கடுப்பேத்துறாங்க மை லார்ட்
இந்த பேச்சிலர் பசங்க வாழ்க்கை இருக்கே, அது ரொம்ப கஷ்டம் சார். பணக்கஷ்டத்த கூட சமயங்கள்ல தாங்கிக்கலாம். ஆனா மனக்கஷ்டத்த? யாருகிட்ட சொல்லி அழ? மிருதங்கத்துக்கு ரெண்டுபக்கமும் அடி’ங்கற மாதிரி எங்கள மாதிரி பசங்களுக்கு எங்க போனாலும் கஷ்டம் தான் (பொலம்ப ஆரம்பிச்சுட்டாண்டா, இனி நிறுத்த மாட்டானே..). இவ்ளோ கஷ்டத்தோட திக்குத் தெரியாம அலைஞ்சிக்கிட்டிருப்போம். கஷ்டத்தோட கஷ்டமா இன்னும் எவ்ளோ கஷ்டம் வந்தாலும் தாங்கிக்கிற மனப்பக்குவம் எங்கள்ல பலருக்கும் வந்துடுச்சு. ஆனா கஷ்டத்தோட சேர்ந்து கடுப்பு வரும்போது தான் வாழ்க்கை திசை மாறுது. “உனக்கு உன் கஷ்டம்..”ங்கற மாதிரி கஷ்டம்’ங்கறது எல்லாருக்கும் இருக்கு. இப்படி கஷ்டத்த கொடுக்குறவங்களக் கூட “மறப்போம், மன்னிப்போம்”ன்னு வாழ்ந்துக்கிட்டிருக்கோம். ஆனா இந்த பேச்சிலர் பசங்கள கடுப்பேத்துறவங்க சிலர் இருக்காங்க பாருங்க. அவங்க மேலதான் சார் எரிச்சலா வருது. “அப்படி என்னடா கடுப்பு?”ன்னு கேட்குறீங்களா? நீங்க கேட்கலேன்னாலும் நான் சொல்லித்தான் தீருவேன்.(ஒரே குஷ்டமப்பா....)


என்னடா வாழ்க்கை, கஷ்டம், கடுப்பு’ன்னெல்லாம் பேசுறானே சீரியஸா எதையாவது எழுதிருப்பானோ?’ன்னு படிச்சுட்டு கடைசில என்ன திட்டக்கூடாது சொல்லிப்புட்டேன். பேச்சிலர் – கஷ்டம் – கடுப்பு இதையெல்லாம் பத்தி ஒரு (அழகான, அறிவான) பேச்சிலர் பையன் பேசும்போதே தெரிஞ்சிருக்க வேண்டாமா? கண்டிப்பா இவன் காதல் இல்லேன்னா பொண்ணுங்களப் பத்திதான் பேசப்போறான்’னு. ஒருவேளை அதை நீங்க ஊகிச்சிருந்தா “விண்ணைத்தாண்டி வருவாயா”ல சிம்பு கணேஷ பார்த்து சொல்லுவாரே, அதே மாதிரி ”ஜீனியஸ் சார் நீங்க”. இங்க என்ன எழுதப் போறேன்னு தானே பாக்குறீங்க? அது ஒண்ணுமில்ல சார், சிம்பிள் மேட்டர். காதல்’ங்கற பேர்ல பேச்சிலர் பசங்கள (சமயங்கள்ல குடும்பஸ்தர்களையும்) கடுப்பேத்துற சில இன்சிடன்ஸ்(நிகழ்வுகள்) நம்ம வாழ்க்கைல தினசரி நடக்குது. அதையே ஒரு பதிவா சொல்லணும்ன்னு தோணிச்சு. அதான்.... (தம்பி, டீ இன்னும் வரல., போதும் டா பதிவ ஆரம்பி).


வேலை தேடுறதுக்கோ, இன்டர்வியூ’க்கோ, இல்ல அய்யய்யோ பத்து மணிக்குள்ள லாகின் பண்ணனுமே’ன்னோ அவசர அவசரமா கிளம்பிக்கிட்டிருப்போம். பஸ் ஏறினா செம கும்பலா இருக்கும். “எச்சூஸ்மி, ஒரு கிண்டி ப்ளீஸ்” ன்னு பக்கத்துல நிக்கிற பொண்ணு கிட்ட கிழிஞ்சி போன அஞ்சு ரூபாய கொடுத்தா அந்த பொண்ணு கேவலமா ஒரு லுக்கு விடும். நமக்கென்ன இதெல்லாம் புதுசா?’ங்கற மாதிரி அதை சகிச்சுக்கிட்டு கடிகாரத்த பாக்கும்போதே பின்னாடி இருந்து ஒருத்தன் “சைனா செட்”ல “மாம்பழம் விக்கிற கண்ணம்மா, உன் மனசுக்குள்ள என்னம்மா” ன்னு ஆரம்பிச்சு பஸ்’சுக்கே ஒலிபரப்பி’ட்டிருப்பான். கமல் சொல்லுற மாதிரி “கேட்கவே நாராசமா” இருக்கும். அப்படி இப்படி’ன்னு சகிச்சுக்கிட்டு கொஞ்ச நேரத்துல கும்பல் இறங்கிடுச்சுனா பஸ் ஃப்ரீ ஆயிடும். சரி பார்க்க யூத்’தா இருக்கானே ன்னு, ஏதாவது பையன் உக்காந்திருந்தா அவன் பக்கத்துல போயி உக்காருவோம். அவன் ஹெட் போன்’ன மாட்டிகிட்டு ஏதோ பர்சனலா பேசுறோம்’ன்னு மனசுல நெனச்சுகிட்டு வறுத்துக்கிட்டிருப்பான், ஆனா அவன் பேசுறது ஊருக்கே கேட்கும். “ஏய், என்ன சாப்டியா?” ல ஆரம்பிச்சு “ஹ்ம்ம் அப்புறம், ம்ம்ம் சொல்லு”ன்னு நீண்டுகிட்டே இருக்கும் பேச்சு. ஒரு கட்டத்துல எல்லை மீறிப் போயி “செல்லம், புஜ்ஜிமா” ன்னு கொஞ்சுவான். கடுப்பு லைட்’டா ஸ்டார்ட் ஆகியிருக்கும். கொஞ்ச நேரத்துல “ப்ளீஸ், ஒரு தடவ சொல்லு”ன்னு கெஞ்சுவான், சொன்னதும் “உம்மா உம்மா உம்மா” ன்னு ஆரம்பிச்சுடுவான். அந்த சமயத்துல வெறுப்பின் உச்சத்துக்கே போயிடுவோம். அந்த நாள் ஃபுல்லா வெறுப்பிலேயே ஓடிடும்.


சாயங்காலமா, வேலை கிடைக்கலயேன்னோ, மனசு சரியில்லையேன்னோ ஏதோ ஒண்ணு உறுத்தும். சரி அம்பது ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுட்டு எங்காவது ஒரு ரைட்(Ride) போலாம்’ன்னு கிளம்புவோம். “ரோட்டுக்கு நடுவே இருக்கிற வெள்ளைக் கோடுகள் கடந்து போவதைப் போல கஷ்டங்களும் கடந்து விடும்”ன்னு அதுல மனச லயிச்சுக்கிட்டு ஏதோ ஞாயபகத்துல பைக்’க ஓட்டிகிட்டிருப்போம். அப்பத்தான் சர்ர்ர்ர்ர்’ருன்னு நம்மள கிராஸ் பண்ணுற பைக் நம்ம கவனத்த திருப்பும். நம்ம துரதிர்ஷ்டம் அதில பின்னாடி ஒரு பொண்ணு “பின்னாடி” தெரியிற மாதிரி டைட் ஜீன்ஸ், டீ-ஷர்ட் போட்டு உக்காந்திருக்கும். இவ அவன் மேல மோதணும்’ங்கறதுக்காகவே அவன் அடிக்கடி பிரேக் போட்டு வண்டி ஒட்டுவான். “பல்லிருக்கவன் பக்கோடா தின்னுறான்”ங்கறான்ன்னு விரக்தில பீச்சுப் பக்கம் காலார நடப்போம்’ன்னு போவோம். அது இத விட கொடுமையா இருக்கும். எங்காவது ஒரு மூலைல போய் கடலலை’ல(கடலை அல்ல) நம்மள மறந்து உக்காந்திருப்போம். அப்பத்தான் ஒரு ஜோடி ஏதோ அவங்க வீட்டு ஸ்விம்மிங் பூல்’ல விளையாடுறதா நினச்சு விளையாடிக் கிட்டிருப்பாங்க. ஒண்ணுஞ்சொல்றதுக்கில்ல’ன்னு எந்திரிச்சு வேற பக்கம் போனா அங்க இத விட கொடுமையா இருக்கும். கடல்கரை எல்லாம் காதல்’கறை ஆகிப்போச்சு... சர்ஃப் எக்ஸல் போட்டாலும் போகாத கறை.


போங்கடா, உங்க பூசாரித்தனமும் வேண்டாம், பொங்கச்சோறும் வேண்டாம். நான் ஊருக்கே போறேன்’ன்னு ஊருக்கு போயி ரெண்டு நாள் ரெஸ்ட் எடுக்கலாம்’ன்னு கிளம்புவிங்க. விதி வலியது பாஸ். நம்ம விட்டாலும், நம்மள விடாது. லாட்ஜ்’ல ரூம் போட வேண்டிய கேசுங்க ரெண்டு பஸ்’ல டிக்கெட் புக் பண்ணியிருக்கும். லாங் டிரைவ் ஆச்சே. டிரைவர் லைட்’டையும் ஆப் பண்ணித் தொலைக்க மாட்டான். கண்டது கட்டியத பாத்துத் தொலைக்க வேண்டி இருக்கும். கொஞ்சலும், தோள்ல சாயிறதும், மடியில தூங்கறதும்’ன்னு ஊருக்கு போறதுக்குள்ள “ஜீரோ டிகிரி” படிச்ச எபக்ட் வந்துடும்.


இதையெல்லாம் விட வலி என்ன தெரியுமா? நண்பனோ, ரூம் மேட்’டோ யார்கிட்டயாவது சிரிச்சு சிரிச்சு பேசிகிட்டிருப்பான், நம்மளும் கண்டுக்காத மாதிரியே நடிக்கணும். நம்ம மொபைல்’ல பேலன்ஸ் சுத்தமா இல்லாதப்போ அவசரமா ஒரு கால் பண்ணுனும்’ன்னு அவன் செல்’ல எடுத்தா “செக்யூரிட்டி கோட்” போட்டு வச்சிருப்பான். மூஞ்சில அடிச்ச மாதிரி இருக்கும். அப்புறம் எதேச்சையா ஒருநாள் எங்கயாவது ரெண்டு பேரையும் ஒண்ணா பாக்க வேண்டிய தர்ம சங்கடமான நிலை வரும். அப்ப நம்ம கேட்கலேன்னாலும் அவனா வந்து ஃப்ரண்ட் மச்சான்’ன்னோ, ஊர்க்கார புள்ள மச்சான். நம்ம ஊருக்கு புதுசு’ல்ல அதான்’ன்னோ கதை விடுவான். அதையும் அந்த புள்ளை’ய தூரத்துல வெச்சுகிட்டே தான் சொல்லுவான், எங்க நாம கரெக்ட் பண்ணிடுவோமோ’ங்கற பயத்துல. “டேய் நம்புங்கடா, எங்களுக்கு நிறைய வேலை இருக்கு. பொண்ணுங்கள கரக்ட் பண்ணுறது மட்டும் எங்க வேலை இல்லடா”ன்னு மனசு குமுறும்.


என்ன பண்ணுறது, எல்லாத்தையும் சகிச்சுக்க வேண்டி இருக்கு. பாத்திங்களா பேச்சிலர்ஸ்க்கு எவ்ளோ கஷ்டம், கடுப்பு’ன்னு. என்ன பண்ணித் தொலைய? எல்லாம் விதியே'ன்னு போக வேண்டியது தான்.


22 comments:

lalithajewellery,mudhuvai&kadalady&sayalkudy said...

நமக்கு நிறைய வேலை இருக்குன்னு சொன்னீங்க ,என்ன வேலைன்னு சொல்லவே இல்லையே ?

Rajeshdevanathan said...

Arumaya ezhuthureenga nanba. av yoda thakkam athigama theriyuthu vazhthukkal

Rajeshdevanathan said...

Arumayana pathivu nanba ana av yoda thakkam athigama irukku.vazhthukkal

Rajeshdevanathan said...

Arumayana pathivu nanba ana av yoda thakkam athigama irukku.vazhthukkal

Rajeshdevanathan said...

Arumayana pathivu nanba ana av yoda thakkam athigama irukku.vazhthukkalrukku.vazhthukkal

Rajeshdevanathan said...

Arumayana pathivu nanba ana av yoda thakkam athigama irukku.vazhthukkal

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Tamilmanam first vote

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Super

Renu said...

உன் வைதெரிச்ச்சலை நல்லா பதிவு பண்ணி இருக்க அர்ஜுன்

Anonymous said...

சீக்கிரம் ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் ப்ராப்த்தி அஸ்து? இதுவும் கடந்து செல்லும் நட்பே. நல்ல பதிவு. அநேகர் மனதில் ஓடக்கூடிய எண்ணங்களின் பிரதிபலிப்பு நண்பா..

karthi.bsr said...

really a bachelor plight!!

கடைக்குட்டி said...

:( இன்னும் இன்னும்,.....

M sure this is not ur best (hope I have rights to say this..)

வேதாளம் said...

@all நன்றி..

@கடைக்குட்டி: இருக்கு மச்சி, நீ சொல்லாமல.. கண்டிப்பா ட்ரை பண்றேன்.

@போக்கிரிஸ்: எதுக்கு நண்பா... அத மெயின்டெய்ன் பண்றது ரொம்ப கஷ்டம்.

amas said...

As always very well written. மனசுலேந்து பொங்கி வர எண்ணங்களை நல்லப் பதிவாக்கியிருக்கீங்க! வாழ்த்துகள்! உங்கள் நகைச்சுவை உணர்வு உங்கள் பதிவுகளை ரசிக்க வைக்கிறது :))
amas32

GDEK said...

Super :) :) கடுப்பை நல்லா வெளிப்படுத்தி இருக்கீங்குக்கீங்க

Balu Sv said...

"கலக்குறிங்க மை குரு"... "கடற்கரையெல்லாம் காதல்கறை" அருமையான வரி... பதிவெங்கும் நகைச்சுவையுணர்வு ததும்புது குரு! இடையிடையே நீங்க அடைப்புக்குள் போட்டிருக்குற வாசகம் 'உயிரோட்டத்தை' கூட்டுகிறது... பேச்சிலர் வாழ்க்கைய எல்லாருடைய கண்முன்னாடியும் நிறுத்தியிருக்கிங்க... "நம்முடைய உணர்வ, எழுத்தாக பார்க்கிற அனுபவம்..." அருமை...

ILA(@)இளா said...

என்னத்தை சொல்ல. நானெல்லா இந்த கேட்டகரியிலேயே இல்லையே :)

பரிசல்காரன் said...

//கடல்கரை எல்லாம் காதல்’கறை ஆகிப்போச்சு... சர்ஃப் எக்ஸல் போட்டாலும் போகாத கறை.//

படித்ததில் பிடித்தது.

வேதாளம் said...

@amas32 Thanks amma

@பரிசல் நன்றி குருவே...

@இளா: நமக்கு வைச்சது அவ்ளோ தான். விடுங்க தல..

Thirumaran.T said...

நல்லா இருந்தது அர்ஜூன். தினம் நடக்கும் சம்பவங்களில் இருந்து பதிவுக்கான கருவை பிடிப்பது நல்ல முன்னேற்றம்.வாழ்த்துகள்....தொடருங்கள்

கோமாளி செல்வா said...

நிறைய இடங்கள் ரசிக்க வைத்தன மச்சி :)

கடைசியில் //டேய் நம்புங்கடா, எங்களுக்கு நிறைய வேலை இருக்கு. பொண்ணுங்கள கரக்ட் பண்ணுறது மட்டும் எங்க வேலை இல்லடா”ன்னு மனசு குமுறும்.//

இது ரொம்ப நல்லா இருக்கு :)

puthagappuzhu said...

காதலியில்லாததால் பாதிக்கப்பட்ட/பட்டுக்கொண்டிருக்கிற நம்மை(?) மாதிரி ஆயிரக்கணக்கான நெஞ்சங்களை உணர்வுப்பூர்வமாக நெருங்கும் பதிவு..நகைச்சுவைக்குள் அதை மறைத்து தந்திருப்பதுதான் “ஹைலைட்”.வாழ்த்துக்கள்