அனுஷ்கா அல்ல அமலாபால் 'லே அழகு!


அந்த சமயத்தில் தமிழ்த் திரையுலகம் பெரும் நாயகிப் பஞ்சத்தில் ஆழ்ந்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். வெளிமாநில மோகத்திலும், சம்பளத்திற்காகவும், பிரபலமடையவேண்டியும் இறக்குமதியான நடிகைகள் அனைவரும் தெலுங்கையும், ஹிந்தியையும் நோக்கி திசை மாறிகொண்டிருந்த காலம் அது. முன்னாள் கனவுக்கன்னி இஞ்சி இடுப்பழகி சிம்ரன் மார்க்கெட்’டை இழந்து சூர்யாவுக்கு அம்மாவாகவும், துவரம் பருப்பு விளம்பரங்களிலும் வந்து கொண்டிருந்தார். மேலும் ஜாக்கெட்டுக்கு பெயர்பெற்ற ஜாக்பாட் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் தனது இரண்டாம் இன்னிங்க்ஸ்’ஸிற்கான அடித்தளத்தை ஏற்படுத்தி இருந்தார். சூர்யாவுடன் புதிய வாழ்க்கையை ஆரம்பித்தவுடன் சினிமாவுக்கு குட்-பை சொல்லி விட்டார் சந்திரமுகி. குடும்பத்துப் பெண்ணாக மாறியிருந்த நயன்தாரா, பிரபுதேவாவுக்காக நடிப்பைத் தியாகம் செய்திருந்தார். ஹிந்திப் பக்கம் போன அசின் கரையேற முடியாமல் தவிக்க, தமிழ்நாட்டு இளைஞர்கள் கனவுக்கன்னி இல்லாமல் புலம்பிக் கொண்டிருந்த காலகட்டம் அது.


மாடர்ன் ஸ்ரீதேவி இல்லாத ஒரே காரணத்தினால், ஓரிரு படங்கள் ஹிட் கொடுத்தவர்களை கொண்டாடிக் கொண்டிருந்த காலகட்டம் அது. 2006 ஆம் ஆண்டு ரிலீசாகியிருந்த “ரெண்டு” என்ற படத்தில் “மொபைலா மொபைலா” பாடலில் செல்லமாய் சிணுங்கி பின் தெலுங்குப் பக்கம் போய் சக்கை போடு போட்டுக்கொண்டிருந்த அருந்ததி அனுஷ்கா, தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரையும், புகழையும் பெற்றிருந்தாலும் வயது மற்றும் உயரம் காரணமாக கனவுக்கன்னி லெவலுக்கு உயராமல் அவ்வப்போது சில ஹிட் படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார் (கார்க்கி மன்னிப்பாராக). லோ-பட்ஜெட் படங்களில் அதிகம் நடித்து சென்டிமென்ட் நாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் அஞ்சலி. வேறு யாரும் மெச்சும்படி இல்லை. அந்த சமயத்தில் தான் தமிழ்த்திரையுலகில் நுழைந்தது அந்த அழகுச்செல்வம்.நீலத்தாமரா எனும் மலையாளப் படத்தில் ஏதோ ஒரு காட்சியில் முகம் காட்டிச் சென்றிருந்தாலும், அதுதான் “அமலா பால்” என்னும் அழகை திரை உலகிற்கு கொடுத்த முதல் படம். தமிழில் அறிமுகம் வீரசேகரன் எனும் ஒரு மொக்கைப் படம். பெரிய கதாப்பாத்திரம் எதுவும் இல்லை என்றாலும், அமலாபால் என்னும் மைனாவை கோடம்பாக்கத்து வேடந்தாங்கலுக்கு கொண்டுசேர்த்தது வீரசேகரன் தான். இருந்தாலும் இப்படி ஒரு அழகுப் புயல் தமிழகத்தில் கரையேறியது பலருக்கும் தெரிந்திருக்கவில்லை, அந்தப் புயல் சிந்து சமவெளியை அடையும்வரை.


“நடிப்புலக வாழ்க்கையின் தொடக்கத்தில் இருக்கிறோம்” என்பதைக் கூடப் பாராமல், வரப்போகும் விமர்சனங்களைத் துச்சமென மதித்து அந்த படத்தில் நடித்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். சில்க்’கை புகைப்படங்களில் மட்டுமே பார்த்து வளர்ந்திருந்த மூன்றாம் தலைமுறைக்கு காணக்கிடைத்த அரும்பொக்கிஷம் சிந்துசமவெளி. அதனாலேயே விடலைப்  பருவத்தினரிடம் புகழ்பெற்றது இந்தப்படம். ஏதோ “அப்படிப்பட்ட” படம் என்று பார்க்கச் சென்றவர்களின் இமைக்காத கண்களினூடே நுழைந்து, இதயத்தில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்துவிட்டாள் இந்த மைனா. பிறகென்ன எல்லாம் ஜெயம் தான்.


மைனா’வில் மேக்-அப் இல்லாமல் இயல்பான நடிப்பில் தனக்கான இடத்தை உறுதி செய்துகொண்டார் என்று தான் சொல்லவேண்டும். “மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுற” பாடலில் அந்த ஒரு வினாடி கண் சிமிட்டலுக்காக அந்த பாடலை ஆயிரம் முறை “லூப்”பில் பார்த்தவர்கள் எத்தனையோ பேர். படம் முழுக்க தாவணியில் சிம்பிளாக வந்து ரசிகர்களை ஏங்க வைத்திருப்பார். அந்த காலகட்டத்தின் பலரின் கருப்பு வெள்ளைக் கனவுகளுக்குள் கலரடித்துப் போனது, சிறகடித்துச் சென்ற இந்த மைனா தான். அதுவரை கிராமத்து பைங்கிளியாக மட்டுமே சிறகடித்த அமலாவை, நகரத்து தேவதையாகக் காட்டியது தெய்வத்திருமகள் தான்.


தெய்வத்திருமகள், படத்தின் நாயகி அனுஷ்கா’தான் என்றாலும் சேலையிலே ஒரு வானவில்லாய் அனைவராலும் ரசிக்கப்பட்டவர் அமலாபால் தான். அதுவும் குழந்தை சாரா’வுடனான காட்சிகளில் யாரை ரசிப்பதென்று ரசிகர்களுக்கு சந்தேகமே வந்துவிடும் வண்ணம் வெகு அழகாய் நடித்திருப்பார். பலரும் குழந்தை சாரா’வை சிறுவயது அமலா பால்’லாகத்தான் கண்டிருந்தனர். மையிட்ட அந்தக் கண்கள் பலரையை தீண்டிச் சாய்த்திருந்தது. அமலாவை இழக்கத் தயாரில்லாத, ஏற்கனவே ஏங்கிக்கிடந்த இளவட்டம் மைனாவை இதயக் கூண்டில் சிறைபிடித்து விட்டது மூன்றாம் தலைமுறையின் கனவுக் கன்னியாக.


--
அமலாபால் ஆராதகன்
அர்ஜுன்
22-09-2031

#என்னடா வருஷம் 2031 ன்னு இருக்கே’ன்னு பாக்குறீங்களா? எனக்கு இந்தப் பதிவ இருபது வருஷத்துக்கு அப்புறமாத்தான் எழுதணும்’ன்னு ஆசை. “எங்க காலத்துல அமலாபால்’ன்னு ஒரு நடிகை இருந்தாங்க, அழகோ அழகு பேரழகு”ன்னு அடுத்த தலைமுறை கிட்ட சொல்லணும்தான். ஆனா இப்ப இருக்கிறத ரசிக்கணும் பாஸூ, அதுதானே வாழ்க்கை. இனி வரும் காலம் அமலாபால்’ற்கு வெற்றியாக அமையும் என்ற தீர்க்கதரிசனத்தில்(பேராவலில்) இதை எழுதி இருக்கிறேன். 

14 comments:

amas said...

Very nice post! Lots of maturity in your writing and funny too :)
amas32

திருமாறன்.தி said...

அமலாபால் டிவிட்டர் ரசிகர் மன்றம் சார்பில் நன்றி

nayakann said...

உங்க எழுத்து நடை மிகவும் அருமை....

Natarajan said...

அனுஷ்கா படம் போட்ட ஒரே காரணத்துக்காக கமெண்ட் போடுறேன்! பொருட் குற்றம் இருந்தாலும் சொல்லாற்றல் அழகு!

Sriram said...

wait for 'muppozhuthum un karpanaigal'

Sriram said...

wait for 'muppozhuthum un karpanaigal'

Anonymous said...

எனக்கு ரெண்டு பேரையுமே பிடிக்குங்க,இருந்தாலும் அனுக்ஷ்கா ஒரு படி மேலதான்,இது என்னோட தாழ்மையான கருத்து---அனுக்ஷ்கானந்தா.

ILA(@)இளா said...

அங்கே அப்படி ஒரு ஜொள், இங்கே இப்படி ஒரு ஜொள்.. ஆக மொத்தம் ஜொள்..

Anonymous said...

சூப்பர்டா மச்சி !!! உனது எழுத்து திறன் அமலா பாலிற்காக அபாரமாக கரைப்புறண்டோடுகிறது..

மொத்தத்தில்,


"நீ கிறுக்கிய பல கிறுக்களில் இது ஒ௫ ஓவியம்"


வாழ்த்துக்கள் :)


#குடுத்தக்காசுக்கு மேலக்கூவி௫க்கேன்...அடுத்த முறை கொஞ்சம் பாத்து செய்.. வெல வாசிலாம் ஏறிகிட்டே போகுது

Santhosh said...

2031ன்னு வருஷம் போட்டது எதுக்கு?? அதுக்குள்ள நீ வளர்ந்துடுவ'ன்ற நம்பிக்கையில தானே.. ஆனா அதுக்குள்ள அவ பாட்டி ஆயிடுவா.. போ, போய் ஏதாவது ரெண்டாவது கிளாஸ் பொண்ணா பார்த்து எழுத ஆரம்பி..

Balu Sv said...

'அமலாபால்' பற்றி எழுதியதற்காக, அவரது ரசிகர்களில் ஒருவனாய், நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
//இமைக்காத கண்களினூடே நுழைந்து இதயத்தில் இடம் பிடித்தார்//
//கருப்புவெள்ளை கனவிற்கு கலரடித்து, சிறகடித்து பறந்தது// போன்ற வரிகள் அழகு... அமலா பால்-ன் கண்கள் மிக அழகாய் இருக்கும். அதை இன்னும் கொஞ்சம் வர்ணித்து இருந்தால், இன்னும் அழகு கூடியிருக்கும் குரு! அழகு...'அமலாபால்' பற்றி எழுதியதற்காக, அவரது ரசிகர்களில் ஒருவனாய், நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
//இமைக்காத கண்களினூடே நுழைந்து இதயத்தில் இடம் பிடித்தார்//
//கருப்புவெள்ளை கனவிற்கு கலரடித்து, சிறகடித்து பறந்தது// போன்ற வரிகள் அழகு... அமலா பால்-ன் கண்கள் மிக அழகாய் இருக்கும். அதை இன்னும் கொஞ்சம் வர்ணித்து இருந்தால், இன்னும் அழகு கூடியிருக்கும் குரு! அழகு...

கோமாளி செல்வா said...

நல்லாத்தான் எழுதிருக்க :) ஆனா ஆயிரம்தான் சொன்னாலும் ஜெனிக்கு யாருமே ஈடாக முடியாது மச்சி :))

ராஜன் said...

இதான் அவள நெனச்சு ஒரல இடிச்ச கதை!

நீ எங்க வேணா சுத்துடி பொடியா! திருச்சிலதான் வாக்கப்படப் போற! அதை நானே முன்னாடி நின்னுல்லாம் இல்ல பப்பரப்பான்னு படுத்து நடாத்தி வெக்கறனா இல்லியா பார்!

saravananfilm said...

உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்

Hot tamil actresses