அரவான்சாகித்ய அகாதமி பேரைக் கேட்டப்பவே கொஞ்சம் சுதாரிச்சிருக்கணும். ஏதோ பழைய காலத்துப் படமா இருக்கும், போதாக் குறைக்கு இந்த ஆதிப் பையன் மேல கொஞ்சம் நம்பிக்கை. மிருகம், ஈரம் படமெல்லாம் பார்த்து பிடிச்சிருச்சுன்னு நம்பி போலாமேன்னு போனேன். ஊருக்குள்ள களவாடி அதை வித்து வேம்பூர் கிராமத்துக்கே சோறு போடும் கிராமத்து களவாணி பசுபதி. மகாராணி வைர அட்டியை தந்திரமாக திருடி வரும் ஆதியின் திறமை கண்டு தங்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்கிறார். இரண்டு களவாணிகளும் ஒன்று கூடி ராசகளவு செய்ய, அங்கே பசுபதி மாட்டிக் கொள்ள, அவரைக் காப்பாற்றுகிறார் ஆதி. இருந்தாலும் எதையோ மறைக்கிறார் ஆதி(ஆஆஆவ்வ்வ்....). பின்ன இடைவேளைக்கு பிறகு கதை வேண்டாமா? இடைவேளைக்குப் பின் ஆதியின் ஃபிளாஷ்பேக். காவல்காரனாக ஆதி. ஊர் இளசுகள் காவலுக்குச் சென்ற நேரம் ஊரில் அசலூரான் ஒருவன் கொல்லப் படுகிறான். அதற்குப் பதிலாக ஆதியைப் பலி கொடுக்க முடிவெடுக்கிறார்கள். ஆதி அதிலிருந்து தப்பினாரா எல்லையா என்பது மீதிக் .......(தூங்கிட்டேன்).

அரவான் – பெயரை வைத்தே இரண்டை ஊகித்துச் செல்லலாம். அறுபத்தி நாலு அழகும் வாய்ந்தவன், பாண்டவர்கள் போரில் வெல்ல பலி கொடுக்கப் படுபவன். அதேதான் இங்கும். முதல் பாதியில் பசுபதி + ஆதி நடிப்பில் எதிர்பார்ப்பு எகிறிவிடுகிறது. சட்டையே போடாமல் நடிக்க இனி ஆதி தான் பெஸ்ட் சாய்ஸ். மிருகம் படத்திற்கு பிறகு அப்படி ஒரு நடிப்பு. ஆனால் அப்படி அகலமான ஒரு உடல்வாகுடன் காமெடி செய்வது சகிக்கவில்லை. பசுபதியும் கரிகாலனும் நன்றாகவே நடித்திருக்கின்றனர். “நாட்டுக் கோழிய போடுறம்னுட்டு போண்டாக் கோழிய போட்டுட்டானுங்க மருமகனே” கதையாய் அஞ்சலியை வைத்து ஹைப் ஏற்றி விட்டார்கள். ஆனால் அஞ்சலி வருவது என்னவோ முப்பது செகண்டுகள் தான். அதற்கு ஈடாக கண்ணுக்கு குளிர்ச்சியாய் மூன்று பேர். கொடுத்த காசுக்கு (டிக்கெட் காசு) ஒரே திருப்தி. அதிலும் ஸ்வேதா மேனன் பாட்டு ஹ்ம்ம்.... அதகளம். அந்த மூன்று பேர்.

பதினெட்டாம் நூற்றாண்டு படம் என்றதாலேயே படம் ஒரே க்ரே கலரில் தெரிகிறது. பசுமையாய் ஒன்றையும் காட்டவில்லை படத்தில். போன நூற்றாண்டுகளில் அவ்வளவு வறட்சியாகவா இருந்தது தமிழகம்? ஆதி, பசுபதியைக் காப்பாற்றிக் கொண்டு வரும் சீனில் மருதநாயகம் ட்ரெய்லர் நினைவில் வந்து தொலைக்கிறது. பின்னணி இசை என்றெலாம் பெரிதாய் ஒன்றுமில்லை. பாடல்கள் சுமார். நிலா நிலா பாடல், ஸ்வேதா மேனன் பாடல் இரண்டும் ரசிக்க வைக்கின்றன.

இதையெல்லாம் விட பெரிய அபத்தமாய், “தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும், தருமம் மறுபடியும் வெல்லும்” என்னும் 80 வருடமாய் தமிழ் சினிமா கட்டிக் காப்பாற்றிய ஒரு நம்பிக்கை இப்படத்தில் தோற்கடிக்கப்படுகிறது. மரண தண்டனை கூடாது என்னும் மெசேஜ் போட்டு படம் முடிவதாக பைக் ஸ்டேண்டில் எல்லாரும் பேசிக் கொண்டார்கள்.9 comments:

மதுரை சரவணன் said...

படம் பார்க்கும் ஆர்வத்தை குறைத்து விட்டீர்கள்… அரவான் போனால் கன்னத்தில் அறைவான் என்ற ரேஞ்சில் விமர்சனம் போட்டுள்ளீர்கள்…!

Anonymous said...

படத்தில் குறை சொல்லவேண்டும் நிறைய ஹிட்ஸ் வர வேண்டும் என்ற உங்கள் "உயர்ந்த(?)" எண்ணம் நிறைவேறும் .. பட் யு ஸ்பாயில் யுவர் நேம்

வேதாளம் அர்ஜுன் said...

@அனானி: படத்துல இருக்கிறத தான் சொல்ல முடியும் பாஸ். அப்புறம் ஹிட்ஸ்க்காக பதிவு எழுதுபவன் அல்ல நான். என் ஹிட்ஸ் பார்த்தாலே அது உங்களுக்கு விளங்கும்.

நடராஜன் said...

விமர்சனம் என்னும் போது குறை நிறைகள் இருக்க வேண்டும்! இது விமர்சனமே இல்லை என்ற ரீதியில் வாதாடினால் ஒன்றே ஒன்று தான் சொல்ல வேண்டும்! ”வா மச்சி டீ சாப்பிடலாம்”

ILA(@)இளா said...

அமெரிக்காவில என்னுடைய நண்பர்தான் விநியோகம் பண்றார். ஆனா எங்க ஊர்ல வெளியாகல. எப்படியும் வட்டுதான்.

Mamathi said...

Appadiya ...

குழந்தபையன் said...

எனக்கும் இதே உணர்வு தான் தோன்றியது.. படம் முழுக்க ஒரு கருத்தும் endcard இல் வேறொரு கருத்தும் உள்ளது..

வசந்த பலன் செல்வராகவனுக்கு கொஞ்சம் தேவலாம் #ஆ.ஒ

கார்க்கி said...

அப்ப‌ ஸ்கிப் ப‌ண்ணிட‌றேன்.. ந‌ம‌க்கு ஆகாது :)

தட்சிணாமூர்த்தி said...

மச்சி உன் ப்ளாக் படிக்கிறதே உன் எழுத்து நடைக்காக தான்....அருமையா இருக்கு....வாழ்த்துக்கள்....