சென்னை புத்தக கண்காட்சி 2013 – நான் வாங்கிய புத்தகங்கள்


மிகவும் எதிர்பார்த்திருந்த 2013 புத்தக கண்காட்சிக்கு சென்று வந்துவிட்டேன். கடந்த புத்தக கண்காட்சியில் + அதற்குப்பிறகு வாங்கிய புத்தகங்களில் பெரும்பான்மையை படித்து முடித்திருந்தேன். ஆர்வக்கோளாறில் வாங்கிய அரசியல், வரலாறு சம்மந்தப்பட்ட சில புத்தகங்களைத் தவிர. கடந்த வருடத்தில் என்னளவில் நிறைய வாசித்ததாய் உணர்கிறேன். இருந்தாலும், கற்றது கடுகளவே. இன்னும் கற்க வேண்டியது நிறைய நிறையவே.

முன்பெல்லாம் கவிதைகள் என்றாலே அலர்ஜி எனக்கு. நண்பர்கள் @WriterCSK & @Lathamagan இருவரைப் பார்த்து கவிதைகள் வாசிக்க ஆசைப்பட்டேன். இருந்தாலும் உள்ளூர ஒரு பயம், உப்புக்கத்தி, சோப்புத் தண்ணீர் என்றெல்லாம் வார்த்தை ஜாலங்கள் இருந்தால் பிறகு என் கதி ஙே! இந்நிலையில், எல்லோருக்கும் வாசிப்பில் ஒரு மேஜிக்கல் Moment நிகழும். கடந்த வருடம் அது நிகழ்ந்தது எனக்கு. நண்பர் @Kabulivala கோவை புத்தக கண்காட்சியில் வாங்கி அனுப்பிய “நீராலானது – மனுஷ்யபுத்திரன்” கவிதை புத்தகம்தான் அந்த மேஜிக்கல் Moment ற்கு காரணம். திரும்பத் திரும்ப அந்த புத்தகத்தையே மீள் வாசிப்பு செய்தேன். நான் உணர்ந்ததை வார்த்தைகளில் சொல்லத் தெரியவில்லை. வெறும் பொழுதுபோக்கையும் தாண்டி வாசிப்பு என்னுள் கலந்துவிட்டதாய் உணர்கிறேன். எனவே இந்த வருடம் கவிதை வருடமெனக்கு. கவிதைகள் பரிந்துரை செய்த லதாமகன், சிஎஸ்கே இருவருக்கும் என் நன்றிகள். இந்த வருடம் புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்...

கவிதைகள்
 1. இதற்கு முன்பும் இதற்கு பின்பும் – மனுஷ்யபுத்திரன்
 2. இடமும் இருப்பும் – மனுஷ்யபுத்திரன்
 3. அதீதத்தின் ருசி – மனுஷ்யபுத்திரன்
 4. பசித்த பொழுது – மனுஷ்யபுத்திரன்
 5. நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள் – நகுலன் (தொகுப்பு: யுவன் சந்திரசேகர்)
 6. இரவுமிருகம் – சுகிர்தராணி
 7. காமத்திப்பூ – சுகிர்தராணி
 8. அவன் எப்போது தாத்தாவானான் – விக்ரமாதித்யன்
 9. தற்காலச் சிறந்த கவிதைகள் – தொகுப்பு – விக்ரமாதித்யன்
 10. நட்புக்காலம் – அறிவுமதி
 11. அனுபவ சித்தனின் குறிப்புகள் – ராஜா சந்திரசேகர் (@raajaacs)
 12. பிரமிள் கவிதைகள் – பிரமிள் (பதிப்பு: கால சுப்பிரமணியம்)
 13. பித்தன் – அப்துல் ரகுமான்
 14. சிவாஜி கணேசனின் முத்தங்கள் – இசை
 15. நீரின்றி அமையாது உலகு – மாலதி மைத்ரி
 16. முடியலத்துவம் – செல்வேந்திரன்
 17. புதிய அறையின் சித்திரம் – மண்குதிரை
 18. பச்சை தேவதை – சல்மா
 19. தீக்கடல் – நர்சிம்
 20. கலாப்ரியா கவிதைகள் – கலாப்ரியா
 21. மீனுக்குள் கடல் – பாதசாரி
 22. கூர்தலறம் – TKB காந்தி
 23. காமக்கடும்புனல் – மகுடேஸ்வரன்
 24. நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள் : புதிய மலையாள கவிதைகள் – தமிழில் – ஜெயமோகன்

நாவல்கள் & சிறுகதைகள்

நாவல்களும் சிறுகதைகளும் தரும் உணர்வே தனி. ஆதலால், அவற்றையும் வாங்கியிருக்கிறேன்.
 1. நாடோடித்தடம் – ராஜ சுந்தரராஜன்
 2. மௌனி படைப்புகள் – மௌனி
 3. காகித மலர்கள் – ஆதவன்
 4. கு.அழகிரிசாமி கதைகள் – தொகுப்பு – கி.ராஜநாராயணன்
 5. மறைவாய் சொன்ன கதைகள் – கி.ராஜநாராயணன்
 6. ஒரு புளியமரத்தின் கதை – சுந்தரராமசாமி
 7. அழியாத கோலங்கள் – கீரனூர் ஜாகிர்ராஜா
 8. பகடையாட்டம் – யுவன் சந்திரசேகர்
 9. தூயோன் – கோபிகிருஷ்ணன்
 10. டேபிள் டென்னிஸ் – கோபிகிருஷ்ணன்
 11. அழகம்மா – சந்திரா (@powshya)
 12. பூமிக்குள் ஓடுகிறது நதி – சு.வேணுகோபால்
 13. திசையெல்லாம் நெருஞ்சி – சு.வேணுகோபால்
 14. அன்பின் வழியது உயிர் நிழல் – பாதசாரி
 15. பேய்க்கரும்பு – பாதசாரி
 16. வட்டியும் முதலும் – ராஜு முருகன்

மொழி பெயர்ப்புகள்

மலையாளம் ஓரளவு பேசத் தெரிந்தாலும், எழுத்துக் கூட்டித்தான் படிக்கத்தெரியும். எனவே கிடைத்த மொழிபெயர்ப்புகளில் சிலவற்றை வாங்கியிருக்கிறேன். மலையாள வாசித்தலையும் இந்த வருடம் துரிதமாக்க வேண்டும்.

 1. தோட்டியின் மகன் – தகழி சிவசங்கரன் பிள்ளை – சுந்தர ராமசாமி
 2. பாத்துமாவின் ஆடு – வைக்கம் முகமது பஷீர் – குளச்சல் மு.யூசுப்
 3. பால்யகால சகி - வைக்கம் முகமது பஷீர் – குளச்சல் மு.யூசுப்
 4. மதிலுகள் - வைக்கம் முகமது பஷீர் – குளச்சல் மு.யூசுப்
 5. எரியும் பனிக்காடு – பி.எச் டேனியல் – இரா. முருகவேள்


கட்டுரைகள் & பிற:
 1. ஜாலியா தமிழ் இலக்கணம் – இலவசக் கொத்தனார்
 2. ஹைக்கூ ஒரு அறிமுகம் – சுஜாதா
 3. அன்புள்ள கி.ரா.வுக்கு – தொகுப்பு கி.ராஜநாராயணன்
 4. சின்மயி விவகாரம் மறுபக்கத்தின் குரல் – மாமல்லன்


கோணல் பக்கங்கள் 1,2,3 வாங்க நினைத்தேன். பட்ஜெட் போதவில்லை. இருந்தாலும் எனக்காக என் மச்சி @jill_online வாங்கி விட்டார். வாங்க நினைத்திருந்ததில் தவறவிட்டவை கோபிகிருஷ்ணன் படைப்புகள், தோல், அஞ்ஞாடி.... இன்னும் பல.

இந்த புத்தக கண்காட்சி எனக்கு மற்றொரு மகிழ்ச்சியையும் தந்திருக்கிறது. கிழக்கின் புதிய 'அலமாரி' புத்தக விமர்சன பத்திரிகையில் ஆம்னிபஸ்'சில் நான் எழுதிய இரண்டு விமர்சனங்கள்  பிரசுரமாகி இருக்கிறது. நான் எழுதியதை பத்திரிகையில் காண்பது இதுவே முதல் முறை :))

2 comments:

Anonymous said...

ஆகா. இத்தன வாங்கிட்டியா. நல்ல வித்தியாசமான ரசனை உனக்கு. கவிதை படிக்கவும் தனி ஆர்வம் வேணும். நெறைய இருக்கும் போல. :)

SHAN Shylesh said...

போய்ய்யா, நீ பாட்டுக்கு படிச்ச புத்தகம், வாங்கிய புத்தகமுன்னு போஸ்ட் போட்டு வெறுப்பேத்துற. உன் கூட டூ :)