...ஆப்பரேசன் கிரீன்...


..1..

... சொர்க்கலோகம், கலியுகம் 16 லட்சம் கோடியே இருபத்தி ஓராம் ஆண்டு, பூலோக கணக்கில் 2415ஆம் ஆண்டு ...

அடடா! என்ன சுகம், என்ன சுகம்! பூமியில் அவ்வளவு சம்பாதித்தும் ஸ்கைவாக், பெசென்ட் நகர் என்று ஊர்சுத்திய போதும் கூட இவ்வளவு சுகம் கிடைத்திருக்கவில்லை. யார் செய்த புண்ணியமோ, கம்ப்யூட்டர் இன்ஜினியராக பூலோகத்தில் ஒரு அரிய தொழில்நுட்பத்தில் (Rare Technology) வேலை செய்ததால்தான் என்னவோ இப்போது இங்கு சொர்க்கம் வெர்ஷன் 2.0 வில் அசிஸ்டன்ட் சித்திரகுப்தன் வேலை. ஆம், நான் வேலை செய்த அதே டெக்னாலஜியில்தான் சொர்க்கம் v2.0 வின் இயக்கமே. அதனால்தான் என்னை சுமார் நானூறு ஆண்டுகளாக ஆன்-சைட்டி’லேயே (ஆன்-சைட்=சொர்க்கம்) வைத்திருக்கிறான் எமதர்மன். நானூறு ஆண்டுகள் அனுபவம் என்றால் சும்மாவா? கேட்டதையெல்லாம் கொடுப்பான் எமதர்மன். ரம்பை ஊர்வசி என்பவர்களை மட்டுமே அறிந்து வைத்திருக்கும் பூலோகவாசிகளுக்கு, இங்கிருக்கும் பாபிலோனா அல்ஃபோன்சாக்களைத் தெரியாது. இவர்கள் தான் என்னுடைய பணிப்பெண்கள். இப்போது புரிகிறதா, ஏன் இந்த பில்ட்-அப் என்று?

என்றும்போல் தான் அன்றும் விடிந்தது. இருந்தும் ஒரு பரபரப்பை உணரமுடிந்தது என்னால். எப்போதும் நான் கண்விழிக்கையில் உடனிருந்து பணிவிடை செய்யும் பணிப்பெண்கள் எங்கே? கண்விழித்தால் எமனும், சித்திரகுப்தனும் சோகத்துடன் அமர்ந்திருந்தனர். எனக்கும் அந்த பரபரப்பு தொற்றிக்கொள்ள, என்னவென்று விசாரித்தேன். அந்தக் காரணமறிந்து உடைந்து போனேன். ஆம், பூலோகத்தில் யாரோ என் டி.என்.ஏ’வைத் தூண்டிவிடப் போகிறார்களாம். “உனக்கு மறுபிறவி எடுக்கும் காலம் வந்து விட்டது, ஆப்-ஷோருக்கு(பூலோகம்) கண்டிப்பாய் போயே ஆகவேண்டும்” என்றும் கூறி முடிப்பதற்கு முன்னரே கண் கலங்கிவிட்டார் எமதர்மன். இறந்து மேலோகம் வருபவர்களில் “யார் உண்மையான தமிழன்?” என்று கண்டறியும் ஒரு கஷ்டமான வேலைக்கு புரோக்ராம் எழுதியவன் நான். இப்படி திறமைமிக்க என்னை மீண்டும் பூமிக்கனுப்ப எமனுக்கு மனசே இல்லைதான். எனக்கான தேதியைக் கொடுத்துவிட்டு கலக்கத்துடன் வெளியேறினார் எமதர்மன்.

சொர்க்க வாழ்க்கையின் அந்த இறுதி நாட்கள். கொடுக்கவேண்டிய கே.டி(KT) அனைத்தையும் கொடுத்து முடித்திருந்தேன். எனக்கான பணியிறுதிப் பார்ட்டியும் முடிந்துவிட்டது. அனைவரும் விட்டுச் செல்ல அந்தத் தனிமை என்னை வாட்டியது. இறுதியாய் ஒரு முறை என்னைக் காண வந்த எமதர்மன் என்னை ஆரத்தழுவி பிரியாவிடை கொடுத்துச் சென்றார். நாளை விடிவது பூலோகத்தில்தான் என்று நிதர்சனத்தை உணர்ந்து கண் அயர்ந்தேன்.

..2..

.... பூலோகம், 2415 ம் வருடம், அதிகாலை 3 மணி ...

விரலசைவை உணர்ந்தேன். என் மூச்சு சப்தம் மட்டுமே திரும்பக் கேட்டது அந்த ஆய்வுக்கூடத்தில். என் நெஞ்சிலும், கைகளிலும், உடல் முழுவதுமே ஏதோ ஒட்டி வைக்கப் பட்டிருந்ததை உணர்ந்தேன். மெதுவாய்க் கண்கள் திறந்தேன். நான் எங்கிருக்கிறேன்? கேட்க யாருமில்லை அந்த இடத்தில். தலை அசைக்க சிரமமாயிருந்தாலும், இடம்-வலம் நோக்கினேன். ஆய்வுக்கூடம், பக்கத்து அறை முழுவதுமே இருட்டாய் இருந்தது. எனக்கு அப்போதே புலப்பட்டு விட்டது. மின்வெட்டு, மீண்டும் தமிழ்நாட்டில்தான் பிறந்திருக்கிறேன் என்று. சில நாழிகள் கழிந்து சில நவயுவதிகள் அங்கு வந்தனர். என் மறுஜென்மம் வெற்றி என்று ஆங்கிலத்திலேயே தங்கள் ஆச்சர்யத்தைப் பகிர்ந்துகொண்டனர். ஆய்வுக்கூடமா அது? என்ற ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வண்ணம் இருந்தது அந்த இடம்.

இரண்டு மூன்று நாட்கள் அவர்கள் கேட்ட கேள்விகள் எதற்கும் நான் பதிலளிக்கவில்லை. உடல் அசைவு, பார்வை போன்றவற்றிற்கான உடற்பயிற்சிகள் தரப்பட்டன. சில நாட்கள் கழித்து நானே என் மௌனத்தை உடைத்தேன். “நான் யாரு? எதுக்காக என்னை இங்க வெச்சிருக்கீங்க?” என்று ஒரு ஆய்வுப் பெண்ணிடம் கேட்க, ஆச்சர்யத்தில் முகம் மலர்ந்தது அவருக்கு. “Yei, he is speaking TAMIL di” என்று சத்தமிட்டார் அவர். உடனே அனைவரும் என்னைச் சூழ்ந்து கொள்ள, ஒரு பெண் என்னிடம் பேச முனைந்தார்.

“ஹாய் விஷ்வா....”
என்று அந்தப்பெண் கை நீட்டிய போதுதான் என்னுடலின் பெயர் “விஷ்வா” என்று தெரிந்து கொண்டேன். பதிலுக்கு கைகுலுக்கி விட்டு
“நான் யாரு? நீங்க எல்லாம் யாரு? நான் எதுக்காக இங்க இருக்கேன்?” என்று கேட்டேன்.
“என் பேரு கோபிகா, இவங்க எல்லாம் என் நண்பர்கள், மரபியல் ஆராய்ச்சி வல்லுனர்கள். ஒரு முக்கியமான விஷயத்துக்காகத்தான் இந்த ஆராய்ச்சி எல்லாமே. போகப் போக உங்களுக்கே விளங்கும். இப்போ உங்களுக்கு தேவை கம்ப்ளீட் ரெஸ்ட்” என்று என் ரூமில் என்னை விட்டுச் செல்ல, பல குழப்பங்களுடன் நிம்மதியற்றுக் கிடந்தேன்.

இரண்டு நாட்கள் முடிந்திருக்கும், கோபிகாவும் மற்ற மாணவிகளும் என்னைக் காண என்னறைக்கு வந்தனர்.
“ஆர் யூ ஆல்ரைட்?” என்று ஒருவர் கேட்க,
“ஐ யாம் பர்ஃபெக்ட்லி ஆல்ரைட்” என்றேன். கோபிகா என்னை நோக்கி பேசத் தொடங்கினார்.
“நீங்க விஷ்வா. ஆனா இப்போ சுமார் நானூறு வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்த அர்ஜுன் என்கிறவரோட டி.என்.ஏ வைத்தூண்டி விஷ்வா+அர்ஜுன்னா உங்கள உருவாக்கியிருக்கிறோம். நீங்க, எங்க ஆராய்ச்சியோட முழு வெற்றியின் பரிமாணம்” என்று கூற, ஆச்சர்யத்தில் எழுந்தமர்ந்தேன்.
“கூல் டவுன் மிஸ்டர்.அர்ஜுன்” என்று கோபிகா என் தோளில் கைவைக்க, ஒரு வினாடி ஸ்தம்பித்தேன். ஆம், நேற்று வரை விஷ்வா என்று என்னை அழைத்தவர்கள் இன்று அர்ஜுன் என்கிறார்கள். “அப்போ, இவர்களுக்கு என்னைத் தெரிந்திருக்கிறது, என்னிடம் எதையோ எதிர்பார்கிறார்கள்” என்று செவியைக் கூர்மையாக்கினேன்.

“நீங்க கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லத் தான் நாங்க இங்க வந்திருக்கோம். நீங்க இருக்கிறது இந்தியா, தமிழ்நாடு, 2415 ம் வருஷம். இதல்லாம் உங்களுக்கு தெரியும்’ன்னு நினைக்கிறேன்” தலையசைத்தேன், தொடர்ந்தார்.
“இப்போதைய இந்தியா நிலையைப் பற்றி நான் உங்களுக்கு சொல்லியே ஆகணும், We are in G8, We have VETO power, நாமளும் இப்போ வல்லரசு”
“அப்படியா? இதல்லாம் எப்படி சாத்தியமாச்சு? நான் இப்போ என்ன செய்யணும்”
“அதை நீங்க இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சுப்பீங்க” என்று புன்னகைக்க, கைக்கெட்டும் தூரத்திலிருந்த டம்ளரை எடுத்து கொஞ்சம் நீர் அருந்தினேன்.


..3..

வர்கள் வந்து சேர்ந்தனர். எட்டு பத்து பேர் இருந்தார்கள். அனைவரும் இளைஞர்கள். அனைவரையும் வெல்கம் செய்து விட்டு,
“இட்ஸ் பெட்டர் யூ இண்டரேக்ட் வித் அர்ஜுன்” என்று அவர்களிடம் சொல்லி, “அர்ஜுன், உங்களுக்கு என்ன கேட்கணுமா அதை இவங்க கிட்ட கேளுங்க..” என்றார் கோபிகா.
“ஹாய் சார், வீ ஒர்க் IAL ltd. வீ நீட் எ ஹெல்ப் ப்ரம் யூ” என்று ஒருவர் சொல்ல நான் தலையசைத்தேன்.
“இந்த ஆராய்ச்சியின் முக்கிய நோக்கமே, உங்களோட கம்ப்யூட்டர் நாலேஜ், அது இப்போ இங்க இந்தியர்களுக்கு தேவைப்படுது”
“என்ன சொல்றிங்க, நான் ஒர்க் பண்ணது ரொம்ப பழைய டெக்னாலாஜி, இந்த நானூறு வருஷத்துல எவ்வளவோ இம்ப்ரூவ் ஆயிருக்கணுமே? ஸ்டில் இந்தியா அப்படியேதான் இருக்கா?”

“இல்லை சார், இந்த நானூறு ஆண்டுகள்’ல இந்தியா ரொம்பவே முன்னேறியிருக்கு. ஒரு காலத்துல சாப்ட்வேர் சுல்தான்’னா இருந்த நாம தேவைய புரிஞ்சுகிட்டு வழி மாற ஆரம்பிச்சோம். நாகரிக மாற்றத்துல உலகமே வேகமா முன்னேறிப் போயிட்டிருக்க, நாம விவேகமா யோசிச்சோம். உலக நாடுகள் அனைத்துமே அணுசக்தி, தொழில்நுட்பம் இதுலதான் கான்சன்ட்ரேட் பண்ணாங்க. ஆனா இந்தியா கொஞ்சம் வித்தியாசமா தின்க் பண்ணுச்சு. அக்ரிக்கல்சர், எஸ் சார். விவசாயம். நம்மளோட பாரம்பரியம்’ன்னு வரலாறு சொல்லுது. அதுல புதுமையை புகுத்தினோம். Indian Agro Logistics ன்னு ஒரு கம்பெனி இளைஞர்களை, விவசாயிகளை வேலைக்கமர்த்தி விவசாயம் செஞ்சாங்க. முன்னெல்லாம் கம்பியூட்டர் இஞ்சினியர்’கள் வாங்கின மாதிரி லட்சக்கணக்கான சம்பளமெல்லாம் சாத்தியமாச்சு, எல்லாரும் ஒண்ணு சேர்ந்ததால. இப்போ உலகிலேயே இந்தியா தான் புட் ப்ரோடக்ஷன்ல ஃபர்ஸ்ட். உணவில்லாம எதுவுமே சாத்தியமில்லை என்கிறதால நாம இப்போ சூப்பர் பவர்” என்று நானூறு ஆண்டுகால வரலாற்றை உணர்ச்சி பொங்க ஒப்புவித்தார் அந்த இளைஞர்.

“வாவ்.. அமேஸிங்.. இப்போ என்கிட்டேர்ந்து என்ன எதிர்பார்க்குறிங்க?”
“நாம விவசாயத்துல கவனம் செலுத்தினதால டெக்னாலஜி ல கொஞ்சம் பிஹைன்ட் தான். இருந்தாலும் நாம ரொம்ப மோசமா போயிடல. இப்போ இந்தியா டோடல்லி யுனைட்டட் ஆன் அக்ரி. சோ, இதையெல்லாம் மேனேஜ் பண்ண நமக்கு ஒரு சாப்ட்வேர் தேவைப்படுது”
“இந்தியா இவ்ளோ முன்னேறியிருக்கு’ன்னு சொல்லுறிங்க, சரி. உங்களால அந்த சாப்ட்வேர்’ஐ உருவாக்க முடியாதா?”
“முடியும் சார், ஆனா இப்போ இருக்கிற டெக்னாலஜில மொத்த இந்தியாவுக்கும் தேவையான பிராசசிங் கொடுக்க முடியல. தேடிப் பார்த்ததுல நீங்க வேலை செஞ்ச அதே டெக்னாலஜி’யால இதைத் தர முடியும்ன்னு தெரிஞ்சுது. நாம சூப்பர் பவரா உருவானத சகிச்சுக்க முடியாத வெளிநாடுகள் கிட்ட உதவி கேட்டா, அவங்க ரொம்ப டிமாண்ட் பண்றாங்க. அப்போ சர்ச் பண்ணி பார்க்கிறப்போ சில படிவங்கள் கிடைச்சது. ஆனா இப்போதைய டெக்னாலஜிஸ்ட்’களினால அத கோப்-அப் பண்ணிக்க முடியல. அப்பத்தான் உங்கள பத்தி தெரியவந்தது. அதற்காகத் தான் இந்த ஆராய்ச்சி. நீங்கதான் ஹெல்ப் பண்ணனும், ப்ளீஸ்”

“போதும், அவரை ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ண வைக்காதிங்க” என்று கோபிகா அறிவுரைக்க,
“ஓகே சார், டேக் யுவர் ஓன் டைம்” என்று சொல்லி அனைவரும் விடைபெற்றனர். வாழ்க்கையில் முதல்முறை ஓய்வு என்பது கசந்தது. ஏற்கனவே நானூறு ஆண்டுகள் ஓய்வெடுத்து விட்டேன். இனி உடைவாள் தான் எடுக்க வேண்டும். இதுவரை அமெரிக்காகவுக்காக டைப்பிய விரல்கள் படுவேகமாய் கணினியை ஆன் செய்தன. ஹ்ம்ம் இம்முறை என் தாய் நாட்டிற்காக. திடீரென்று பளிச்சென்று வந்த அந்த வெளிச்சம், கண்களினூடே பாய்ந்து நெஞ்சத்தின் எரிதழலை மேலும் தூண்டி விட்டது.

34 comments:

amas said...

Excellent! Easily the best you have written so far :-) Congratulations!
amas32

சி.பி.செந்தில்குமார் said...

>>சொர்க்கலோகம், கலியுகம் 16 லட்சம் கோடியே இருபத்தி ஓராம் ஆண்டு, பூலோக கணக்கில் 2415ஆம் ஆண்டு ..

ஓப்பனிங்க்லயே பயங்காட்றீங்களே?

சி.பி.செந்தில்குமார் said...

>>Your comment has been saved and will be visible after blog owner approval.

பிரபல பதிவர்னா இந்த மாதிரி சங்கடங்கள் வரத்தான் செய்யும், ஒண்ணூம் பண்ன முடியாது.. இருங்க , கதையை படிச்சுட்டு வர்றேன்

Anto brindha said...

A new era.. Fully technically said.. Made me enthu in reading sir.. Good attempt.. Keep writing sir..

சி.பி.செந்தில்குமார் said...

கதையின் களன் ஓக்கே, நடையில் இன்னும் ஆங்கில வார்த்தைகளை குறைத்துக்கொண்டால் படிப்பவர்களுக்கு இன்னும் எளிதாக இருக்கும்.. நல்ல முயற்சி!!!

வேதாளம் said...

@amas32: நன்றி மா..

@சி.பி: கண்டிப்பா ஜி, 2415 அதான் இங்கிலீசு கொஞ்சம் ஜாஸ்தி ஆகிடுச்சு.. வருங்காலங்களில் குறைச்சுக்கிறேன்.

josiyam sathishkumar said...

உண்மையில் அட்டகாசமான கதை..அமெரிக்காவுக்கு டைப்பிய விரல்கள்...ம்..சுஜாதாவை ஞாபகபடுத்திட்டீங்க..

trichy royal ranger said...

அட்டகாசம் பாஸ் .......... இடைல இடைல அந்த காமெடி எல்லாம் சூப்பர் .......

"...ஆப்பரேசன் கிரீன்..." -டைட்டில் பக்கா ...... பாத்த உடனே படிக்கணும் னு தோணுச்சு

trichy royal ranger said...

ஆப்பரேசன் ரெட் னு தமிழ் உணர்வ தூண்டுனாங்கோ
ஆப்பரேசன் கிரீன் னு நீங்க தேச பக்திய தூண்டுரிங்கோ

ஆப்பரேசன் ப்ளூ னு யாரும் எதையும் தூண்டாம இருந்தா சரி .................... அவ்வவ்வ்வ்வவ்வ்வ்

Pals said...

சூப்பர் கதை. ஆன்=ஸைட், ஆஃப்=ஸைட், கேடீ என்று IT styleல்ல கலக்கியிருக்கீங்க.

Finally, நீங்க UAT ல பாஸ் ஆயிட்டீங்க !

Project (கதை) Success !

KSPTamil (Twitter)

வெண்பூ said...

நல்லா இருக்கு அர்ஜுன்.. சின்ன சினன் விசயங்கள் (யார் தமிழன்னு கண்டுபிடிக்குறது, மின் வெட்டுன்னு) நல்லா இருக்கு.

சோனியா said...

இப்போ இருக்குறது G4 2415 க்கு G8 ரொம்ப கம்மி.....கதை படு வேகமா போகுது கொஞ்சம் கூட தொய்வு இல்லாம....ஜினோ படிக்கிறா மாதிரி இருந்துச்சு ஆரம்பத்துல,அதிசய பிறவி,ஏழாம் அறிவு படங்களோட வாடை அதிகமா வீசுது...காமெடி ,கோபிகா நல்லா இருக்கு :-)

சத்யா said...

ஏழாம் அறிவு படத்துக்கு முன்ன உங்க கதை வெளியாகியிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும். அருமையான சயின்ஸ் ஃபிக்சன்.

பரிசல்காரன் said...

நல்ல கதை அர்ஜூன். செம வேகம்.

என்னை பெரிதும் கவர்ந்தது பொருத்தமாக நீங்க வெச்ச தலைப்பு!

வேதாளம் said...

@anto @satish: thanks boss

வேதாளம் said...

@trchy RR: ஆப்பரேசன் ப்ளூ'வா? அவ்வ்வ்... ராஜன்லீக்சாய நமஹ!

வேதாளம் said...

@வெண்பூ: முதல் முறையா வந்திருக்கீங்க.. அடிக்கடி வாங்க.. நன்றி ஹை.. அஜித் பாராட்டுன ஆள் என்னை பாராடுனா.. a=b=c => a=c சரிதானே?

@பரிசல்: வேலை நெருக்கத்திலும் படித்ததற்கு நன்றி குருவே!

வேதாளம் said...

@சத்யா: நன்றி பாஸ்

@PALS: அது என்னங்க UAT?

@சோனியா: நன்றி'க்கா

நவீன் said...

(ஆன்-சைட்=சொர்க்கம் ) படிப்பவனுக்கு நான் சொல்லவருவது முழுவதும் புரிய வேண்டும் என்றே எண்ணமே இந்த வரிகள் சரியா ?? ... கே.டி(KT) அப்படின்னா என்ன ?? ...“என் பேரு கோபிகா,// டேய் உன் அளப்பரைக்கு அளவே இல்லையா ??... //We are in G8,// நாம என்ன தான் வளந்த நடானுலும் g9 தான் ஆக முடியும் g8 ஆக முடியாது ...பொறுப்பை கொடுத்த பிறகு ஒரே பாட்ல பணக்காரன் ஆகிற மாதிரி எதாவது பன்னுவர்னு நினச்சேன் அது பொய் ஆகிடிச்சி ..ஆனா கதை மொத்தம் ஒரே டெம்போ எங்கயும் தொய்வு இல்லை மொத்தத்தில் பக்கா ....

கோமாளி செல்வா said...

மச்சி கலக்கிட்ட :) உண்மைல ரொம்ப நல்லா இருந்துச்சு. பெரும்பாலான இடங்களில் நகைச்சுவை ரசிச்சேன். ஆனா 2415 லயும் தமிழ் நாட்டுல கரண்ட் இல்லைங்கிறது கஷ்டமாத்தான் இருக்கு :)))))))

Sathesh Chellappa said...

உன்கிட்ட இருந்து வந்ததுலயே உருப்படியான ரெண்டாவது பதிவு இதுதான்... முன்னாடியே நண்பர்கள் சொன்னது மாதிரி சுஜாதவ remind பண்ணிச்சு .. நல்ல நையாண்டி இருக்கு. ஆமா உனக்கு கோபிகா தவிர வேறு பொண்ணு பேரு தெரியாதா??? It was lovely

@gpradeesh said...

விவசாயம் பற்றி சிந்தித்தது ஆச்சர்யம்! நல்ல கற்பனை!நல்ல நடை!! வாழ்த்துகள்!

திருமாறன்.தி said...

நல்லாயிருந்தது அர்ஜூன்...ஏழாம் அறிவுல இருந்து கான்செப்ட் பிடிச்சி நல்லா கற்பனை செஞ்சியிருக்கீங்க.சின்ன சின்ன நக்கல் வரிகள் அருமை.அடுத்த முயற்சிக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்!

வேதாளம் said...

@சதீஷ்: தேங்க்ஸ் மச்சி..

வேதாளம் said...

@Gpradeesh @திருமாறன்: எல்லாம் உங்களிடம் குடித்த யானைப்பால் மன்னா... #நன்றி

Nathan said...

@அர்ஜுன்,

அருமையான கதை... நல்ல கற்பனை... தெளிவான வாக்கியமைப்பு...

கடைசியாக ஒரு தாய்நாடு செண்டிமெண்ட் வைத்து தமிழ் சினிமா எபெக்ட் கொடுத்துவிட்டீர்... :)

நடராஜன் said...

ஆபரேசன் ஆபரேசன்னு சொல்ரியே ஒரு நர்ச கூடக் காணோம்

கலக்கிட்ட மச்சி! எனக்கு ரொம்ப பிடிச்சது அந்த சொர்க்கலோக சீன்தான்! செம ஓப்பனிங்! ஒவ்வொரு எழுத்திலும் அதே வேகம்!
“எரிதழல்” நீயும் ரைட்டர் ஆயிட்டடா!

Anonymous said...

தொடக்கமே விறுவிறுப்பாக ஆரம்பிக்கிறது அருமையான சொல்லாடல்கள் கதையின் கருவை விவசாயத்தில் வைத்தது அருமை. சுஜாதாவின் தீவிர ரசிகர் போல நீங்கள் இந்தியா வல்லரசாகியும் மின்சாரம் இல்லையா நண்பா அந்த தொல்லையை போக்க இன்னும் கொஞ்சம் அர்ஜுன் டி என் ஏ வை தூண்டி அதற்கான தீர்வை கண்டுபிடியுங்கள். மீண்டுமொருமுறை வாழ்த்துகள்

gnani_ twitter

ராஜன் said...

;-))) ஆஜர்!

prakash said...

Nice one..! Just enjoyed.. Kekavae nallaruku "self sustained nation in food production" :-) ~ @F5here

prakash said...

Nice one..! Just enjoyed.. Kekavae nallaruku "self sustained nation in food production" :-) ~ @F5here

Anonymous said...

நண்பா என்னோட முதல் கமெண்ட்டுடன் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
...ஆப்பரேசன் கிரீன்...எழுத்து வண்ணத்தை பச்சை வண்ணத்தில் மாற்றிவிடுங்கள்.

gnani_ twitter

ஏர் மறந்த உழவன் நான் said...

I started reading once I saw minmeens tweet and iparisal, selvu's comment.

Creative thinking. You have transferred your knowledge here with lots of fun. Agri is really needed right now. Thanks for promoting agri. Great Arjun. Cheers.

@stivel

கார்த்தி கேயனி said...

உங்கள் கற்பனை வளம் நன்று.