கிரிக்கெட் குவிஸ்


  1. ஒருநாள் போட்டிகளில் அணிக்கு 50 ஓவர்கள் வீதம் தலா 300 பந்துகள் வீசப்படுகின்றன. ஒரே போட்டியில் ஒரு தனி நபராக அதிக பந்துகளை சந்தித்த வீரர் யார்?
  2. டெஸ்ட் போட்டிகளில் டிராவிட் ட்ராவிட் ஐந்து முறை பவுலிங் செய்திருக்கிறார். ஒரே ஒரு விக்கெட் மட்டுமே எடுத்திருக்கிறார். டிராவிட் டெஸ்ட் கிரிக்கெட்டில் பவுலிங் செய்து ஆட்டமிழக்கச் செய்த ஒரே வீரர் யார்?
  3. T20 போட்டிகளில் மேட்ச் டை ஆக முடிந்தால் சூப்பர் ஓவர் வீசப்பட்டு அதில் அதிக ரன்கள் அடிக்கும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் ஒரே எண்ணிக்கையை அடித்திருந்தால் போட்டியின் முடிவு எதை கணக்கில் கொண்டு அறிவிக்கப்படும்?
  4. படத்தில் இருக்கும் இவர் ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் கேப்டனாக இருந்தவர். இவர் செய்த சாதனை என்ன?

  5. அனைத்து வகை ஒருநாள் போட்டிகளிலும், ஒரு இன்னிங்சில் ஒரு பந்து வீச்சாளரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச விக்கெட்டுகள் எத்துனை? அந்த சாதனைக்கு சொந்தக்காரர் யார்?
விடைகள்:

1. கனடா அணியை சேர்ந்த ஆஷிஷ் பகாய் என்பவரே ஒரு இன்னிங்சில் அதிக பந்துகளை சந்தித்த வீரர். ஸ்காட்லாந்து அணிக்கெதிரான ஒரு போட்டியில் 172 பந்துகளை விளையாடி 137* ரன்கள் எடுத்தார்.

2. டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிட்டால் அவுட் செய்யப்பட்ட ஒரே வீரர்: மேற்கிந்திய தீவுகளின் ரிட்லி ஜேக்கப்ஸ்.

3. சூப்பர் ஓவரிலும் போட்டி டை ஆகும் பட்சத்தில், எந்த அணி அதிக சிக்சர்களை அடித்துள்ளதோ அந்த அணி வெற்றி பெற்றதாய் அறிவிக்கப்படும். ஒருவேளை சிக்சர்களின் எண்ணிக்கையும் சமமாக இருக்குமாயின் பவுண்டரி(No. of 4s) களின் எண்ணிக்கையை வைத்து வெற்றி முடிவு செய்யப்படும்.

4. படத்தில் இருப்பவர் பெலிண்டா கிளார்க். ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்தவர். ஒருநாள் போட்டிகளில், ஒரு இன்னிங்சில் அதிக ரன்களை அடித்தவர்(229*) என்ற சாதனையை இன்று வரை தக்கவைத்துக் கொண்டிருப்பவர்.


5. இர்பான் பதான். 19 வயதிற்கு உட்பட்டோருக்கான சர்வதேச ஒருநாள் போட்டி ஒன்றில், 16 ரன்களை விட்டுக் கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

விடையளித்த, முயற்சித்த அனைவருக்கும் வாழ்த்துகள்.

13 comments:

கார்க்கி said...

Bill athey

ஜேக்க‌ப்ஸ்

அதிக‌ 6 அடித்த‌‌ டீம் ஜெயிக்கும்

பெலின்டா கிளார்க். ஒரு நாள் போட்டியில் அதிக‌ ஸ்கோரான 229 அடித்தார்

8.வாஸ்

வினையூக்கி said...

1.Ashish Bagai
2.Ridley Jacobs
3.Highest number of sixes scored
4.Belinda Clark - She was a player, Captaion, and CEO of Australia Womens Cricket Board.
5.Chaminda Vaas

வேதாளம் அர்ஜுன் said...

@karki 2,3,4 correct.

@vinaiooki: 1,2,3,4 correct.

@karki & @vinaiooki: for 5th quest - clue "அனைத்து வகை ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில்"

வந்தியத்தேவன் said...

1. Glenn Turner New Zealand
2. கொஞ்சம் கஸ்டமாக இருக்கு
3. எந்த அணி அதிகம் சிக்ஸ் அடித்ததோ அந்த அணி வெல்லப்ப்பட்டதாக அறிவிக்கப்படும்
4. ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதமடித்தவர்
5. Chaminda Vass

வேதாளம் அர்ஜுன் said...

@வந்தியத்தேவன்: 3,4 சரி. 1- 50 ஓவர் போட்டிகளில் :)

@vinaiooki: 4 th க்கு விடை வரவில்லையே. ஆனால் சொன்ன ஆள் சரி.

வேதாளம் அர்ஜுன் said...

@karki @vinaiooki @vanthiyathevan: for Qn:3 - if u still have tie?

வினையூக்கி said...

9, Irfan Pathan... Since this is Under 19, it will not fall under LIST A Cricket.

வினையூக்கி said...

Belinda, scored ODI double century befor Sachin

வேதாளம் அர்ஜுன் said...

@vinaiooki: Now all correct. Thanks boss for ur support.

காரணன் said...

1. 50 ஓவர் மேட்ச்சில் ஆஷிஷ் பாக்கை (asish bagai) 172 பந்துகள் -கனடா

2.ரிட்லி ஜகாப்ஸ் (ridley jacobs) - மேற்கிந்திய தீவுகள் .

3.எந்த அணி அதிகமான சிக்ஸர்(6) அடித்ததோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

4.பெலிண்டா கிளார்க் (belinda clark). இவர் அடித்த 229 தான் பெண்கள் ஒருநாள் போட்டிகளில் சாதனையாகும்.

5.ராகுல் சங்வி ( rahul sanghvi) 8/15.

காரணன் said...

5. சமிந்தா வாஸ் 8/19..

காரணன் said...

மீண்டும் 5 ஆம் கேள்விக்கான பதில். இர்பான் பதான் 9/16. (under 19 asia tournament)

Anonymous said...

the team which hit most no.of sixes in SUPER OVER will win. If it is also same then the No.of sixes in the innings will be considered. and then the no.of 4s