கற்றதும் பெற்றதும் 2011


மார்ச்-ஏப்ரலில் தொடங்கிய எந்தன் வாசிப்பு வேட்கையில் கடந்துவந்த புத்தகங்கள்.


1. மகா அலெக்சாண்டர் – முத்துக்குமார்
தோல்வியே கண்டிராத ஒரு மனிதனின் வெற்றிச் சரித்திரம்
என் மதிப்பெண்கள் 4/5

2. கால் முளைத்த மனம் – வைத்தீஸ்வரன்
ஒரு நல்ல சிறுகதைத் தொகுப்பு.
என் மதிப்பெண்கள் 3.5/5


3. ஹிட்லர் – ஆதனூர் சோழன்
என் ரோல்மாடலின் வரலாறு.
என் மதிப்பெண்கள் 4/5


4. ஹிட்லர் – பா.ராகவன்
கல்லூரி காலங்களில் தினமும் வாசித்த புத்தகம். நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் வாசித்தேன். என் சிறந்த வாசிப்பு.
என் மதிப்பெண்கள் 5/5

5. கடல்புரத்தில் – வண்ணநிலவன்
ஒரு கடலோடியின் வாழ்க்கை. இன்றும் மனதில் நீங்காதிருக்கும் புத்தகம். என் சிறந்த வாசிப்பு 2011.
என் மதிப்பெண்கள் 5/5

6. பின் கதைச் சுருக்கம் – பா.ராகவன்
உலகின் சிறந்த பல எழுத்தாளர்களைப் பற்றி அறிய வைத்த புத்தகம். அனைவரையும் படிக்க வேண்டும் என்று என் வாசிப்பை தூண்டிய புத்தகம். இதுவும் என் சிறந்த வாசிப்பு 2011
என் மதிப்பெண்கள் 5/5

7. சிம்ம சொப்பனம் ஃபிடல் கேஸ்ட்ரோ – மருதன்
கியூபாவின் தேசப் பிதாவின் வாழ்க்கை. கண்டிப்பாக ஒரு உணர்வைத் தூண்டும் புத்தகம். இதுவும் என் சிறந்த வாசிப்பு 2011
என் மதிப்பெண்கள் 5/5

8. சே குவேரா – மருதன்
நட்பிலக்கணத்தையும் போராடும் குணத்தையும் தந்த சேகுவேரா வின் வரலாறு. இதுவும் என் சிறந்த வாசிப்பு 2011
என் மதிப்பெண்கள் 5/5

9. மார்க்ஸ் என்னும் மனிதர் – N.ராமகிருஷ்ணன்
கார்ல் மார்க்ஸ் அவர்களின் வாழ்க்கை வரலாறு.
என் மதிப்பெண்கள் 4/5

10. புயலின் பெயர் சூகி - N.ராமகிருஷ்ணன்
பர்மாவின் ஆங் சென் சூகி அவர்களின் வாழ்க்கையும் அவர்கள் பட்ட கஷ்டங்களும் போராட்டங்களும்.
என் மதிப்பெண்கள் 3.5/5

11. மனிதனும் மர்மங்களும் – மதன்
பேய், பிசாசு மூட நம்பிக்கைகளை தெளிவாய் விளக்கும் புத்தகம்.
என் மதிப்பெண்கள் 4/5

12. பேய் – சஞ்சீவி
அனுபவங்கள்-அமானுஷ்யங்கள்-அறிவியல்
என் மதிப்பெண்கள் 4/5

13. கேண்டீட் – வோல்ட்டேர் – தமிழில் பத்ரி
பதினெட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு பிரெஞ்சு நாவலின் மொழிபெயர்ப்பு.
என் மதிப்பெண்கள் 3/5

14. சைபர் கிரைம் – யுவகிருஷ்ணா
இன்றைய இணைய உலகில் அறிந்து/அறியாமலும் செய்யப்படும் சைபர் கிரைம்கள், நாம் ஏமாற்றப் படுவது எப்படி என்பதையெல்லாம் விளக்கும் ஒரு நூல்.
என் மதிப்பெண்கள் 4/5

15. புத்தம் சரணம் – மதுரபாரதி
அமைதிக்காகவும், பொறுமை வேண்டியும் படித்த புத்தகம்.
என் மதிப்பெண்கள் 3/5

16. ஜென் தத்துவ கதைகள் – ஜக்கி வாசுதேவ்
நேரத்தை இனிமையாக்கும் பாடம் புகட்டும் சின்ன சின்ன ஜென் கதைகள்.
என் மதிப்பெண்கள் 3/5

17. பில்கேட்ஸ் சாப்ட்வேர் சுல்தான் – சொக்கன்
கல்லூரி காலங்களில் கணினி பொறியாளன் ஆக வேண்டும் என்று என்னைத் தூண்டிய புத்தகம். மீண்டும் படித்தேன்.

18, வல்லினம் மெல்லினம் இடையினம்
சாஃப்ட்வேர் துறையை அலசும் ஒரு புத்தகம்.
என் மதிப்பெண்கள் 4/5

19. அறிந்தும் அறியாமலும் – ஞானி
பள்ளிப் பருவத்தில் விகடனில் படித்த தொடர்.
என் மதிப்பெண்கள் 3.5/5

20. கி.மு கி.பி – மதன்
வரலாற்றை அறிந்து கொள்வதன் முக்கியத்துவத்தையும், வரலாற்றின் மீதான எந்தன் மோகத்தையும் அதிகரித்த புத்தகம்
என் மதிப்பெண்கள் 5/5

21. கார்ப்பரேட் கனவுகள் – கிரி ராமசுப்ரமணியன்
B.P.O பணியாளர்களின் வாழ்க்கையை ஒரு நாட்காட்டியாய், நகைச்சுவையாய் சொல்லும் புத்தகம்.
என் மதிப்பெண்கள் 3.5/5

22. சிறிது வெளிச்சம் – எஸ்.ரா
உலக சினிமாவில் ஆரம்பித்து பல விஷயங்களை வெகு இயல்பாக சுவாரஸ்யமாக எடுத்துச் சொல்லும் புத்தகம். என் சிறந்த வாசிப்பு 2011
என் மதிப்பெண்கள் – 5/5

23. ஐந்தாம் அத்தியாயம் – சுஜாதா
இரண்டு குறுநாவல்களின் தொகுப்பு. ஐந்தாம் அத்தியாயம் வெகு சுவாரஸ்யம்.
என் மதிப்பெண்கள் – 4/5

24. ஸ்ரீரங்கத்து தேவதைகள் – சுஜாதா
சுஜாதாவின் இளமைக்கால சம்பவங்கள்.
என் மதிப்பெண்கள் 4.5/5

25. வண்ணத்துப் பூச்சி வேட்டை – சுஜாதா
வெரும் வார்த்தைகளினாலே காட்சிகளை கண் முன் நிறுத்தும் லாவகம் அருமை.
என் மதிப்பெண்கள் 4/5

26. சிறுகதை எழுதுவது எப்படி – சுஜாதா
                                    சில வித்தியாசமான சிறுகதைகளின் கோர்வை.
                                    என் மதிப்பெண்கள் 4/5

27. கம்ப்யூட்டர் கிராமம் – சுஜாதா
ஒரு கிராமத்துக்கு சேட்டிலைட் ஸ்டேஷன் நிறுவப்போகும் ஒரு குழு படும் அவஸ்தைகள்.சுவாரஸ்யமான திருப்பங்களுடன்.
என் மதிப்பெண்கள் 3.5/5

28. எக்சிஸ்டென்ஷியாலிசமும் ஃபேன்சி பனியனும் – சாரு நிவேதிதா

29. ஜீரோ டிகிரி – சாரு நிவேதிதா
பின்நவீனத்துவம்’ன்னா என்ன ன்னு தெரிஞ்சுக்க படிச்சது. விளங்கிய பாடில்லை.
மீண்டும் மீண்டும் படிக்கணும்.

ஆங்கில புத்தகங்கள் – எனக்கும் இங்கிலீஸ்க்கும் ரொம்ப தூரம் இருந்தாலும்...

30. Two States – சேதன் பகத்
இரு வேறு மாநிலத்தை சேர்ந்த இருவர் காதல்- இதுக்காகவே படிச்சேன்.
என் மதிப்பெண்கள் 4/5

31. Revolution 2020 – சேதன் பகத்
ரொம்ப எதிர்பார்ப்பில் வந்து ஏமாற்றம் தந்த புத்தகம். சினிமாக எடுக்க வேண்டியது புத்தகமாக வந்து விட்டது.
என் மதிப்பெண்கள் 3/5

32. Deception – சிவசங்கரி
ஆங்கில ஆர்வத்தில் தெரியாமல் படிச்ச புத்தகம். இது அக்மார்க் சென்டிமென்ட் தமிழ்படம்.
என் மதிப்பெண்கள் 2.5/5

33. The Alchemist – பாலோ கொயிலோ
திசையறியா பயணத்தை மேற்கொண்டது போல ஒரு நல்ல அனுபவத்தை தரும் புத்தகம். என் சிறந்த வாசிப்பு 2011
என் மதிப்பெண்கள் 5/5

படித்து பாதியில் விட்டது

34. யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் – யுவன் சந்திர சேகர்
மிகவும் அடர்த்தியான பல சிறுகதைகள் அதன் ஆழம் புரியுமளவு எனக்கு இன்னும் புலமை போதாததால் இப்போதைக்கு மூடி வைத்திருக்கிறேன்.

படித்துக் கொண்டிருப்பது

35. பொன்னியின் செல்வன் – கல்கி
நான்காம் பாகம் தொடங்கியிருக்கிறேன். வர்ணனைகளிலும், வரலாற்றிலும் என்னைத் தொலைத்து தேடிக் கொண்டிருக்கிறேன்.
என் மதிப்பெண்கள் 5/5

2011 ல் முழுவதுமாய் படித்த வலைப்பக்கங்கள்

1. சாளரம் – கார்க்கி
2. பரிசல்காரன் – கிருஷ்ணா
3. லக்கிலுக் – யுவகிருஷ்ணா

அடுத்த மூன்று மாதங்களில்...

எக்சைல் (சாரு), உயிர்ச்சொல் (கபிலன் வைரமுத்து), உள்ளத்திற்கு தேவை ஒரு கோப்பை சூப்பு (மொழிபெயர்ப்பு) மேலும்.....
சென்னையின் செல்வன்


பல வீரதீர சரித்திர நாயகர்களை போற்றிக் கொண்டாடும் நேயர்கள் அனைவரையும் மற்றுமொரு மாவீரன் சரித்திரத்தை அறிந்துகொள்ள அழைக்கிறோம். முன்பொரு காலத்தில் மதராசப்பட்டினம் என்றழைக்கப்பட்டு பின்னர் சென்னை தேசமாக மாறிய ஊரில் தான் நம் கதாநாயகனை காலம் நமக்கு அறிமுகம் செய்கிறது. நேயர்களுக்கும் நாம் அவ்வாறே அறிமுகம் செய்கிறோம். சென்னை தேசம் மாபெரும் அங்காடிகள், மின் தொடர்வண்டி, இரைச்சல் மிகுந்த சாலைகள், சாலைகள் தோறும் ஊர்திகள் என்று அனுகணமும் இயங்கிக் கொண்டிருக்கும் நகரம். அரண்மையாக கட்டப்பட்டவை எல்லாம் ஆதுர சாலைகளாக மாறவேண்டும் என்று ஆணையிட்ட ராணி மங்கம்மாவின் ஆட்சியில் இயங்கும் தலைநகரம். மேலும் சென்னையானது சேர சோழ பாண்டிய மற்றும் மற்ற பல தேசத்து அழகிய மகளிரையும் உள்ளடக்கிய ஒரு பெருநகராகும். இவர்களுக்கெல்லாம் கனவு நாயகனாக விளங்க அழகிற் சிறந்தவனாம் எம்பெருமான் வேலாயுதத்தின் நகலெடுத்து அந்நகலில், ஆதவனைப் பிரதியெடுத்து அதிலிருந்த வர்ணம் கொண்டு உடலையும், பூரண சந்திரனைப் பிரதியெடுத்து அதிற்கொண்ட குளுமையையும் எழிலையும் ஒருசேரக் கலந்து உள்ளத்தையும், சப்தரிஷி மண்டலத்திலிருந்து இரண்டை பெயர்த்தெடுத்து கண்களையும், கொடுத்துச் சிவக்கும் அகண்ட கரங்களையும் படைத்து பூமிக்கு அனுப்பினான் பிரம்மன். சென்னையின் செல்வனாமவன் பெயர் கார்க்கி.

நம் நாயகன் பார்த்த கணத்திலேயே அடுத்தவரை கவரும் வசீகரம் கொண்டவன். பேச்சில் துணுக்கும், அன்பும் பொங்கித் ததும்பி வழியும். தமிழர் மரபாம் வில் வித்தை, குதிரை ஏற்றம், களறி, சிலம்பம், யானை ஏற்றம் போன்ற வித்தைகள் பலவும் கால ஓட்டத்தில் மறைந்திருந்தால் நம் நாயகன் அதிலெல்லாம் வல்லவன் என்று சொல்ல இயலாமல் போயிற்று. இருந்தும் ஓரிடத்திலிருந்து வேறோரிடம் விரைந்து செல்ல உதவும் இருசக்கர வாகனம் விடுதலில் நம் நாயகன் சிறந்து விளங்கினான். தலைக்கவசம் அணிந்து வேகமாக, லாவகமாக அவன் வாகனம் செலுத்தி நிறுத்துகையில் நவ நாகரிக பெண்டிர் கண் இமைக்க மறப்பர். தலைக்கவசம் கழட்டி குறும்புன்னகை புரிந்தால் மாட மாளிகை வாழ் மயில் போன்ற மங்கையர் இதயம் நொறுங்கிச் சுக்குநூறாகும். உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு அவர்கள் உள்ளம் நெகிழும்படி உதவி செய்வதில் நம் நாயகன் கர்ணனுக்கு இணையென்றால் அது மிகையாகாது. இப்படி அத்துணை அழகையும் அறிவையும் ஒருசேரக் காண்பதென்பதரிது. எத்துனையோ பெண்கள் வலை விரித்தும் சிக்காதவன். நம் நாயகன், பொறி வைத்துப் பிடிக்க எலியல்ல, புலி. தூண்டிலில் சிக்க மீனல்ல “சுறா”. சென்னை தேசத்திற்கே கனவுக் கண்ணனாக விளங்கிய நம் நாயகனுக்கு, தேவலோகத்திலிருந்து தவறிவிழுந்து பூலோகம் வந்த ரம்பைகளும், மேனகைகளும் பல பின்நவீனத்துவ வசியங்களை முயன்றும் அதில் வசியப்படாதவன். வானத்து வாழ் தேவதைகளும் பார்த்து வியக்கும் எழில்மேனியோன்.

பேச்சிலும் நம் நாயகன் சிறந்து விளங்கினான். பேசச் சொன்னால், முன்னூறாண்டுத் தேனெடுத்து அதனோடு பாற்கடலில் கடைந்தெடுத்த அமுதம் குழப்பி, மனம் மயக்கும் மணம் கொண்ட தாழம்பூவின் வாசனையோடு உருவாக்கிய திரவியத்தை நுகர்ந்தருந்தியதுபோல ஒரு நல்ல உணர்வினையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் பேச்சாய் அது நிச்சயம் இருக்கும். மேலும் நகைச்சுவை உணர்விலும் சிறந்து விளங்கினான். இதுவே சமகாலத்தில் பல தமிழறிஞர்களாலும் மொக்கை என்றழைக்கப்பட்டது


ஈரடி வேந்தன், சொற்செல்வன் வள்ளுவன் உணவருந்துகையில் அழைத்த குரலுக்கு இறைத்த நீரை அப்படியே விட்டு கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்த வாசுகியின் பக்தியை மிஞ்சும் குரு பக்தி கொண்ட, கட்டை விரலைக் கேட்ட துரோணருக்கு அதை வெட்டிப் படைத்த ஏகலைவனைப் போன்ற நால்வரை சீடர்களாகப் பெற்றார் நம் கார்க்கி. நால்வருக்கும் தனித்தனி பாடங்களைப் பயிற்றுவித்தார். அவர்களுள் வேதாளம், நட்ராஜ் இருவருக்கும் இணைய(ற்ற) நட்பின் இலக்கணத்தையும், சற்றே இலக்கியத்தையும் கற்றுக் கொடுத்தார் (நால்வருள் பிரதான சீடனான வேதாளம் பிற்காலத்தில் சேர நாடு சென்று அழகும், கருணையும், கோபமும் ஒருசேரப் பெற்ற மலையாள கோபியருள் ஒருவரை மணந்து பேரும் புகழும் பெற்று வாழ்ந்தான். சாத்தியமென்றால் பின்வரும் அத்தியாயங்களில் இதை விரிவாகக் காணலாம்). மூன்றாமவன் பிரிட்டோவிற்கு பெண்களைக் கவரும் சூத்திரத்தையும், நான்காமவன் குள்ளபுஜிக்கு போதை மிகு நிலையற்ற உலகில் நிலையான மகிழ்வைத்தரும் சூட்சுமத்தையும் போதித்தார். மேலும் கரகம், குரவைக்கூத்து, பொம்மலாட்டம் போன்றிவை பெரும்பாலும் அழிந்துவிட்ட நிலையில் தன் சீடர்களுடன் பல கருத்துகளையும் குறும்படங்கள் என்னும் நிகழ்வுகளைப் பதியவைத்து பிற்பாடு அதை மீண்டும் காணச் செய்யும் தொழில்நுட்பமாம் காணொளி வாயிலாக உலகிற்களித்தார்.


நண்பர்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் மிக முக்கியமான அத்தியாயம் என்று தன் சீடர்களுக்கு போதித்த கார்க்கியின் மிகச்சிறந்த நண்பர்களைப் பற்றி சொல்லவேண்டியது நம் கடமையாகிறது. அதென்னவோ சங்ககாலந்தொட்டே கதாநாயகர்களுக்கும் பரிசல்காரர்களுக்கும் ஒரு உறவு இருந்துகொண்டுதான் இருக்கிறது. ராமனுக்கு குகனைப் போலவும், பொன்னியின் செல்வனுக்கு பூங்குழலியைப் போலவும் நம் நாயகனுக்கும் பெயரால் பரிசல்காரரான ஒருவரின் நட்பு இருக்கிறது. நட்பிற்கிலக்கணமாக புராணங்கள் கூறும் துரியோதனன்-கர்ணன் நட்பும் இவர்கள் முன்பு தோற்குமெனில் அது பொய்யாகாது.


இந்தச்சமயத்தில் நாம் நிகழ்காலத்திற்கு திரும்பவேண்டியது அவசியமாகிறது. ஒரு போட்டி அல்லது வருடத்தின் சிறந்த குறும்படைப்பு சாதனையாளருக்கான தேர்வு. இதில் உலகிற்கு செய்திகளையும், கருத்துக்களையும் எடுத்துச் சொல்லும் இணையத்தின் வழி அனைவரும் இணைந்த கீச்சுலகில் முடிசூடா மன்னனாய், இணைய(ற்ற) தளபதியாய் விளங்கும் கார்க்கி, தன்னுடன் போட்டியிட்ட அனைவரையும் வென்று முதலிடத்தில் வீற்றிருப்பது, வெஞ்சமரில் வென்று யானை மீதமர்ந்து, வென்றநாட்டில் வலம் வரும் மன்னனைப் போல இறுமாப்பும், கம்பீரமும் கொண்ட சிங்கமாய் காட்சியளிப்பதைப் போலிருக்கிறது. இக்காட்சியைக் காண கண்கோடி வேண்டுமே. இதைக்காணும் ஒவ்வொருவரும், கார்க்கி இதே போல வாழ்வில் பல வெற்றிகளை பெற்று அவர் வாழ்வு சிறக்க இறைவனை இறைஞ்சுவோமாக.அன்பே சிவம்


இன்று ஏதோ சந்திர கிரகணமாம். பாம்பு வந்து சந்திரனை விழுங்குமாம். அந்த வேளையில் எதுவும் சாப்பிடக் கூடாது. கிரகணம் முடிந்ததும் குளிக்க வேண்டும் என்றெல்லாம் பல்வேறு நம்பிக்கைகள். அவ நம்பிக்கை என்று நான் சொல்ல வரவில்லை, எல்லாம் அவரவர் நம்பிக்கை. மூட நம்பிக்கை என்றும் சொல்லவில்லை, முன்னோர்கள் சொன்ன நம்பிக்கை. எது எப்படியோ, என்னைப் பொறுத்தவரை ஒருவரது நம்பிக்கை என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம், அது அடுத்தவரை பாதிக்காத வரையில். பலருக்கும் எடுத்துச் சொல்லவேண்டிய மெத்தப் படித்தவர்களும் இதற்கு உடந்தை போவதே வருந்தற்க விஷயம்.


இன்று என்னறையில் நடந்த நிகழ்வு மிக மோசமாய் சுட்டு விட்டதென்னை. கிரகணம் தொடங்கியதும் உறங்கிப் போனான் அறைத்தோழன். எல்லா பேச்சிலர் அறை வழக்கங்கள் தான் என்னறையிலும். “இன்றைக்கு நான் நாளைக்கு நீ”, கல்லறை வாசகமல்ல இது. சமையலறை வாசகம். இதன்படி நண்பனை தோசை சுட மாவு வாங்கி வரச் சொல்லி பணித்தேன். எழுத்து கிரகணம் தொடங்கியதுமே நித்திரை போனவன் என் உசுப்பலில் எழுந்து அலைபேசியில் நேரம் நோக்கினான். மணி எட்டு, “ஒன்பதரைக்கு கிரகணம் முடிகிறது அப்புறமாய் போகிறேன்” என்றான். பூங்குழலியின் அழகில் மயங்கிக் கிடந்த நான் பொன்னியின் செல்வனோடு பொறாமை வளர்த்து வாசித்தலைத் தொடர்ந்தேன். மணி ஒன்பதும் ஆனது, எழுந்தவன் நேராக குளிக்கச் சென்றுவிட்டான். அடுப்பில் எதுவுமில்லை என்ற கடுப்பில் போட்ட ட்விட்டில் எழுந்த கேள்விக் கணைகளுக்கான பதில் தான் இப்பதிவு. நண்பனைக் குறிப்பிடாமல் பொதுவாக ட்விட்டியது பலரையும் பாதித்திருக்கலாம். சிரம் தாழ்த்தி, பாதமலர் தொட்டு மன்னிப்புக் கோருகிறேன். மன்னித்தருளுக! இருந்தும் மற்ற சில கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியது என் கடமை.


“சபரிமலைக்கு மாலை போட்டிருப்பவன், அடுத்தவன் நம்பிக்கையை கேலி செய்யலாமா?”
நான் ஆத்திகன், நாத்திகன் என்பதை விடுங்கள். மாலை போட்டிருப்பதால் ஒரு பலன். எல்லோரும் என்னைக் கடவுளாக காண்பதாக எண்ணிக் கொண்டு, என்னை மனிதனாகப் பார்க்கிறார்கள். நான் அவர்களை மனிதனாக்கப் பார்க்கிறேன். சென்னை வந்து ஒரு வருடமாகியும் இந்த ஒரு மாதத்தில் தான் மனிதன் என்ற மரியாதை கிடைக்கிறது. அதைக் கேட்டு வாங்கத்தான் தோளில் ஒரு நீலவஸ்திரம். மற்றுமல்லாமல், அசைவம் தவிர்த்திருக்கிறேன். கெட்ட எண்ணங்களை தவிர்த்திருக்கிறேன், தினம் இருவேளைக் குளிக்கிறேன். இருந்தும் ஒருநாள் கூட கோவிலுக்குப் போனதில்லையே? மேலும் என் நம்பிக்கைகள் என்னைச் சார்ந்தவர்களை பாதிக்கும்படி நடந்ததில்லையே! மற்றவர்கள் ஏன் அப்படி இல்லை?


“எதற்காக மாலை போடணும்?”
விரதம் என்ற போர்வையில் எனக்கான ஒரு மன புத்துணர்வை, எண்ணப் புத்துணர்வை இதனால் அடைய முடிகிறது. என்னை என்னாலேயே கட்டுப் படுத்த முடிகிறது. வருடத்தின் பத்து மாதங்கள் எப்படியெல்லாமோ இருக்கிறேன், இரண்டு மாதங்கள் கட்டுப்பாடு முடிகிறது. வருடம் முழுவதும் தண்ணியடித்து திரிபவர்கள் இந்த இரண்டு மாதங்கள் ஒழுங்காய் இருப்பது உதாரணம். காரணம் கடவுளோ, பயமோ அல்ல. மனத்தின் ஒரு ஆசை. "அட! இப்படியெல்லாம் இருக்க மாட்டோமா?" என்று. அதற்கான ஒரு சந்தர்ப்பம் மாலை போடுதல்.


“அப்படி என்னய்யா இருக்கு சபரிமலைல. எதுக்கு சபரிமலை போகணும்?”
சபரிமலையை ஒரு கோவிலாக அல்லாமல் ஒரு புண்ணிய க்ஷேத்ரமாகத் தான் காண்கிறேன். கேரளத்தான் என்பதற்காக மட்டும் இதை சொல்லவில்லை. கேரளத்திலிருந்தாலும் தமிழ்த் தா(க்)கம் தான் எனக்கு அதிகம். எருமேலி’யிலிருந்து சன்னிதானம் வரை 48 மைல்கள்(ஏறக்குறைய) முழுவதும் காட்டு வழிப்பாதையில் இயற்கைக் காற்றை சுவாசித்தபடி, இயற்கையோடு இசைந்து பிளாஸ்டிக், மொபைல் போன்ற அன்றாட இம்சைகள் இல்லாமல் செருப்பில்லா நடை பயணம். என்னைப் பொறுத்தவரை கடவுள் என்பது மனிதனை இயக்கம் விசை. அப்படியானால் “திங்களைப் போற்றியும், ஞாயிறைப் போற்றியும், மாமழையை போற்றியும்” எனும் இயற்கை வாழ்த்தை மனத்தில் கொண்டவனான எனக்கு இயற்கை தான் கடவுள். இயற்கைதான் மனிதனை இயக்குகிறது. எனவே இப்பயணத்தை என் உடல் புத்துணர்வுக்கான ஒரு வழியாய் உணர்கிறேன். மாலை போடாமல் போவது அங்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும், கேள்விகளை ஏற்படுத்தும் அதற்காகத் தான் இந்த மாலை, அன்றி வேறொன்றுமில்லை. சபரிமலையை மட்டும் இப்படிச் சொல்லவில்லை. ஆந்திராவில் ஸ்ரீசைலம் புண்ணியஸ்தலத்தையும் இப்படித்தான் சொல்லுவேன். இரண்டு மலைகளுக்கிடையில் நதி முகட்டில் அந்த திருத்தலம், சொர்க்கம்.


“என்னதான் சொல்ல வர்ற?”
இக்கணத்தில் கடவுள் இல்லை என்பவன், நாளை எனக்கோ, என் தாய்க்கோ, என் குடும்பத்திற்கோ ஏதேனும் ஒன்று என்றால் நான் கூட கடவுளிடம் போய் கையேந்தலாம். யார் கண்டார்? 

டிஸ்கி: கடவுளை வணங்குபவர்களை எல்லோரும் தேவைக்காக போகிறார்கள் என்று சொல்லவில்லை, உயிர் போகும் நிலை வந்தால் ஒருவேளை "நானும்" கடவுளிடம் போகலாம் என்றுதான் சொல்கிறேன்.

ExeCUTE!


/*
எழுதியவர்:  அர்ஜுன்
வகை:      ஆப்ஜெக்ட் ஒரியண்டட் ஃபிக்ஷன், கம்ப்யூட்டர் ஃபிக்ஷன்
மொழி:      C உடன் கலந்து COBOL
பெயர் உதவி: @Nattu_G, @kekkepikkuni
*/


#include<பொண்ணுங்க.h>
#include<பசங்க.h>
#include<கல்லூரி.h>

//பொதுமாறிலி-Global Variable declaration
double காதல்;

துவக்கம்()
{
character தலைவன்=”விஷ்வா”;
character தலைவி=”ஷ்ருதி”;
character காதலன்;
character காதலி;

perform கல்லூரி_துவக்கம்();
go to “சில நாட்களுக்கு பிறகு”;

perform தெரியாம_இடிச்சுக்கிட்டாங்க();
Display(“சாரிங்க... நீங்க ஃபர்ஸ்ட் இயர் IT தானே? \n”);
Accept(“ஆமா. நான் ஷ்ருதி. நீங்க? \n”);
Display(“நானும் உங்க க்ளாஸ் தான். நான் விஷ்வா \n”);
Accept(“ஓ! சாரிங்க. தெரியாம இடிச்சுட்டேன் \n”);
perform பிட்டு_போடு();

Do Until திரும்பி_பாக்குற_வர {
    do கையை_மடக்கி_மெதுவா_நெஞ்சில்_குத்துதல்();
                Display(“என்னா பொண்ணுடா அவ!”);
                          };

if (தலைவி is புன்னகை)
   go to song(கண்கள்_இரண்டால்);
else
   go to துவக்கம்(try_again);

move from நட்பு to காதல்;

function லவ்வு(தலைவன்,தலைவி)
{
       perform ஊர்_சுற்றுதல்();
      perform சினிமா();   
      do until 3AM {
                 perform தொலைபேசுதல்();
                 }
      தலைவன்_பணம்--;
};//end_of_function

do until End_of_Love{
                perform ஊடல்;
                perform கூடல்;
                }

Display(“Enter Choice” \n”)
Accept(“Option”);

Switch (option)
      {
      case தலைவன்_பணம்_ஜீரோ:
            drop தலைவன்;
            new காதலன்;
            break up;

      case புது_ஃபிகர்:
            drop தலைவி;
            new காதலி;
            break up;

      case ரெண்டுமே_லூசுங்க:
            perform தற்கொலை();
            break up;
            end_of_program;

      case ரெண்டுமே_உறுதி;
            love_success = “TRUE”
            no break up;

      default:
            exit(பெத்தவங்களுக்கு_தெரிஞ்சிடுச்சு);
            break up;
      }//end_of_switch

if (தலைவன் Exists && தலைவி Exists && Love_success=”TRUE”)
      perform கண்ணாலம்();
      end_of_program();
else
      perform search_ஈயமோ_பித்தாளையோ_பூசுனதோ_பூசாததோ();
      end_of_life();

}//முற்றும்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

குள்ளநரிக் கூட்டம்டிசம்பர் 2 வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணி
“மாமலைஏறி வரும் தென்னல்..... புது மணவாளன் தென்னல்.... பள்ளி மேடையேத் தொட்டுவ்...”
-ரிங்டோன்
“ஹலோ, யாருங்க?”
“ஹலோ சார், ஐ யம் திவ்யா ஃப்ரம் சிஃபி பிராட்பேண்ட்”
பேசுறாங்களா இல்லை பாட்டுறாங்களா என்று கணிக்கவியலா குரல்.
“ஹ்ம்ம், ச்சொல்லுங்க...”
“சார், “அர்ஜுன் விக்கிரமாதித்தன்” இந்த ஐ.டி நீங்க யூஸ் பண்றிங்க தானே? உங்க அக்கவுண்ட் கமிங் சண்டே’யோட எக்ஸ்பயர் ஆகுது சார். ரினிவல் பண்ண விரும்புறிங்களா?”
“மேடம், நான் ஆஃபீஸ் ல இருக்கேன், ஈவினிங் கால் பண்ண முடியுமா? ஐ வான்ட் டூ டாக் அபவுட் தி ப்ளான்ஸ்”
“ஷ்யூர் சார், சிக்ஸ் ஓ கிளாக் கூப்பிடட்டுமா?”
“ஓகே.. தேங்க் யூ”
-கட்


மாலை 6.10
“மாமலைஏறி வரும் தென்ன...”
“ஹலோ?”
“சார், திவ்யா ஃப்ரம் சிஃபி. ஈவினிங் கூப்பிட சொல்லியிருந்தீங்களே”
“யா! மேடம் இப்போ நான் 512 Kbps அன்லிமிட்டட் பிளான் யூஸ் பண்றேன். மூணு மாசத்துக்கு 1500 ரூபாய் தான். இதே பிளான் கிடைக்குமா?”
“சாரி சார். அது ஆஃபர் பேக். இப்போ அது இல்லை சார். வேற ஏதாச்சும் பிளான் எடுக்க விரும்புறீங்களா?”
“சாரி மேடம். நாட் இன்ட்ரெஸ்ட்டேட்.”
-கட்.


மாலை 6.42
“டேய்... போன் அடிக்குதுடா...”
“யார்ன்னு பாருடா... அப்படி ஒண்ணும் முக்கியமான கால் எனக்குவராது”
“டேய்.. சிஃபி ல இருந்து பேசுறாங்க டா”
“----“
“ஹலோ?”
“சார், நீங்க கேட்ட பிளான் இருக்கு சார். நான் உங்களுக்காக ரெக்வெஸ்ட் பண்ணேன். பட் நீங்க இன்னிக்கே ஆன்லைன்ல பே பண்ணனும்”
“சாரி மேடம். யாராச்சும் வந்து கலெக்ட் பண்ண சொல்லுங்க. ஆன்லைன்ல பே பண்ண முடியாது”
“ஓகே சார். நாளைக்கு நீங்க ஃப்ரீயா இருப்பீங்களா?”
“எக்ஸ்க்யூஸ்மி?”
“நாளைக்கு நாங்க பெர்சன் அனுப்பி கலெக்ட் பண்ணிக்கலாமா?”
“ஓகே.. நாளைக்கு எப்ப வேணா கலெக்ட் பண்ணிக்கலாம். BTW எப்போ ஆக்டிவேட் ஆகும்?”
“சார்... நீங்க ப்ரீமியம் கஸ்டமர். சோ என் சொந்த ரிஸ்க் ல நான் இப்பவே உங்களுக்கு ஏக்டிவேட் பண்ணிடுறேன். நாளைக்கு பணம் கொடுத்துடுவீங்கல்ல?”
“சாமி சத்தியமா கொடுத்துடுறேங்க...”
<சின்ன சிரிப்பு>
“ஓகே சார்... ஹேவ் அ நைஸ் டே”
-கட்.


டிசம்பர் 3 சனிக்கிழமை
ஊரிலிருந்து பெரியம்மா பெரியப்பா கூடவே நண்டு சிண்டு எல்லாரும் சென்னைக்கு வந்ததால காலைலேயே கிளம்பிப் போகவேண்டிய கட்டாயம்.
காலை 9.45
“சார்., திவ்யா சார். லெவன் ஓ கிளாக் வந்தா அமவுண்ட் கலெக்ட் பண்ணிக்கலாமா சார்?”
“சாரி மேடம். நான் இப்போ வெளில இருக்கேன். ஈவ்னிங் கலெக்ட் பண்ணிக்கோங்க”
“என்ன சார். எப்ப வேணா கலெக்ட் பண்ணலாம்’ன்னு சொன்னிங்க, இப்போ இப்படி சொல்றிங்க. ஆன்லைன்ல டிரான்ஸ்ஃபர் பண்ண முடியுமா?”
“என்ன மேடம் நம்பிக்கை இல்லையா? ஓடிட மாட்டேன் மேடம். கொஞ்சம் ஒர்க் இருக்கு”
“அப்படி இல்லை சார், அட்லீஸ்ட் ஆப்டர்நூன்?”
“பாக்கலாம்”
-கட்


காலை 11.10
“சார், திவ்யா. ஒன் ஓ கிளாக் கலெக்ட் பண்ணிக்கலாமா சார்”
“ட்ரை பண்றேன் மேடம். இப்போ சென்ட்ரல்ல இருக்கேன்”
“ஓகே சார்”
-கட்


மதியம் 12.10
<அட்டென்ட் பண்ணலை>
மதியம் 12.40
<அட்டென்ட் பண்ணலை>
மதியம் 1.10
“சாப்பிட்டு இருக்கேன்’ங்க?”
“சாரி சார்”
மதியம் 1.40
“சார், எப்போ வருவீங்க?”
“கிளம்பிட்டேன்’ங்க.. 30 மினிட்ஸ்”
-கட்


மதியம் 2.00
மதியம் 2.15
மதியம் 2.30
இறுதியில் மதியம் 2.35 க்கு பணத்தை ஒப்படைத்து விட்டு வெறுப்பில் ரூமுக்கு திரும்பினேன்.
“எங்கடா  போன?” நண்பன்.
ஒருநிமிடம் அவனை உற்று நோக்கி
“ஏன் மச்சி நீ ரெண்டு வருஷமா லவ் பண்றல்ல... யூ ஆர் கிரேட் மச்சி”
“என்னடா ஆச்சு..”
“விட்றா.. அது பெரிய கதை” சொல்லிக் கொண்டிருக்கும்போதே...
“மாமலைஏறி வரும் தென்னல்.....
“சார்! நான் திவ்யா பேசுறேன்!
“அதான், பணம் கொடுத்திட்டினே அப்புறம் என்ன?
“சாரி சார்! ரொம்ப தொந்திரவு பண்ணிட்டேன்! நீங்க தந்துடுவிங்கனு தெரியும். இருந்தாலும் மன்த் எண்ட் டார்கெட் சனிக்கிழமை அரை நாள் வேற அதான்!
“சரி விடுங்க! நானும் டென்சன்ல பேசிட்டேன்!
“ஒரு ப்ளான் அறிமுகப்படுத்தி இருக்கோம். உங்க பிரெண்டு யாரையாவது ரெஃபர் பண்ணிங்கன்னா உங்களுக்கு 10% டிஸ்கவுண்ட்! திங்கக் கிழமை தான் கடைசி நாள்.
"நானும் எவ்ளோ நாள் தான் நல்லவனாவே நடிக்கிறது" மனசாட்சி சொல்ல,
“நகிர்தினா திரனனா திரனா.......” நண்பனின் செல்போன் கதறியது.