சென்னை புத்தகக் கண்காட்சி 2014 – நான் வாங்கிய புத்தகங்கள்


நாவல்கள் & சிறுகதைத் தொகுப்பு
 1. ஆறாவடு – சயந்தன்
 2. சோளகர் தொட்டி – ச. பாலமுருகன்
 3. வாடிவாசல் – சி. சு. செல்லப்பா
 4. எல்லா நாளும் கார்த்திகை (தமிழ் & மலையாளம்) – பவா செல்லத்துரை
 5. உப்புக்கடலைக் குடிக்கும் பூனை – க. சீ. சிவக்குமார்
 6. கரும்புனல் – ராம்சுரேஷ் (@penathal)
 7. நவீனன் டைரி – நகுலன்
 8. நகுலன் கதைகள் – தொகுப்பு: காவ்யா
 9. பைத்திய ருசி – கணேசகுமாரன்
 10. மங்கலத்து தேவதைகள் – வா.மு. கோமு
 11. உப்பு நாய்கள் – லக்‌ஷ்மி சரவணக்குமார்
 12. 6174 – க. சுதாகர்
 13. ராஜீவ்காந்தி சாலை - விநாயகமுருகன்
 14. மஞ்சள் வெயில் (8வது முறையாக) – யூமா வாசுகி
 15. கூந்தப்பனை – சு. வேணுகோபால்
 16. சாயாவனம் – ச. கந்தசாமி
 17. கூளமாதாரி – பெருமாள் முருகன்
 18. நிழல் முற்றம் – பெருமாள் முருகன்
 19. மாதொருபாகன் – பெருமாள் முருகன்
 20. தலைமுறைகள் – நீல. பத்மநாபன்
 21. உயிர்த்தெழுதல் - விமலாதித்த மாமல்லன்
 22. விமலாதித்த மாமல்லன் கதைகள் - விமலாதித்த மாமல்லன்


மொழிபெயர்ப்புகள்
 1. தனிமையின் நூறாண்டுகள் – காப்ரியேல் மார்க்கேஸ்
 2. யானை காணாமலாகிறது – முரகாமி – சிபிச்செல்வன்
 3. காஃப்கா – சா. தேவதாஸ்
 4. அஸீஸ் பே சம்பவம் – அய்ஃபர் டுன்ஷ் – சுகுமாரன்
 5. சூதாடி – தஸ்தயேவ்ஸ்கி – ரா. கிருஷ்ணைய்யா
 6. அருவருப்பான விவகாரம் - தஸ்தயேவ்ஸ்கி – ரா. கிருஷ்ணைய்யா
 7. ஐரோப்பிய சிறுகதைகள் – க நா சு
 8. அன்புவழி – லாகர்விஸ்ட் – க நா சு
 9. கடல் முத்து – க நா சு
 10. பசி – நட்ஹாம்சன் – க நா சு
 11. குட்டியேடத்தி – எம் டி வாசுதேவன் நாயர் – குறிஞ்சி வேலன்
 12. சுமித்ர – கல்பட்டா நாராயணன் – கே வி ஷைலஜா
 13. யேசு கதைகள் – பால் சக்காரியா – கே வி ஜெயஸ்ரீ
 14. அன்டன் செக்கோவ் சிறுகதைகள் – எம் எஸ்
 15. காலவெளி – விட்டல் ராவ் – குப்புசாமி
 16. தூப்புக்காரி – மலர்வதி

கட்டுரைகள்
 1. மேதைகளின் குரல்கள் – தீபா
 2. எழுதும் கலை – ஜெமோ
 3. நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் – ஜெமோ
 4. ஜி. நாகராஜன் நினைவோடை - சுந்தர ராமசாமி


கவிதைகள்
 1. பரத்தையருள் ராணி – லீனா மணிமேகலை
 2. ஜென்மயில் – பிரம்மராஜன்
 3. இரவின் ரகசிய பொழுது – கோகுலக்கண்ணன்
 4. வெயில் தின்ற மழை – நிலாரசிகன்
 5. கே அலைவரிசை – முகுந்த் நாகராஜன்
 6. ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை – பொன். வாசுதேவன்
 7. அரைக்கணட்த்தின் புத்தகம் – சமயவேள்
 8. இசைக்குமிழி – ஹவி
 9. குரல்வளையில் இறங்கும் ஆறு – அய்யப்ப மாதவன்
 10. எனது மதுக்குடுவை – மாலதி மைத்ரி
 11. கனவின் உபநடிகன் – ஆத்மார்த்தி
 12. மோக்லியைத் தொலைத்த சிறுத்தை – லக்‌ஷ்மி சரவணக்குமார்
 13. என்றுதானே சொன்னார்கள் – சாம்ராஜ்
 14. நீர் அளைதல் – எம்டிஎம்
 15. தலைமறைவுக் காலம் – யவனிகா ஸ்ரீராம்
 16. நகுலன் கவிதைகள் – நகுலன்
 17. கவிதையின் கால்தடங்கள் – தொகுப்பு: செல்வராஜ்
 18. ஆத்மாநாம் படைப்புகள் – பதிப்பு: பிரம்மராஜன்
 19. மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன் – ரமேஷ் பிரேதன்
 20. எப்போதும் விடிந்துகொண்டிருக்கிறது – தேவதச்சன்
 21. நானிலும் நுழையும் வெளிச்சம் – அய்யனார் விஸ்வனாத்
 22. நத்தை போன பாதையில் – மிஷ்கின்
 23. பூனை எழுதிய அறை – கல்யாண்ஜி
 24. உளமுற்ற தீ – கலாப்ரியா
 25. பைத்தியக்காரியின் பட்டாம்பூச்சி – மனோ. மோகன்
 26. முகவீதி – ராசுரா
 27. என் பெயர் ஜிப்சி – நக்கீரன்
 28. களம் – காலம் – ஆட்டம் – சபரிநாதன்
 29. அந்தரக்கன்னி – லீனா மணிமேகலை
 30. குற்றத்தின் நறுமணம் – வெய்யில்
 31. என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக் குருவி – வா. மணிகண்டன்
 32. கண்ணாடிக்கிணறு – கடற்கரய்
 33. வெளிச்சத்தின் வாசனை – பா. தேவேந்திர பூபதி
 34. நீலி – மாலதி மைத்ரி
 35. சக்கரவாளக்கோட்டம் – ரமேஷ் பிரேம்
 36. கோடைகாலக் குறிப்புகள் – சுகுமாரன்
 37. அவரவர் கை மணல் – ஆனந்த் – தேவதச்சன்
 38. தொலைவிலிருக்கும் கவிதைகள் – சுந்தர ராமசாமி
 39. பாப்லோ நெரூதா கவிதைகள் - தமிழன்பன்
 40. மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் - கதிர்பாரதி
 41. கூவாத கோழி கூவியே தீரவேண்டும் – பொய்கையில் அப்பச்சன் - ராஜ்குமார்

இதிகாசங்கள்
 1. சிலப்பதிகாரம் - புலியூர்க் கேசிகன் தெளிவுரை
 2. வால்மீகி ராமாயணம் - அ. வே. நடராஜன்

பரிசல் பரிசளித்தவை
 1. எப்படி கதை எழுதுவது எகஎ - ரா. கி. ரங்கராஜன்
 2. எகஎ பயிற்சி புத்தகம் - ரா. கி. ரங்கராஜன்
 3. முதல் தனிமை - ஜே. பி. சாணக்யா

சம்ஸ்காரா, 365 பா, சொல்லக்கூசும் கவிதைகள், விமலாதித்த மாமல்லன் சிறுகதைகள் போன்றவற்றை காசில்லாமல் வாங்காமல் விட்டு வந்தேன். மேற்சொன்னவற்றில் 6174 & ராஜீவ்காந்தி சாலை போன்ற சிலவற்றை புத்தகக்கண்காட்சிக்கு முன்னரே வாங்கிவிட்டேன், இருந்தாலும் பட்டியலில் இணைத்துக் கொள்கிறேன். 

சென்ற வருடம் கவிதைகள் வாசிக்கவேண்டும் என்று விரும்பி வாசிக்க ஆரம்பித்தேன். நிறைய படிக்கும்போது நிறைய புரியவில்லை. ”இதுக்கு என்னங்க அர்த்தம்?” என்று கேட்டு ”எல்லாத்துக்கும் அர்த்தம் தேடாத, இன்னொரு தடவ படிச்சா புரியும். புரியலேன்னா ஸ்கிப் பண்ணிடு” என்று பல திட்டுகளும், அட்வைஸுகளும் லதாமகனிடமிருந்து வாங்கிக் கடந்திருக்கிறேன். கடந்த வருடம் ஒரு நல்முயற்சியாக கம்பராமாயணம் படிக்க ஆரம்பித்ததில் சங்க இலக்கியம் படிக்க ஆர்வம் & ஆசை வந்துவிட்டது. இந்த வருடம் பெரும்பாலும் கவிதைகளும் சங்க இலக்கியமும் படிக்க உத்தேசித்திருக்கிறேன். மலையாள வாசிப்பையும் அதிகப்படுத்த எண்ணியிருக்கிறேன். “மச்சி அந்த புக் படிச்சேன்.. செம்ம. கண்டிப்பா படி” என்று புத்தக அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் லதாமகன், கருப்பையா, கார்கி மற்றும் அதிஷாவுக்கும் நன்றிகள். நல்லாருப்போம்.. நல்லாருப்போம். எல்லாரும் நல்லாருப்போம்.

இதெல்லாம் ஒரு பந்தாவோ பவிசோ இல்லை. வருடாவருடம் லதாமகன் போடும் பட்டியலும், போன வருடம் சிஎஸ்கே போட்ட பட்டியலும், இந்த வருடம் விநாயகமுருகன், ஆத்மார்த்தி போட்டிருந்த பட்டியலும்/பதிவுகளும் புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பதில் நிறையவே உதவின. இதேபோல இந்தப்பதிவும் வேறு யாருக்காவது உதவலாம். 

2 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இதெல்லாம் ஒரு பந்தாவோ பவிசோ இல்லை.

இதேபோல இந்தப்பதிவும் வேறு யாருக்காவது உதவலாம்//

எனக்கு உதவும்!
லதாமகன் வாழ்க!

enRenRum-anbudan.BALA said...

நிறைய பேருக்கு உதவும்! உங்கள் டிஸ்கியே தேவையில்லை :) நன்றி.