முரண்!
ஹிட்ச்காக், குரசெவோ இந்த மாதிரி பெயரை எல்லாம் கேட்டா எதோ டானிக், மருந்து மாத்திரைன்னு நினைக்குற என்னை மாதிரி அப்பாவிங்க மட்டும் இந்த விமர்சனத்தை படிக்கவும்.

கதை பயணிக்கிறது, கதை பயணிக்கிறதுன்னு பல படத்தோட விமர்சனங்கள்ல படிச்சிருப்பீங்க. ஆனா இந்த படத்துக்குதான் அந்த வார்த்தைகள் சரியா பொருந்தும்ன்னு நினைக்கிறேன். எதிலுமே த்ரில் எதிர் பார்க்குற பிரசன்னா, வழக்கம் போல அம்மாஞ்சி சேரன். சேரன் வந்த கார் விபத்துக்குள்ளாக, சென்னை வரை லிஃப்ட் கொடுக்கிறார் பிரசன்னா. இருவரும் பேசிக்கொண்டே செல்ல காரிலேயே கதை பயணிக்கிறது.  இருவரும் அவரவர் கொசுவர்த்தி சுருளை சொல்லி முடிக்கிறார்கள். அட! பிளாஷ்பேக்ப்பா. சேரனின் ஜென்ம சாபல்யம் இந்த படத்திலும் அவரைப் புரிந்து கொள்ளாத, சண்டை போடும் மனைவி. நல்லவேளை இந்தப் படத்தில் மனைவியிடம் “என்னடா... கோவமா இருக்கியா? என்று கேட்கவில்லை. தொடர்ந்து தோல்விகளைக் கண்டு வரும் தோணி போல, கடும் மன உளைச்சலில் இருக்கும் சேரனுக்கு ஆதரவாய் இருக்கிறார் ஹரிப்ரியா(லாவண்யா), ஆதரவு காதலாகிறது. இன்னொரு பக்கம் பிரசன்னா, தான் காதலிக்கும் பெண்ணை ஃபாரீன் ட்ரிப்புக்கு கூட்டிச் சென்று கலையோ கலைன்னு கலைத்த தன் தந்தையை கொல்ல வேண்டும் என்று வெறியுடன் இருக்கிறார் பிரசன்னா. “உன் மனைவியை நான் கொல்றேன், பதிலுக்கு எங்கப்பனை நீ கொல்லனும்என இருவரின் பிரச்சினைக்கும் தீர்வு கொலை தான் என்று சேரனை பிரெய்ன்வாஷ் செய்கிறார் பிரசன்னா. “போய்யா.. நீயும் உன் திட்டமும் ன்னு சேரன் போய் விட, தன் திட்டப் படி சேரனின் மனைவியைக் கொல்கிறார் பிரசன்னா. பதிலுக்கு பிரசன்னாவின் தந்தையைக் கொல்லச் சொல்லி சேரனுக்கு செக் வைக்கிறார் பிரசன்னா. சேரன் கொலை செய்தாரா, இல்லையா என்பது மீதிக்கதை.

ஆங்கிலப் படங்களே அதிகம் பார்த்திராத, ட்விஸ்ட்களை அதிகம் ரசிக்கும் மக்களுக்கு இது ஒரு நல்ல படமாகத் தோன்றும். படத்துக்கு பெரிய பிளஸ் பிரசன்னாவின் நடிப்பு. நல்ல முன்னேற்றம். இருந்தாலும் ஒரு சில இடங்களில் அஞ்சாதே, நாணயம் படங்களின் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. அப்புறம் சேரன், அதே டீ-ஃபால்ட் நடிப்பு. இயலாமை, வாழ்க்கையின் மீதான வெறுப்பு இதையெல்லாம் தாங்கிச் செல்லும் கதாபாத்திரம் என்றால் உடனே சேரனைக் கூப்பிட்டு விடுகிறார்கள். நன்றாகவே நடித்திருக்கிறார். இருந்தாலும் இவர் வில்லத்தனமாக யோசிப்பதெல்லாம், “முடியல பாஸ், விட்ருங்க. லாவண்யாயாவாக வரும் ஹரிப்ரியா பரவாயில்லை ரகம். படத்திற்கு மற்றொரு பலம், ட்விஸ்ட்கள். இருந்தாலும், இந்த மேப் போட்டு கொலை செய்வதைத் தவிர புதுசா எதையாவது முயற்சித்திருக்கலாம்.

ஒரு த்ரில்லர் படத்துக்கு தேவையான இசை சேர்ப்பு இல்லை, பாடல்களை தவிர்த்திருக்கலாம். முதல் பாதி, படம் கொஞ்சம் இழுவை அதிகம். அதனாலேயே இரண்டாம் பாதி சீக்கிரம் முடிந்து போவதைப் போல தெரிகிறது. அக்மார்க் தமிழ் சினிமா கிளைமாக்ஸ். இவையெல்லாம் தான் படத்தின் மைனஸ்கள்.

பிரசன்னாவுக்காக ஒருவாட்டி வேணா பாக்கலாம்.

8 comments:

தட்சிணாமூர்த்தி said...

வாழ்த்துக்கள் ! விமர்சனம் சூப்பர் மச்சி, ஆனா ஒரு டவுட்டு ? படத்தில் பிரசன்னா கேரக்டர் பெயர் அர்ஜுன் என்பதால் தான் பிரசன்னா வை பாராட்டி எழுதி இருக்கிறாயா ? அப்படியே வெடி, வாகை சூடவா விமர்சனங்களையும் எழுதிடு.

Balu Sv said...

சேரன் பற்றிய நக்கல்கள் அருமை...
நல்ல விமர்சனம் குரு!!! நீங்க சொல்றத பார்த்தா, 'பார்க்கலாம்'ன்னு தோணுது...

பாண்டி-பரணி said...

nice post now ur writing skill much improved and i saw some nice parisal touch in your writing ,like//சேரனின் ஜென்ம சாபல்யம் இந்த படத்திலும் அவரைப் புரிந்து கொள்ளாத, சண்டை போடும் மனைவி. //
தொடர்ந்து தோல்விகளைக் கண்டு வரும் தோணி போல,//

nice one

கிரி ராமசுப்ரமணியன் said...

நல்ல விமர்சனம் பிரதர்!

வேதாளம் said...

@தட்சிணா: படத்துல பிரசன்னா பேரு அர்ஜுன், ஆனா கேட்டவன் #முரண்!

@பாலு: நன்றி சிஷ்யா

@பாண்டி: நன்றி சார். தொடர்ந்து வரணும், பின்னூட்டங்களால் ஊக்கு'விக்கணும்' நன்றி.

@கிரி அண்ணாத்த: ச்சே! இதை விட ஒரு நல்ல பாராட்டு வேணுமா என்ன? #நன்றி அண்ணே!

saravananfilm said...

உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்

Press Meet Gallery

smartguys2011 said...

good attempt boss,,, excellent writting skills are inside u

அ.முத்து பிரகாஷ் said...

கலக்குறீங்க பாஸு..


அப்போ அது ஏதோ விவகாரமான ஒண்ணாத் தான் இருக்கணும்..
மத்த விசயமா பாஸு??