ஏழாம் அறிவு வேலாயுதம் - COMBO விமர்சனம்

ஏழாம் அறிவுதற்காப்புக் கலைகளிலும், மருத்துவத்திலும் வல்லவரான போதிதர்மன், சீனா சென்று அங்கு அக்கலைகளை பரப்புகிறார். அனைத்தையும் கற்றுக் கொண்டுவிட்டு பலநூறு ஆண்டுகளுக்குப் பின் அவர்களே நமக்கு எதிரியானால்? ஏறக்குறைய இக்கலைகள் அனைத்தும் இங்கு அழிந்துவிட்ட நிலையில், இந்த எதிர்ப்பை எப்படி ஏழாம் அறிவின் உதவியோடு முறியடிக்கிறார்கள் என்பதே கதை.

முதல் பத்து நிமிடங்கள் விஜய் டிவியின் “நடந்தது என்ன?” போல போதிதர்மன் பற்றிய ஒரு டாக்குமென்டரியாக படம் தொடங்குகிறது. ஒரு கொடும் உயிர்க்கொல்லி வைரசிலிருந்து மக்களைக் காக்கிறார். தற்காப்பு கலைகளை சொல்லிக் கொடுக்கிறார். இதனால், போதி தர்மன் இந்தியாவுக்கு மீண்டும் திரும்பி விடக்கூடாது என்பதற்காக விஷம் வைத்து அவரை கொன்று விடுகிறார்கள். கதை நிகழ்காலத்திற்கு திரும்புகிறது.  

“Bio War”, ஆறாம் நூற்றாண்டு, மறு பிறவி என்று தசாவதாரத்தை கொஞ்சம் டிங்கரிங் செய்திருக்கிறார்கள். ஜெனிட்டிக் மெமரி என்னும் ஏழாம் அறிவில் ஆராய்ச்சி செய்யும் மாணவியாக ஸ்ருதிஹாசன். டி.என்.ஏ வில் பதிந்திருக்கும் பரம்பரை பண்புகளைத் தூண்டுவதன் மூலம் பரம்பரை குணங்களை ஒருவரின் உடலில் வெளிக்கொணர முடியும் என்று ஆராய்ச்சி செய்கிறார். அவ்வாறாக போதிதர்மனின் டி.என்.ஏ’வினை ஒத்திருக்கும் சூர்யாவைக் கண்டுபிடிக்கிறார். அதே சமயம், இந்தியாவை அடிமைப்படுத்த ஆப்பரேசன் ரெட் என்பதைத் தொடங்குகிறது சீனா. ஆறாம் நூற்றாண்டின் அதே வைரசை மீண்டும் கண்டுபிடித்து அதை இந்தியாவுக்குள் பரப்ப டாங் லீ என்பவரை இங்கு அனுப்புகிறது சீனா. இவ்வைரசிலிருந்து விடுபட போதிதர்மனே அவதரிக்க வேண்டும் என்கிற சூழ்நிலை உருவாகிறது. நோக்கு வர்மம்(ஹிப்னாடிசம்), குங்பூ போன்றவற்றில் வல்லவரான டாங் லீ’யை எதிர்த்து ஸ்ருதியும், சூர்யாவும் எப்படி ஆப்பரேசன் ரெட்’ஐ முறியடிக்கிறார்கள் என்பது மீதிக்கதை.


டாங் லீ தான் படத்தின் உண்மையான ஹீரோ. மனுஷன் அநியாயத்திற்கு நடித்திருக்கிறார். பார்வையிலேயே மிரள வைக்கிறார். படத்தின் மற்றொரு பெரிய பிளஸ் வசனங்கள். “இந்தியனா இருக்கிறதுனால வெளிநாட்டுல மதிக்க மாட்டேங்குறான், தமிழனா இருக்கிறதுனால இந்தியால மதிக்க மாட்டேங்குறான்” போன்ற வசனங்கள், செம கிளாஸ் செவிட்டில் அறைந்தாற்போல் உணர்ச்சி வசப்பட வைக்கின்றன. தமிழுணர்வு என்பதைக் கொஞ்சம் கதையில் கலந்திருக்கிறார், செம பிசினஸ் ட்ரிக்ஸ்.  போதிதருமனாக முதல் பத்து நிமிடங்கள் மற்றும் க்ளைமாக்ஸ்’ல் மட்டுமே “நடித்திருக்கிறார்” சூர்யா. போதிதர்மன் ஒரு தமிழன், சீனாவின் கலைகள் இங்கிருந்து சென்றவைதான் என்று எடுத்துச் சொல்லியிருப்பதற்கு மட்டும் பாராட்டுகள் இயக்குனருக்கு.

முழுப்படத்தையும் எடுத்துவிட்டு “அடடே! பாட்டு மிஸ் ஆகுதே?” என்பதற்காக அரைமணி நேரத்திற்கு ஒரு பாட்டை சொருகியிருக்கிறார்கள், தவிர்த்திருக்கலாம். ஒரு தமிழச்சியாக உணர்ச்சி வசப்படும் தருணங்களைத் தவிர மற்ற இடங்களில் கடுப்பேற்றியிருக்கிறார் சுருதி, உங்க உச்சரிப்புல தீ’யை வைக்க. நானறிந்து படத்தில் டைரக்டர் டச் என்றால் சூர்யாவிற்கு “டிஷ்யூம்” அமிதாப்’பை நண்பனாக்கியது மட்டும்தான். சாரி முருகதாஸ் சார், ஒவ்வொரு தமிழனுக்கும் திமிர் வரும்’ன்னு சொன்னிங்க, எரிச்சல் தான் வருது.

ஏழாம் அறிவு- தமிழன் முதற்பாதியில் கடுப்பாகிறான், இரண்டாம் பாதியில் மனதைத் தேற்றிக் கொள்கிறான்.
வேலாயுதம்
சமூக அநீதிகளை அழிக்க, ஒரு கற்பனைக் கதாபாத்திரம் உண்மையாக அவதரித்தால்? இதுதான் வேலாயுதத்தின் ஒன் லைன்.

திருப்பாச்சி, கந்தசாமியை கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள். விஜய் ஹீரோ என்பதால், பாகிஸ்தான் தீவிரவாதிகள் டெல்லி, மும்பை தாண்டி டைரக்டாக சென்னைக்கே வருகிறார்கள். தமிழகத்தின் பொற்கால ஆட்சியை சீர்குலைக்க பல இடங்களில் வெடிகுண்டு வைக்க திட்டமிடுகிறார்கள். இவற்றையெல்லாம் முறியடிக்க பத்திரிகையாளரான ஜெனிலியா வேலாயுதம் எனும் ஒரு கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்குகிறார். அதே நேரத்தில் தங்கை திருமண விஷயமாக சென்னை வருகிறார் விஜய். எதேச்சையாக இரண்டு டைம்லைன்’களும் சங்கமிக்க விஜய் வேலாயுதமாக மாறி சமூக அநீதிகளை எப்படி அழிக்கிறார் என்பதுதான் படம்.

சரியான கதாபாத்திர தேர்வுகள். சரண்யா மோகன், ஹன்ஷிகா, சந்தானம் என்று அனைவரும் முதற்பாதியை அலுப்புத்தட்டாமல் நகர்த்தியிருக்கிறார்கள். தங்கைக்காக விஜய் செய்யும் சேட்டைகள், பணத்தைத் திருட சந்தானத்தின் முயற்சிகள் என்று முதற்பாதி முழுவதும் சிரிப்பலைகள். வேலாயுதம், போகிறபோக்கில் தீவிரவாதிகளின் சில திட்டங்களை முறியடித்துச் செல்கிறார். மக்களுக்கு வேலாயுதம் யார்? என்ற எதிர்பார்ப்பு மேலோங்குகிறது. இடைவேளை.

ஆறாம் அறிவை ஆப் செய்து விட்டு உக்கார்ந்தால் இரண்டாம் பாதி சூப்பர், ஆஹா ஓஹோ. வில்லன்களைப் பின்னிப் பெடலெடுக்கிறார் வேலாயுதம். கள்ளநோட்டுகளை அழிக்கிறார், அணு உலைக்குள் பாயவிருக்கும் ரயிலை சடன் பிரேக் போட்டு நிறுத்துகிறார், சிட் பண்ட் மோசடிப் பணத்தை மீட்டுக் கொடுக்கிறார், என இரண்டாம் பாதி முழுக்க வேலாயுதத்தின் அட்டூழியங்கள், சாரி அற்புதங்கள். இந்தப் பகையில் தங்கை இறந்து விட, அதற்குக் காரணமான வில்லன்களை வேலாயுதம் எப்படி பழி தீர்க்கிறார் என்பது மீதிக்கதை.

பாடல்கள், காமெடி, சென்டிமென்ட் என்று அனைத்தும் சரியாகப் பொருந்தி வருவது படத்திற்கு பெரிய பலம். கத்திப் பேசுவது, சவால் விடுவது, ஜம்ப் பண்ணுவது என்று வழக்கமான விஷயங்கள் இல்லாமல் விஜய் எதார்த்தம், ஜோடி ஹன்ஷிகா செம பதார்த்தம். ஜெனிலியா வந்த வேலையை சரியாக செய்திருக்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் சந்தானம் கலக்கியிருக்கிறார்.

இரண்டாம் பாதியில், லாஜிக் மீறல்கள் தான் படத்தின் ஒரே மைனஸ். சூப்பர் ஹீரோ கதை என்பதால் கொஞ்சம் சகித்துத் தான் ஆக வேண்டும். “ஆண்டவன் இருக்கானோ இல்லையோ, வேலாயுதம் இருக்கான்” போன்ற மக்கள் வசனங்கள், ஸ்ஸ்ஸப்பா முடியல. முதல் முறையாக சிக்ஸ் பேக் காட்டி சண்டை போட்டிருக்கிறார் விஜய், நோ கமெண்ட்ஸ்.

ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் கோபம்தான் வேலாயுதம் என்று கருத்து சொல்லியிருக்கிறார்கள். நீங்களும் வேலாயுதம் நானும் வேலாயுதம் என்பதால், ஒருமுறை நண்பர்களோடு/குடும்பத்தோடு படத்தை பார்த்து விடுவது நல்லது. தனியாக சிக்கினால் கம்பெனி பொறுப்பல்ல.

வேலாயுதம் – மாஸ் என்டர்டெயினர்.16 comments:

கார்க்கி said...

// இரண்டு டைம்லைன்’களும்//

ட்விட்டர்டா நீ

பார்த்தியா.. நீ மெசெஜ கப்புன்னு புடிச்சிட்ட.. என் பதிவுல அத சொல்லவேயில்ல நான்..ஹிஹிஹி

amas said...

7aum arivu paarthaachu, so can fully agree with your review. உலகத் தமிழர்கள் பற்றி வசனம் சொருகியிருக்கர் முருகதாஸ். எனக்கு அது உவப்பாகவில்லை.Velayutham, I definitely trust your judgement.
amas32

சி.பி.செந்தில்குமார் said...

குட் ரிவ்யூ.. ஒரே பதிவில் 2 விமர்சனம் !!!

ஆகாயமனிதன்.. said...

கார்க்கி said...
//// இரண்டு டைம்லைன்’களும்//

ட்விட்டர்டா நீ//
:) tweets

வேதாளம் said...

@கார்க்கி @amas @ஆகாயமனிதன் நன்றி..

@சி.பி. அடடே! விமர்சனமே விமர்சிக்கிறதே. நன்றி பாஸ்

Rajan said...

ஒருமுறை நண்பர்களோடு/குடும்பத்தோடு படத்தை பார்த்து விடுவது நல்லது. தனியாக சிக்கினால் கம்பெனி பொறுப்பல்ல.

நச் கமெண்ட்

இராஜராஜேஸ்வரி said...

. படத்தின் மற்றொரு பெரிய பிளஸ் வசனங்கள். “இந்தியனா இருக்கிறதுனால வெளிநாட்டுல மதிக்க மாட்டேங்குறான், தமிழனா இருக்கிறதுனால இந்தியால மதிக்க மாட்டேங்குறான்” போன்ற வசனங்கள், செம கிளாஸ் செவிட்டில் அறைந்தாற்போல் உணர்ச்சி வசப்பட வைக்கின்றன. /

படம் பார்த்த நிறைவைத்தந்த விமர்சனங்களுக்குப் பாராட்டுக்கள்.//

இராஜராஜேஸ்வரி said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

ராகுல் said...

velayutham hit

K.Arivukkarasu said...

இரு படங்களுக்கான பலருடைய விமர்சனங்களையும் படித்தேன். உங்களுடையது நடுநிலையாக ஆக இருக்கிறது ! தீபாவளி வாழ்த்துகள் !!

Munish Kumar said...

@abt velayudham.. u cant say not like that abt sixth sense. i studied a genetic engineering a deepduring higher studies according to that u cant synthesize or recombinant DNA of human it once that too failure so the entire story of 7 aam arivu is false ??Now while watching the 7 aam arivu where is ur sixth sense gone????.....

கார்த்தி கேயனி said...

வேலாயுதம் ஹிட் ,
7ம் அறிவு ப்ளாப்

Saravanan.r said...

Nandri nanbaa!! Ore kallula 2 maanga.

Anonymous said...

perfect combo விமர்சனம். good job -@jesuvalan

Anonymous said...

நல்ல விமர்சனங்கள்... அந்தப் பிள்ளை ஸ்ருதி தமிழ் தானா என ஆச்சரியமாக இருக்கிறது?

Anonymous said...

devi,

Ezham arivu pathina comment-te sariyila.padam arumaya irukku.