அன்புள்ள அதிகாரிக்கு...


அன்புள்ள காவல்துறை உயரதிகாரிக்கு,

நீங்கள் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். வள்ளுவநாட்டில் தங்களைப்போன்ற உயரதிகாரிகளுக்கு எந்தவிதமான நலக்கேடுகளும் இருக்க வாய்ப்பில்லை. ஐயா, நான் ஒரு புகார் அளிக்க தங்களைக் காண வந்தபோது தாங்கள் வேலைத் திரக்கில் இருப்பதாகச் சொல்லி என்னை அனுப்பி விட்டார்கள். ஒருமுறை இருமுறை அல்ல பலமுறைகள். சாதாரண மக்கள் என்னைப்போல் உயரதிகாரிகளைப் பார்ப்பது சாத்தியமில்லை இந்த நாட்டில் என்று உங்கள் உள்மனசு இப்போது சொல்லிக் கொண்டிருக்கலாம். அதனிடம் திரும்பச் சொல்லுங்கள் நான் சாதாரண மனிதன் அல்ல ஓர் எழுத்தாளன் என்று.

ஐயா முதலில் என்னைப்பற்றி சொல்லி விடுகிறேன். அப்போதுதான் என் புகாரும் வழக்கும் உங்களுக்குத் தெளிவாக விளங்கும். வள்ளுவநாட்டில் கொண்டாடப்படும் மிக முக்கியமான இரு-மொழி எழுத்தாளர் ஒருவர் “கண்ணே, உன்னைக் காணும்போது என் இளமையில் என்னைக் கண்டது போலே இருக்கிறதடா” என்றும்,  வள்ளுவநாட்டிலிருந்தே பிரெஞ்சுப்புரத்சி செய்யும் மற்றொரு எழுத்தாளர் “இவன் தான் என் எழுத்துலக வாரிசு” என்றும், உலக சினிமா, இலக்கியம், ஓவியம் இன்னபிற கலைகளையும் கரைத்துக் குடித்த மற்றொரு புகழ்பெற்ற எழுத்தாளர் “தமிழ் இலக்கிய உலகின் அடுத்த விடிவெள்ளி பிறந்து விட்டது” என்றும் என்னைப் பற்றி பதிவெழுதி வெளியிட சமயம் பார்த்து டிராஃப்ட்டில் வைத்துக் கொண்டிருக்கும் அளவு முக்கிமானவன் ஐயா நான்.

என்ன ஐயா அப்படிப் பார்க்கிறீர்கள். என்னைத் தெரியவில்லையா? என்னிடம் ஏதேனும் கேள்விகள் உள்ளனவா? கேளுங்கள்.... கேட்டீர்களா? இந்தக் கேள்வியை மட்டும் என் நண்பன் சித்திரபுத்தனிடம் கேட்டிருந்தால் உங்களை உண்டு இல்லை என்றாக்கி இருப்பான். நீங்கள் எப்பேர்ப்பட்ட அதிகாரியாக இருந்தாலும் அவனுக்குக் கவலை இல்லை. “என்னடா நான் எப்பேர்ப்பட்ட அதிகாரி என்னிடமே திமிராய்ப் பேசுகிறானே?” என்றுதானே நினைக்கிறீர்கள். உங்களுக்கு நான் ஒரு எழுத்தாளன் என்று புரியவைப்பதற்கான ஒரு சிறுமுயற்சி ஐயா இது. தமிழில் வாராத்திர பத்திரிகைகளில் உங்கள் கதையை கண்டதே இல்லையே? என்று தானே கேட்டீர்கள். உண்மையை சொல்லப்போனால் உமது இலக்கிய ஞானத்தைக் கண்டு சிலிர்க்கிறேன் ஐயா. இருந்தாலும், நாம் எந்த மாதிரியான சூழலில் வாழ்கிறோம்? வாராந்திர சஞ்சிகைகளில் கட்டுரைத்தனமான ஒரு கதை பிரசுரமாகி வந்தால் மட்டுமே எழுத்தாளன் என்று ஏற்றுக் கொள்ளும் இந்த சூழலை நினைத்தால் மிகக் கஷ்டமாக இருக்கிறது. பேசாமல் எஸ்பந்யோல் போய் விடலாமென்று கூட தோன்றுகிறது ஐயா.

இந்தக்கடிதத்தை எழுதுவதற்கான நோக்கம் இதுதான் ஐயா. எனக்கு ஒரு பிரச்சினை. அதை நீங்கள்தான் தீர்க்க முடியும். உங்களால் மட்டுமே அதற்கு ஒரு தெளிவு சொல்ல முடியும். அதிலுள்ள நெளிவு சுளிவுகளை ஆராய்ந்து குறைந்தபட்சம் எனக்கொரு நல்ல வழி சொல்லுவீர்கள் என்றே இந்த மடலை எழுதுகிறேன். பிரச்சினை பின்வருமாறு.

ஒரு நல்ல ஒரு காதல் கதை எழுத சமயம் பார்த்து குறிப்பெடுத்து பாதி முக்கால் வாசி எழுதி முடித்த களைப்பில் உறங்கிப் போனேன் நாள் கிழமை தெரியாத ஏதோ ஒரு நாளில். காலை எழுந்து பார்த்தால் கதையைக் காணவில்லை. என்னடா இவன் கிணற்றைக் காணவில்லை என்பது போல சொல்லுகிறானே, ஒருவேளை நம்மைக் கதையெழுத சொல்லிவிடுவானோ? என்றுதானே நினைக்கிறீர்கள். வள்ளுவநாட்டில் ஒருநாள் முதல்வர் கூட ஆகிவிடலாம், ஆனால் ஒரே நாளில் எழுத்தாளன் ஆவது மிகச் சிரமமய்யா. அந்தக் கஷ்டம் தங்களுக்கு வராதிருக்க அந்த அகிலாண்டேஸ்வரியை பிரார்தித்துக் கொள்கிறேன்.

கதையைக் காணவில்லை, திரும்ப எழுதுவதில் எனக்கொன்றும் பிரச்சினை இல்லைதான், இருந்தாலும் நடந்தது என்னவென்று தங்களிடம் சொல்ல வேண்டுமே. நான் உறங்கிப்போன சமயம், என் தங்கை அந்தக் கதையை கல்லூரிக்கு எடுத்துச் சென்றிருக்கிறாள். “பிறகென்ன, அந்த கதையை அவள் தோழி வாசித்திருப்பாள். உன் தங்கையிடம் உன் அலைபேசி எண் வாங்கி உனக்கு அழைத்து காதல் வயப்பட்டிருப்பாள்” என்பதுதான் தங்களின் தற்போதைய புன்னகைக்கு அர்த்தம் எனப் புரிகிறது ஐயா. தமிழ்ச் சூழல் சினிமா பார்த்து எவ்வளவு கெட்டுப் போயிருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி. மேலும் இந்தத் தருணத்தில் என் ஆற்றாமையும் சொல்லிவிடத் தோன்றுகிறது ஐயா. இப்போதெல்லாம் பெண்கள் அப்கிரேட் ஆகி விட்டார்கள். கவிதைக்கெல்லாம் மயங்குவதே இல்லை. மேலும் இப்போதெல்லாம் யார் சார் எழுத்தாளனை காதலிக்கிறார்கள்?

அன்று கல்லூரியில் நடக்கவிருந்த கதைப் போட்டிக்காக எனது கதையை எடுத்துக் கொண்டுபோய் அவள் பெயரில் கொடுத்துவிட்டாள் என்தங்கை. ஏதோ அந்த போட்டிக்கான நடுவர் உங்களைப்போலவே கொஞ்சம் இலக்கியவாதி போல. என் கதைக்கு முதல் பரிசு ஐயாயிரம் பரிசை அறிவித்து விட்டார். ஒரு நோபல் பரிசுக்கான இலக்கியத்தை வெறும் ஐயாயிரத்திற்கு விற்றது எனக்கு சுரீரென்றாலும் அப்போதைய சிக்கலில் அது பெரிய தொகையே. தாய்க்கு அடுத்ததாக தங்கைகளே உலகில் நல்லவர்கள், அதனால்தான் எழுதப்படாத சாசனப்படி பரிசுத் தொகையில் பெரும்பங்கை எனக்குக் கொடுத்து விட்டாள். அவளுக்குத் தேவை அவள் பெயரில் ஒரு நற்சான்றிதழ் மட்டுமே.

இந்தச் சமயத்தில் என் மனக்குமுறலை உங்களிடம் சொல்லியே ஆகவேண்டும். இப்படித்தான் என் சின்னஞ்சிறு படைப்புகள் சிலவற்றை வாராந்திர பத்திரிகைகளுக்கு அனுப்பினேன் வேறொரு பெயரிட்டு. அவர்களும் அதை பிரசுரித்து இங்கே சொல்ல கூச்சப்படும் ஒரு தொகையை சன்மானமாக அனுப்பினார்கள். அத்தொகை இரண்டு நாட்களுக்கான சிகரெட்டுக்குத்தான் போதுமானதாக இருக்கும். ஆனால் பாருங்கள் கல்லூரியில் பரிசோ ஐயாயிரம். மாதவன் நடித்த தம்பி படம் பார்த்திருக்கிறீர்களா ஐயா? அதில் வரும் மாதவன் போல “நான் இப்ப என்ன செய்ய?” என்று கத்தவேண்டும் போல் இருக்கிறது. மற்ற மனுக்களைப் போலல்லாமல், இக்கடிதத்தை நீங்கள் பொறுமையாக படித்திருப்பீர்கள் என்றால் இச்சமயம் உங்களுக்குள் ஒரு கேள்வி வரும். அதை தீர்க்கவேண்டியது என் கடமை. “பத்திரிகையில் வந்தால்தான் எழுத்தாளனா என்றெல்லாம் பேசினானே, இப்போது பத்திரிக்கை தரும் சன்மானம் குறைவு என்று புலம்புகிறானே?” என்றுதானே எள்ளி நகைக்கிறீர்கள். இப்படிக் கூட மாற்றிப்பேசவில்லை என்றால் என்னை இலக்கியவாதி என்று எப்படி ஏற்றுக் கொள்வீர்கள் நீங்கள். மேலும், இது உங்களுக்கு புதிதாகப் படுமாயின், நீங்கள் இன்னும் தமிழிலக்கிய சூழலை நன்கு அறியாதவர் என்றே பொருள்படும்.

பத்திரிகைகளை மாற்றமுடியாது தான் இருந்தாலும் என் சிகரெட் செலவுக்கு அது போதுமாயிருக்கிறது. இருந்தாலும் எனக்கு வேறொரு சிந்தனை தோன்றி இருக்கிறது ஐயா. வள்ளுவநாட்டின் மொத்த கல்லூரி மாணவர்களுக்கும் போட்டிகளின்போது கதை எழுதி சப்ளை செய்யலாமென்று இருக்கிறேன். ஒரு கதைக்கு ரூபாய் ஆயிரம் என்று விலையும் நிர்ணயித்து இருக்கிறேன். வரும் பரிசுத்தொகையை அவர்களுடன் சரிபாதியாக பிரித்துக் கொள்ளவும் முடிவெடுத்திருக்கிறேன். இதனால் நான் சொல்ல வருவது, கதையைக் கொடுத்தாலும் அதன் காப்புரிமை, அதாவது புத்தககண்காட்சி வரும்போது புத்தகமாக போட்டு காசு பார்க்கும் உரிமை எனக்கு மட்டுமே. இதில் ஏதாவது சட்டசிக்கல் வருமா என அறிய ஆவல் ஐயா. கதையை வாங்கிச் சென்றவர்கள் கதைக்கு உரிமை கொண்டாடினால் என்ன செய்யலாம் என்பது போன்ற என் ஐயங்களுக்கு தீர்வு சொல்லுவீர்கள் என காத்திருக்கிறேன்.

இப்படிக்கு,
வள்ளுவநாட்டின் தன்னிகரில்லா எழுத்தாளன்
சித்தன்நம்பி

சென்னை புத்தக கண்காட்சி 2013 – நான் வாங்கிய புத்தகங்கள்


மிகவும் எதிர்பார்த்திருந்த 2013 புத்தக கண்காட்சிக்கு சென்று வந்துவிட்டேன். கடந்த புத்தக கண்காட்சியில் + அதற்குப்பிறகு வாங்கிய புத்தகங்களில் பெரும்பான்மையை படித்து முடித்திருந்தேன். ஆர்வக்கோளாறில் வாங்கிய அரசியல், வரலாறு சம்மந்தப்பட்ட சில புத்தகங்களைத் தவிர. கடந்த வருடத்தில் என்னளவில் நிறைய வாசித்ததாய் உணர்கிறேன். இருந்தாலும், கற்றது கடுகளவே. இன்னும் கற்க வேண்டியது நிறைய நிறையவே.

முன்பெல்லாம் கவிதைகள் என்றாலே அலர்ஜி எனக்கு. நண்பர்கள் @WriterCSK & @Lathamagan இருவரைப் பார்த்து கவிதைகள் வாசிக்க ஆசைப்பட்டேன். இருந்தாலும் உள்ளூர ஒரு பயம், உப்புக்கத்தி, சோப்புத் தண்ணீர் என்றெல்லாம் வார்த்தை ஜாலங்கள் இருந்தால் பிறகு என் கதி ஙே! இந்நிலையில், எல்லோருக்கும் வாசிப்பில் ஒரு மேஜிக்கல் Moment நிகழும். கடந்த வருடம் அது நிகழ்ந்தது எனக்கு. நண்பர் @Kabulivala கோவை புத்தக கண்காட்சியில் வாங்கி அனுப்பிய “நீராலானது – மனுஷ்யபுத்திரன்” கவிதை புத்தகம்தான் அந்த மேஜிக்கல் Moment ற்கு காரணம். திரும்பத் திரும்ப அந்த புத்தகத்தையே மீள் வாசிப்பு செய்தேன். நான் உணர்ந்ததை வார்த்தைகளில் சொல்லத் தெரியவில்லை. வெறும் பொழுதுபோக்கையும் தாண்டி வாசிப்பு என்னுள் கலந்துவிட்டதாய் உணர்கிறேன். எனவே இந்த வருடம் கவிதை வருடமெனக்கு. கவிதைகள் பரிந்துரை செய்த லதாமகன், சிஎஸ்கே இருவருக்கும் என் நன்றிகள். இந்த வருடம் புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்...

கவிதைகள்
 1. இதற்கு முன்பும் இதற்கு பின்பும் – மனுஷ்யபுத்திரன்
 2. இடமும் இருப்பும் – மனுஷ்யபுத்திரன்
 3. அதீதத்தின் ருசி – மனுஷ்யபுத்திரன்
 4. பசித்த பொழுது – மனுஷ்யபுத்திரன்
 5. நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள் – நகுலன் (தொகுப்பு: யுவன் சந்திரசேகர்)
 6. இரவுமிருகம் – சுகிர்தராணி
 7. காமத்திப்பூ – சுகிர்தராணி
 8. அவன் எப்போது தாத்தாவானான் – விக்ரமாதித்யன்
 9. தற்காலச் சிறந்த கவிதைகள் – தொகுப்பு – விக்ரமாதித்யன்
 10. நட்புக்காலம் – அறிவுமதி
 11. அனுபவ சித்தனின் குறிப்புகள் – ராஜா சந்திரசேகர் (@raajaacs)
 12. பிரமிள் கவிதைகள் – பிரமிள் (பதிப்பு: கால சுப்பிரமணியம்)
 13. பித்தன் – அப்துல் ரகுமான்
 14. சிவாஜி கணேசனின் முத்தங்கள் – இசை
 15. நீரின்றி அமையாது உலகு – மாலதி மைத்ரி
 16. முடியலத்துவம் – செல்வேந்திரன்
 17. புதிய அறையின் சித்திரம் – மண்குதிரை
 18. பச்சை தேவதை – சல்மா
 19. தீக்கடல் – நர்சிம்
 20. கலாப்ரியா கவிதைகள் – கலாப்ரியா
 21. மீனுக்குள் கடல் – பாதசாரி
 22. கூர்தலறம் – TKB காந்தி
 23. காமக்கடும்புனல் – மகுடேஸ்வரன்
 24. நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள் : புதிய மலையாள கவிதைகள் – தமிழில் – ஜெயமோகன்

நாவல்கள் & சிறுகதைகள்

நாவல்களும் சிறுகதைகளும் தரும் உணர்வே தனி. ஆதலால், அவற்றையும் வாங்கியிருக்கிறேன்.
 1. நாடோடித்தடம் – ராஜ சுந்தரராஜன்
 2. மௌனி படைப்புகள் – மௌனி
 3. காகித மலர்கள் – ஆதவன்
 4. கு.அழகிரிசாமி கதைகள் – தொகுப்பு – கி.ராஜநாராயணன்
 5. மறைவாய் சொன்ன கதைகள் – கி.ராஜநாராயணன்
 6. ஒரு புளியமரத்தின் கதை – சுந்தரராமசாமி
 7. அழியாத கோலங்கள் – கீரனூர் ஜாகிர்ராஜா
 8. பகடையாட்டம் – யுவன் சந்திரசேகர்
 9. தூயோன் – கோபிகிருஷ்ணன்
 10. டேபிள் டென்னிஸ் – கோபிகிருஷ்ணன்
 11. அழகம்மா – சந்திரா (@powshya)
 12. பூமிக்குள் ஓடுகிறது நதி – சு.வேணுகோபால்
 13. திசையெல்லாம் நெருஞ்சி – சு.வேணுகோபால்
 14. அன்பின் வழியது உயிர் நிழல் – பாதசாரி
 15. பேய்க்கரும்பு – பாதசாரி
 16. வட்டியும் முதலும் – ராஜு முருகன்

மொழி பெயர்ப்புகள்

மலையாளம் ஓரளவு பேசத் தெரிந்தாலும், எழுத்துக் கூட்டித்தான் படிக்கத்தெரியும். எனவே கிடைத்த மொழிபெயர்ப்புகளில் சிலவற்றை வாங்கியிருக்கிறேன். மலையாள வாசித்தலையும் இந்த வருடம் துரிதமாக்க வேண்டும்.

 1. தோட்டியின் மகன் – தகழி சிவசங்கரன் பிள்ளை – சுந்தர ராமசாமி
 2. பாத்துமாவின் ஆடு – வைக்கம் முகமது பஷீர் – குளச்சல் மு.யூசுப்
 3. பால்யகால சகி - வைக்கம் முகமது பஷீர் – குளச்சல் மு.யூசுப்
 4. மதிலுகள் - வைக்கம் முகமது பஷீர் – குளச்சல் மு.யூசுப்
 5. எரியும் பனிக்காடு – பி.எச் டேனியல் – இரா. முருகவேள்


கட்டுரைகள் & பிற:
 1. ஜாலியா தமிழ் இலக்கணம் – இலவசக் கொத்தனார்
 2. ஹைக்கூ ஒரு அறிமுகம் – சுஜாதா
 3. அன்புள்ள கி.ரா.வுக்கு – தொகுப்பு கி.ராஜநாராயணன்
 4. சின்மயி விவகாரம் மறுபக்கத்தின் குரல் – மாமல்லன்


கோணல் பக்கங்கள் 1,2,3 வாங்க நினைத்தேன். பட்ஜெட் போதவில்லை. இருந்தாலும் எனக்காக என் மச்சி @jill_online வாங்கி விட்டார். வாங்க நினைத்திருந்ததில் தவறவிட்டவை கோபிகிருஷ்ணன் படைப்புகள், தோல், அஞ்ஞாடி.... இன்னும் பல.

இந்த புத்தக கண்காட்சி எனக்கு மற்றொரு மகிழ்ச்சியையும் தந்திருக்கிறது. கிழக்கின் புதிய 'அலமாரி' புத்தக விமர்சன பத்திரிகையில் ஆம்னிபஸ்'சில் நான் எழுதிய இரண்டு விமர்சனங்கள்  பிரசுரமாகி இருக்கிறது. நான் எழுதியதை பத்திரிகையில் காண்பது இதுவே முதல் முறை :))

கற்றதும் பெற்றதும் 2012


 1. 18வது அட்சக்கோடு அசோகமித்திரன்
 2. அம்மா வந்தாள் தி.ஜானகிராமன்
 3. கோபல்ல கிராமம் கி.ராஜநாராயணன்
 4. கோபல்லபுரத்து மக்கள் கி.ராஜநாராயணன்
 5. சூடிய பூ சூடற்க நாஞ்சில் நாடன்
 6. பள்ளிகொண்டபுரம் நீல.பத்மநாபன்
 7. மணல் உள்ள ஆறு கல்யாண் ஜி
 8. நிலா பார்த்தல் கல்யாண் ஜி
 9. இன்னொரு கேலிச் சித்திரம் கல்யாண் ஜி
 10. பெயர் தெரியாமல் ஒரு பறவை வண்ணதாசன்
 11. திசை காட்டிப் பறவை பேயோன்
 12. பேயோன் 1000 – பேயோன்
 13. உலோகம் ஜெயமோகன்
 14. அனல்காற்று – ஜெயமோகன்
 15. குற்றியலுலகம் பா.ராகவன்
 16. தேகம் - சாரு நிவேதிதா
 17. ட்விட்டர் வெற்றிக்கதை என்.சொக்கன்
 18. மரியாதையாய் வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே – சொக்கன்
 19. உயிர்ச்சொல் கபிலன் வைரமுத்து
 20. வான்கா அஜயன் பாலா
 21. அழிக்கப் பிறந்தவன் யுவகிருஷ்ணா
 22. எக்சைல் – சாரு நிவேதிதா
 23. காமரூபக் கதைகள் – சாரு
 24. மஞ்சள் வெயில் - யூமா வாசுகி
 25. மூங்கில் மூச்சு – சுகா
 26. கருவாச்சி காவியம் – வைரமுத்து
 27. I too had a love story – Ravindrasingh
 28. Life is what you make it – Preethi shenoy
 29. ராசலீலா – சாரு
 30. சிதம்பர நினைவுகள் – பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, ஷைலஜா
 31. கணையாழியின் கடைசிபக்கங்கள் – சுஜாதா
 32. ஆதலினால் காதல் செய்வீர் – சுஜாதா
 33. ஆ – சுஜாதா
 34. விபரீதக் கோட்பாடு – சுஜாதா
 35. தொட்டால் தொடரும் – பட்டுக்கோட்டை பிரபாகர்
 36. எட்றா வண்டியெ - வாமு கோமு
 37. இல்லாதவர்கள் – ஜெயகாந்தன்
 38. ஓ, அமேரிக்கா – ஜெயகாந்தன்
 39. கதைநேரம் – பாலுமகேந்திரா
 40. ஒருதுளி துயரம் – சு. வேணுகோபால்
 41. பரத்தைக் கூற்று – சிஎஸ்கே
 42. தேவதை புராணம் – சிஎஸ்கே
 43. மகாராஜாவின் ரயில்வண்டி – அ.முத்துலிங்கம்
 44. பசித்த மானிடம் – கரிச்சான் குஞ்சு
 45. பல்லக்குத் தூக்கிகள் – சுந்தர ராமசாமி
 46. வெட்டுப்புலி – தமிழ்மகன்
 47. எம்.ஜி.ஆர் கொலைவழக்கு – ஷோபாசக்தி
 48. இரவுக்கு முன் வருவது மாலை – ஆதவன்
 49. என் பெயர் ராமசேஷன் – ஆதவன்
 50. அடியாள் – ஜோதி நரசிம்மன்
 51. கலைவாணி, ஒரு பாலியல் தொழிலாளியின் கதை – ஜோதி நரசிம்மன்
 52. நீராலானது – மனுஷ்யபுத்திரன்
 53. மாயமில்லை, மந்திரமில்லை – காப்ரியல் கார்ஸியா மார்குவேஸ் – வெங்கடேஷ்
 54. சித்திரங்களின் விசித்திரங்கள் – எஸ்.ரா
 55. டேபிள் டென்னிஸ் – கோபிகிருஷ்ணன்
 56. அந்தக் கதவு மூடப்படுவதில்லை – பிரபஞ்சன்
 57. சூரியன் தகித்த நிறம் – பிரமிள்
 58. அணிலாடும் முன்றில் நா.முத்துக்குமார்
 59. கிராமம் நகரம் மாநகரம் - நா.முத்துக்குமார்
 60. பட்டாம்பூச்சி விற்பவன் - நா.முத்துக்குமார்
 61. சேலையோரப் பூங்கா தபூ ஷங்கர்
 62. அடுத்த பெண்கள் கல்லூரி 5. கி.மீ தபூ ஷங்கர்
 63. எனது கறுப்புப் பெட்டி தபூ ஷங்கர்
 64. காதல் ஆத்திச்சூடி தபூ ஷங்கர்
 65. உன் பேச்சு கா..தல் தபூ ஷங்கர்
 66. பார்த்தால் சிணுங்கி தபூ ஷங்கர்
 67. மீனுக்குள் கடல் – பாதசாரி

மேலே உள்ள வரிசை, புத்தகங்களின் தரவரிசை பட்டியல் அல்ல. இவற்றுள்,

2012ல் என் வாசிப்பில் மிகச்சிறந்ததாக நான் கருதுவது சிதம்பர நினைவுகள் & மஞ்சள் வெயில்.