கவுஜ
நீதான் எங்க தலை,
உன் கண்ணு ரெண்டோ மலை,
பொண்ணுங்கள கவுக்கும்-
உன் பார்வை வலை,
உன்னைப் பார்த்ததுமே அவங்க
மனசுல ஒரு அலை.


நீ ஒரு அழகிய சிலை,
உன் கண்ணசைவே ஒரு கலை,
உன் அன்புக்கு இல்லை விலை,
நானோ உன்னுள்ள ஒரு கிளை.


அன்பு வெச்சா நீ பனிமலை,
அதிரடினா நீ எரிமலை,
உன்கிட்ட மாட்டினா இல்லை விடுதலை,
உன்னை எதிர்த்தா எடு-தலை.


உனக்கு பிடிக்காது சத்தம் -
மீறினா சிந்திடும் ரத்தம்.
நீ ஒரு சிங்கம் – ஆனா
மனசுல சுத்த தங்கம்.


உன் அதிரடியே ஒரு வித்தை,
உன்னை எதிர்த்தா அவன் சொத்தை,
உன்கிட்ட பணக்கட்டு கத்தை,
அழகுப் பொண்ணோட அம்மா உனக்கு அத்தை.


நீ ஒரு காட்டுப்புலி,
எவன் எதிர்த்தாலும் கிழி,
பிடிச்சதோ பழிக்குப் பழி,
உன் வழி எப்பவுமே தனி வழி.7 comments:

கிரி ராமசுப்ரமணியன் said...

இதுபோல் நான் கவுஜை ஆயிரம் எழுதுவேன் மன்னா

Anonymous said...

பவர் ஸ்டார் @Omakuchchiன் பிறந்த நாள் பரிசாக நானும் , @vedhalam ம் இந்த கவிதையை காணிக்கையாக்குகிறோம் .... கவிஜ..கவிஜ... அவ்வ்வ்...

வேதாளம் said...

@கிரி: அண்ணாத்த.. இதல்லாம் கண்டுக்காத. ச்சும்மா.. விளாட்டு.

rajesh said...

உன்னையால எங்கல பன்னுரான் இவன் - கொலை..முடியல சாமியோவ்,,,!!!

Balu Sv said...

ஹா ஹா... சூப்பர்ஸ்டாரபத்தி தான் வாலி போன்ற கவிஞர்கள் எழுதுறாங்க... பவர்ஸ்டாருக்கு, நம்ம எழுதுவோம் குரு! உங்ககிட்டேர்ந்து இன்னும் எதிர்பார்க்கிறேன் குரு!றாங்க... பவர்ஸ்டாருக்கு, நம்ம எழுதுவோம் குரு! உங்ககிட்டேர்ந்து இன்னும் எதிர்பார்க்கிறேன் குரு!

Santhosh said...

உன் ப்ளாக்குக்கு வரக் கூடாதுன்னா நேரடியா சொல்லு.. அத விட்டுட்டு இப்படியெல்லாம் மிரட்டாத..

அம்பாளடியாள் said...

என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி தங்கள் பகிர்வுக்கு .......