இனியவை நூற்றிநாற்பது!

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நான் ட்விட்டருக்கு வந்து ஒரு வருடம் இரண்டு மாதங்கள் முடிந்து விட்டது. வலைபாயுதே பார்த்து கார்க்கி, கோளாறு, மினிமீன்ஸ் இவர்களின் ட்வீட்டுகளால் இன்ஸ்பயர் ஆகி ட்விட்டருக்கு வந்தேன். கடந்த ஒரு வருடத்தில், பல விஷயங்கள் கற்று கொண்டேன். நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். இணையம் தானே என்பதால் விர்ச்சுவல்’ஆன நட்பாக ட்விட்டர் நட்புகள் முடிந்து விடவில்லை. வேறொரு ஊரிலிருந்து சென்னை வந்து என் பிறந்தநாளைக் கொண்டாடிச் செல்லுமளவு நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். புத்தகங்களுக்குள் புதையுண்டு மதிப்பெண்களுக்காகவும், வேலைக்காகவும் கல்லூரியில் சுற்றித் திரிந்திருந்தவனை திடீரென ஒரு நாள் “இதுதான் சமூகம், இங்குதான் வாழ போகிறாய். வாழ்கிறாயோ இல்லையோ, இங்குதான் நீ பணம் சம்பாதிக்க போகிறாய். அதை உருப்படியாய்ச் செய்” என்று இச்சமூகத்தில் தூக்கி எறிந்து விட்டார்கள். புத்தகங்களையும், கேள்வித்தாள்களையுமே சமாளித்திருந்தவன் எனக்கு நிஜ உலகின் பிரச்சினைகள் பெரும் மன உளைச்சலைத் தந்தன. அந்த சமயத்தில் என்னைத் தாங்கியது ட்விட்டர். இன்னும் சொல்லப்போனால் ட்விட்டரில் நான் கண்ட வழிகாட்டிகள் பலர். சிறு வயதில் எனக்குள் ஊறிப்போய் பின்னர் சூழ்நிலைகளால் மறக்கடிக்கப் பட்ட எழுத்தை மீண்டும் தூண்டியத்தில் ட்விட்டருக்குப் பெரும் பங்குண்டு. இவற்றையெல்லாம் நினைத்து என் நண்பர்கள்/வழிகாட்டிகள் அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறேன்.

கடந்த ஒரு வருடத்தில் நான் போட்ட ட்வீட்டுகளில் ஓரளவு சிறந்தவைகளை ஒரு ஈ-புக் ஆக உருவாக்கி அதைப் பகிர ஆசைப் பட்டேன். அது இப்போது நிறைவேறியிருக்கிறது. இருந்தாலும் ஒரு நிஜ புத்தகமாக இருக்கும் தருணத்தில் கார்க்கி அவர்கள் கைகளால் வெளியிட பரிசல் & நவீன் அதைப் பெற்றுக் கொள்ளவேண்டும். என்பது என் ஆசை. அது இந்த ஈ-புக் விஷயத்தில் நிறைவேறாமல் போய் விட்டது சற்றே வருத்தம். இருந்தாலும் என் குரு கார்க்கியின் வலைதளத்தில் இந்த புத்தகம் வெளியாவது எனக்கு பெருமையும் மகிச்சியையும் தருகிறது. ஆனால் கிரி அண்ணன் என் புத்தகத்திற்கு அணிந்துரை எழுதவேண்டும் என்று நினைத்திருந்தது நிறைவேறியிருப்பது மகிழ்ச்சியே.

ஒவ்வொரு கணமும் “டே.... ஒவ்வொருத்தருக்கும் கண்டிப்பா ஒரு திறமை இருக்கும். உனக்குள்ளயும் ஒரு திறம இருக்கும்” என்று 7/G ரெயின்போ காலனி சோனியா அகர்வால் போல எனைத் திட்டி இதையெல்லாம் செய்யத் தூண்டிக் கொண்டிருக்கும் அன்பு நண்பன் நட்ராஜிற்கு (@nattu_g) “நண்பன் போட்ட சோறு, நிதமும் தின்னேன் பாரு.. நட்பைக் கூட கற்பைப் போல எண்ணுவேன்” என்ற தளபதி பட பாடலை டெடிகேட் செய்து உங்களனைவருக்கும் நன்றிகூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.


இது குறித்த கார்க்கியின் வலைப்பதிவு: http://www.karkibava.com/2012/03/blog-post_26.html
என் ட்வீட்டுகளை ஈ-புத்தகமாக பெற : http://www.mediafire.com/?k4d3cuaznmsl4ml 

9 comments:

கார்க்கி said...

All the very best arjun!!

சத்யா said...

உங்க நட்பு வட்டத்துல நானும் இருக்கிறேன் என்பது, மிகப் பெரிய சந்தோசத்தை எனக்கு அளிக்கிறது

Prabu Krishna said...

வாழ்த்துகள் நண்பா. டவுன்லோட் செய்துள்ளேன்.

amas said...

A very good effort! What touched me most is the importance you have given for friendship. I admire you for that. Twitter is a very good tool for self improvement if used properly. I don't have to say how well you have used it :-) Kudos to you!
amas32

v v Dilli said...

வாழ்த்துக்கள் தல..

Giri Ramasubramanian said...

சூப்பரோ சூப்பர்!

வாழ்த்துகள்!

Very happy for you!

ப.செல்வக்குமார் said...

வாழ்த்துகள் மச்சி :))) மிக்க மகிழ்ச்சியா இருக்கு. படிச்சிட்டு வரேன் :)))

அன்புடன் அருணா said...

Good Efforts!

meerantj said...

தமிழ் ட்விட்டர் வரலாற்றில உங்க இடம் நிலையானது. அதற்கான அத்தாட்சியா இது இருக்கும்னு நம்புறேன். மென் மேலும் எழுதுக. தொடர்ந்து பல தொகுப்புகள் வெளியிடுங்க. புதிதாக சந்துக்கு வரும் பலரின் எழுத்து மேம்பட, திறமை வெளிப்படவும் உங்களின் புத்தகம் நல்ல ஊக்கமாக இருக்கும்.