குள்ளநரிக் கூட்டம்டிசம்பர் 2 வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணி
“மாமலைஏறி வரும் தென்னல்..... புது மணவாளன் தென்னல்.... பள்ளி மேடையேத் தொட்டுவ்...”
-ரிங்டோன்
“ஹலோ, யாருங்க?”
“ஹலோ சார், ஐ யம் திவ்யா ஃப்ரம் சிஃபி பிராட்பேண்ட்”
பேசுறாங்களா இல்லை பாட்டுறாங்களா என்று கணிக்கவியலா குரல்.
“ஹ்ம்ம், ச்சொல்லுங்க...”
“சார், “அர்ஜுன் விக்கிரமாதித்தன்” இந்த ஐ.டி நீங்க யூஸ் பண்றிங்க தானே? உங்க அக்கவுண்ட் கமிங் சண்டே’யோட எக்ஸ்பயர் ஆகுது சார். ரினிவல் பண்ண விரும்புறிங்களா?”
“மேடம், நான் ஆஃபீஸ் ல இருக்கேன், ஈவினிங் கால் பண்ண முடியுமா? ஐ வான்ட் டூ டாக் அபவுட் தி ப்ளான்ஸ்”
“ஷ்யூர் சார், சிக்ஸ் ஓ கிளாக் கூப்பிடட்டுமா?”
“ஓகே.. தேங்க் யூ”
-கட்


மாலை 6.10
“மாமலைஏறி வரும் தென்ன...”
“ஹலோ?”
“சார், திவ்யா ஃப்ரம் சிஃபி. ஈவினிங் கூப்பிட சொல்லியிருந்தீங்களே”
“யா! மேடம் இப்போ நான் 512 Kbps அன்லிமிட்டட் பிளான் யூஸ் பண்றேன். மூணு மாசத்துக்கு 1500 ரூபாய் தான். இதே பிளான் கிடைக்குமா?”
“சாரி சார். அது ஆஃபர் பேக். இப்போ அது இல்லை சார். வேற ஏதாச்சும் பிளான் எடுக்க விரும்புறீங்களா?”
“சாரி மேடம். நாட் இன்ட்ரெஸ்ட்டேட்.”
-கட்.


மாலை 6.42
“டேய்... போன் அடிக்குதுடா...”
“யார்ன்னு பாருடா... அப்படி ஒண்ணும் முக்கியமான கால் எனக்குவராது”
“டேய்.. சிஃபி ல இருந்து பேசுறாங்க டா”
“----“
“ஹலோ?”
“சார், நீங்க கேட்ட பிளான் இருக்கு சார். நான் உங்களுக்காக ரெக்வெஸ்ட் பண்ணேன். பட் நீங்க இன்னிக்கே ஆன்லைன்ல பே பண்ணனும்”
“சாரி மேடம். யாராச்சும் வந்து கலெக்ட் பண்ண சொல்லுங்க. ஆன்லைன்ல பே பண்ண முடியாது”
“ஓகே சார். நாளைக்கு நீங்க ஃப்ரீயா இருப்பீங்களா?”
“எக்ஸ்க்யூஸ்மி?”
“நாளைக்கு நாங்க பெர்சன் அனுப்பி கலெக்ட் பண்ணிக்கலாமா?”
“ஓகே.. நாளைக்கு எப்ப வேணா கலெக்ட் பண்ணிக்கலாம். BTW எப்போ ஆக்டிவேட் ஆகும்?”
“சார்... நீங்க ப்ரீமியம் கஸ்டமர். சோ என் சொந்த ரிஸ்க் ல நான் இப்பவே உங்களுக்கு ஏக்டிவேட் பண்ணிடுறேன். நாளைக்கு பணம் கொடுத்துடுவீங்கல்ல?”
“சாமி சத்தியமா கொடுத்துடுறேங்க...”
<சின்ன சிரிப்பு>
“ஓகே சார்... ஹேவ் அ நைஸ் டே”
-கட்.


டிசம்பர் 3 சனிக்கிழமை
ஊரிலிருந்து பெரியம்மா பெரியப்பா கூடவே நண்டு சிண்டு எல்லாரும் சென்னைக்கு வந்ததால காலைலேயே கிளம்பிப் போகவேண்டிய கட்டாயம்.
காலை 9.45
“சார்., திவ்யா சார். லெவன் ஓ கிளாக் வந்தா அமவுண்ட் கலெக்ட் பண்ணிக்கலாமா சார்?”
“சாரி மேடம். நான் இப்போ வெளில இருக்கேன். ஈவ்னிங் கலெக்ட் பண்ணிக்கோங்க”
“என்ன சார். எப்ப வேணா கலெக்ட் பண்ணலாம்’ன்னு சொன்னிங்க, இப்போ இப்படி சொல்றிங்க. ஆன்லைன்ல டிரான்ஸ்ஃபர் பண்ண முடியுமா?”
“என்ன மேடம் நம்பிக்கை இல்லையா? ஓடிட மாட்டேன் மேடம். கொஞ்சம் ஒர்க் இருக்கு”
“அப்படி இல்லை சார், அட்லீஸ்ட் ஆப்டர்நூன்?”
“பாக்கலாம்”
-கட்


காலை 11.10
“சார், திவ்யா. ஒன் ஓ கிளாக் கலெக்ட் பண்ணிக்கலாமா சார்”
“ட்ரை பண்றேன் மேடம். இப்போ சென்ட்ரல்ல இருக்கேன்”
“ஓகே சார்”
-கட்


மதியம் 12.10
<அட்டென்ட் பண்ணலை>
மதியம் 12.40
<அட்டென்ட் பண்ணலை>
மதியம் 1.10
“சாப்பிட்டு இருக்கேன்’ங்க?”
“சாரி சார்”
மதியம் 1.40
“சார், எப்போ வருவீங்க?”
“கிளம்பிட்டேன்’ங்க.. 30 மினிட்ஸ்”
-கட்


மதியம் 2.00
மதியம் 2.15
மதியம் 2.30
இறுதியில் மதியம் 2.35 க்கு பணத்தை ஒப்படைத்து விட்டு வெறுப்பில் ரூமுக்கு திரும்பினேன்.
“எங்கடா  போன?” நண்பன்.
ஒருநிமிடம் அவனை உற்று நோக்கி
“ஏன் மச்சி நீ ரெண்டு வருஷமா லவ் பண்றல்ல... யூ ஆர் கிரேட் மச்சி”
“என்னடா ஆச்சு..”
“விட்றா.. அது பெரிய கதை” சொல்லிக் கொண்டிருக்கும்போதே...
“மாமலைஏறி வரும் தென்னல்.....
“சார்! நான் திவ்யா பேசுறேன்!
“அதான், பணம் கொடுத்திட்டினே அப்புறம் என்ன?
“சாரி சார்! ரொம்ப தொந்திரவு பண்ணிட்டேன்! நீங்க தந்துடுவிங்கனு தெரியும். இருந்தாலும் மன்த் எண்ட் டார்கெட் சனிக்கிழமை அரை நாள் வேற அதான்!
“சரி விடுங்க! நானும் டென்சன்ல பேசிட்டேன்!
“ஒரு ப்ளான் அறிமுகப்படுத்தி இருக்கோம். உங்க பிரெண்டு யாரையாவது ரெஃபர் பண்ணிங்கன்னா உங்களுக்கு 10% டிஸ்கவுண்ட்! திங்கக் கிழமை தான் கடைசி நாள்.
"நானும் எவ்ளோ நாள் தான் நல்லவனாவே நடிக்கிறது" மனசாட்சி சொல்ல,
“நகிர்தினா திரனனா திரனா.......” நண்பனின் செல்போன் கதறியது.

8 comments:

நடராஜன் said...

சூப்பர் டா! உரையாடல் மட்டுமே வைத்தாலும் நாடக எஃபெக்ட் வராமல் தந்திருக்க! :)

amas said...

Created a story out of an actually annoying daily occurrence! Very nice.
amas32

Balu Sv said...

அருமை குரு! உரையாடல்கள் இயல்பா இருக்கு! ஃபினிஷிங்கும் சூப்பர்... :-))

trichy royal ranger said...

பாஸ் ....... சூப்பர் பாஸ் ........

ஒரு சின்ன request அடுத்த முறை இந்த மாதிரி கடலை மேட்டர் எல்லாம் ஆடியோ வா ரெகார்ட் பண்ணி போட்டிங்க நா படிக்குற (கேக்குற) எங்களுக்கும் குஜால்டி யா டைம் பாஸ் ஆகும் ல ........ ஹி ஹி

iyyanars said...

nice...!

Anonymous said...

First class ...

jroldmonk said...

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் உன் புலமை அதிகமாகுது .. நல்லாருக்கு :-)

திருமாறன்.தி said...

நீ வளர்கிறாய் அர்ஜூன்...கிப் இட் அப்