முகமூடிநேற்றிலிருந்து எங்கு திரும்பினாலும் முகமூடி – சோடாமூடி என கிழி கிழி என கிழிக்கிறார்கள். தமிழ்நாட்டுல சூப்பர்மேன் படத்துலயும், சூப்பர்ஸ்டார் படத்துலயும் கதையோ லாஜிக்கோ எதிர்பார்க்கக் கூடாது. அப்படி எதிர்பார்த்து படத்துக்குப் போனது யார் குற்றம்? எல்லாத் தடவையும் உலகப் படங்களை மெருகேற்றி தமிழில் திரையாக்கும் மிஷ்கின், இம்முறை ஒரு பழைய தமிழ் படத்தையே அவர் பாணியில் மெருகேற்றி அதில் பல ஆங்கிலப் படங்களை கலந்து கட்டி, அந்தப் பட டைரக்டர்கள் இப்படத்தைப் பார்க்கும்போது, அடச்சே, இதை இப்படி எடுத்திருக்கலாமோ என சொல்லுமளவு ஒரு படத்தை எடுத்திருக்கிறார்.


ரஜினியும், ஜெய்சங்கரும் நடித்த “பாயும் புலி” படத்தை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். இரண்டு பேரும் சண்டை பயின்று மாஸ்டர் ஆகி வெளியே செல்வார்கள், ஜெய்ஷங்கர் கெட்டவனாகி விடுவார். ரஜினி நல்லவனாகி அவரை கொல்லுவார். இதே கதைதான் முகமூடியிலும். ஆனால் ஜெய்ஷங்கரை பழி வாங்க முடியாமல் ரஜினி தனக்குத் தெரிந்த குங்புவை(குஷ்பு அல்ல) ஜீவாவுக்கு சொல்லிக் கொடுக்கிறார். ஜீவா வில்லனை கொல்லுகிறார்.


கண்ணதாசன் காரைக்குடி டைப் சாங், ஸ்ட்ரீட் லைட் சீன், நரேன், நண்பர்களாக வரும் நடிகர்கள் என மிசுகின்தனம் இதுலயும் இருக்கு. குங்பு கத்துகிட்டு ஊர்ல சும்ம்மா சுத்திகிட்டு இருக்கும் ஜீவாவை மூஞ்சியில் சென்ட் அடித்து போலீசில் மாட்டி விடுகிறார் ஹீரோயின். மறுபடி ஒரு முறை சண்டை போடும்போது ஸ்லோமோஷனில் (டோன்ட் மிஸ் இட்) ஓடி வந்து அடிக்கிறார். பின் சீட்டிலிருந்து வந்த கமென்ட் “மச்சி, இவ கண்டி இவ்ளோ திமிரா இருந்தா புடிச்சு மேட்டர் முடிச்சிருக்க மாட்டாங்க?”. அப்புறம் தன் பேட்பாய் இமேஜை மாற்ற முகமூடி ஆகி கதை எங்கெங்கோ போய் சூப்பர் ஹீரோ ஆகிறார் ஜீவா.


நாசர் போலீஸ் கமிஷனராக வருகிறார். கொள்ளையடிப்பவர்கள் பணத்தை கொள்ளை அடிப்பதில்லை, சீரியல் நம்பர் வெச்சு கண்டு பிடிச்சிடுவாங்க எனும் டெக்னிக்கை சொல்லும்போது தியேட்டரில் அப்ளாஸ்(??). இவ்வாண்டில் நான்-ஈ சுதீப்பிற்குப் பிறகு நரேன் சிறந்த வில்லனாக இதில் கலக்கியிருக்கிறார். ஆனாலும் ஜோக்கரை இமிடேட் செய்ததெல்லாம் ஓவருங்கோ! க்ளைமாக்ஸ் – பழைய கராத்தே கிட்’ல சுட்டிருக்காங்க.

என்னமோ தமிழ்ல உலகப் படம் மட்டும்தான் வர்ற மாதிரியும், அதுல மிசுகின் கொஞ்சம் சொதப்பிட்ட மாதிரியும் என்னா திட்டு திட்ராய்ங்க. இரும்புக்கை மாயாவி, ரிவால்வர் ரீட்டா... காமிக்ஸ் எல்லாம் படிக்கும்போது ஏத்துக்க முடியுதில்ல அப்புறம் ஏன் முகமூடிய ஏத்துக்க முடியலைன்னு கேக்குறேன். அநியாயத்த தட்டிக்கேட்க, மக்களைப் பாதுகாக்க எவனாவது வரமாட்டானா என காத்திருக்க வேண்டியது அப்படி குங்பு தெரிந்த வேலாயுதமாய் ஒருத்தன் வந்தால் கிண்டலடிக்க வேண்டியது. நியாயமான்னு கேக்குறேன். முகமூடி சோடாமூடின்னு பேட்டி குடுத்துட்டு தானே அவரு படமே எடுத்தாரு. அவரு நேர்மைய பாராட்ட வேண்டாமான்னு கேக்குறேன். ஆமாப்பா, பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணும்னு சொல்றவுங்க பேட்மேன், ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், வேலாயுதம்னு பாத்துக்கங்க. தீப்பந்தம் போதும்னு சொல்றவங்க மட்டும் முகமூடி பாருங்க.


மிஷ்கின் நாட் அட் ஹிஸ் பெஸ்ட் தான். ஆனாலும், புத்திசாலி, அறிவுஜீவி, இன்டலெக்சுவல் எனும் நம் (இணைய) முகமூடியை கழட்டி வைத்து விட்டு பார்த்தால் முகமூடி அங்கிளை நமக்கும் பிடிக்கும்.6 comments:

amas said...

Excellent review! :-)

amas32

DrTRM said...

Ok ! Let's wait n see !
Today Hindu also deal the same

கோவை நேரம் said...

நல்ல விமர்சனம்

arunvetrivel said...
This comment has been removed by the author.
arunvetrivel said...

உன்மையான , வித்தியாசமான விமர்சனம் இது. உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு நண்பரே.

Prabu Krishna said...

இன்னும் படம் பார்க்கவில்லை. இருப்பினும் உங்கள் விமர்சனம் அருமை.