குளோபல் வார்னிங்!1.      நடு ஆற்றின்
புதை குழியில் சிக்கி,
விக்கித் தவித்து
செத்துக் கொண்டிருக்கின்றது,
“இக்கரைக்கு அக்கரை பச்சை
என்னும் தமிழ்ப் பழமொழி யொன்று.
#நகரமயமாக்கல்.

2.      மழையை வரவழைக்கவல்ல
வேர்கள் வெட்டப்பட்டு,
கட்டப்பட்ட கான்கிரீட் காடுகள்
சேகரிக்கின்றன ஏதோ
சிந்திச் சிதறும்
மழைத்துளிகளை.
#நகரமயமாக்கல்.

3.      திஸ் இஸ் திருக்குறள்,
(வ்)ரிட்டன் பை கிரேட் டமில் போயெட்
திருவள்ளுவர்.
இனி தமிழும் பயிற்றுவிக்கப் படும்
ஆங்கிலத்தில்.
தனியார் பள்ளிகளில்.
#ஆங்கில மோகம்.

4.      விடியல் என்னவோ
கிழக்கில் தான் என்றாலும்,
நம் பயணம் மட்டுமே
மேற்கு நோக்கியே!
#கலாச்சார மாற்றம்
#மேற்கத்தீயகலாச்சாரம்.

5.             அடுத்த தலைமுறையைக்
       காப்போம்.
       குளோபல் வார்னிங்!
       #வெப்பமயமாதல்.

6.             ஐந்திற்குப் பின்
ஏழுதான்.
ஆறு?
அப்படின்னா?
#மணல்திருட்டு.6 comments:

Renu said...

சூப்பரப்பு :-)

Santhosh said...

இன்னும் போர்ஸா இருந்திருக்கலாம் ...

DKCBE said...

பதிவு எழுதியிருக்கேன்னு சொன்னியே இதுதானா அது?! படிச்சுட்டேன், கமெண்டும் போட்டாச்சு.

K.Arivukkarasu said...

ஆறு?ன்னு ஆறு எண்ணங்களோட நிறுத்திட்டயே.....ஒரு பத்து, பதினைந்து எழுதியிருக்கலாம்! ஆனா எல்லாமே நல்லா இருக்குபா :-)

முனைவர்.இரா.குணசீலன் said...

ஐந்திற்குப் பின்
ஏழுதான்.
ஆறு?
அப்படின்னா?
#மணல்திருட்டு.


அழகா
ஆழமா
சொல்லியிருக்கீங்க நண்பா..

M.Shanmugan said...

பதிவு சூப்பர்.காத்திரமானது.