன் said...

என்னேயொரு சேவை. உம்மைப்போன்றோரின் உதவியைத்தான் காதல்கூறும் நல்லுலகம் எதிர்நோக்கியிருக்கிறது. இதை அப்பிடியே கண்ணகி சிலைக்குக் கீழே காப்பி பேஸ்ட் அடிக்கவும். :)

வேதாளம் said...

@கிரி கண்ணகி சிலை'ல காப்பி பேஸ்ட் அடிக்கிறது தப்பில்ல. ஆனா அதுக்கு பக்கத்துல தானே ஐ.ஜி ஆபீஸ் இருக்கு.

Sathesh Chellappa said...

அடியேய் இன்னொரு தடவ என் ப்ளாக்க படிச்சுட்டு கமென்ட் போடுங்கன்னு என் செல் போன்க்கு மெசேஜ் அனுப்பின கொன்றுவேன்

Sathesh Chellappa said...

அடியேய் இன்னொரு தடவ என் ப்ளாக்க படிச்சுட்டு கமென்ட் போடுங்கன்னு என் செல் போன்க்கு மெசேஜ் அனுப்பின கொன்றுவேன்

கோமாளி செல்வா said...

சூப்பர் மச்சி.. நானும் இத முயற்சிக்கட்டா?

அது சரி இதெல்லாம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுதானே?

எங்கள் வச்சு முயற்சிக்கிறியோ?

நல்லா இருக்கு :)

கிரி ராமசுப்ரமணியன் said...

//Sathesh Chellappa said...
அடியேய் இன்னொரு தடவ என் ப்ளாக்க படிச்சுட்டு கமென்ட் போடுங்கன்னு என் செல் போன்க்கு மெசேஜ் அனுப்பின கொன்றுவேன்//

Super like :)

vivekrocz said...

பாஸ் நாம ஒரு படமெடுக்கலாமா? நீங்கதா ஹீரோ

Anonymous said...

பாஸ் பல நாட்களுக்கு பிறகு உங்க பதிவ படிச்சிட்டு லவ் பண்ண TRY பண்ண போறன் THANX

t.vijay krishanee said...

ungalathu addvisakettu erichalvaumnu nenache aana ennakulla love strat agnu na nenachikooda parkala

adil ahamed said...

Friends my name Haja ,ennoda loveku help pannuvingala please help

Anonymous said...

எதிர்காலத்துல இவளுக்கு தான் தோசை சுட்டு தர போறோம்’ன்னு உங்க மூளை சொல்லும், மனசு “ஜெஸ்ஸி, ஜெஸ்ஸி” மாதிரி அவங்க பேர சொல்லிகிட்டே இருக்கும்...... nice one frnd...